இருபதாண்டு திருமண வாழ்வு
[ பலதார மணம் அருமருந்து. உடல் வலிமை, பண வலிமை மிக்கவர் இரண்டாவது, மூன்றாவது திருமணத்துக்கு ஒப்ப வேண்டும். வெட்கப்பட ஏதுமில்லை. இல்லையேல் கள ஒழுக்கம் புரளும். தவறான பாலியல் உறவுகள் பரவும். தோல், மர்ம உறுப்பு நோய்கள் வாழ்வை கண்ணியத்தை சீரழிக்கும்.
ஆண் சம்பாதிக்க வேண்டும். மகளிர் பூரண நிறைவுடன் குடும்ப பராமரிப்பை ஏற்கலாம். இருவரும் வெளியே சென்று சம்பாதிப்பது, வலம் வருவது குடும்ப நிம்மதியை கெடுக்கும்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. பரக்கத் வரும். சுகம் வாழ்க்கையில் கிட்டும். குடும்பக் கட்டுப்பாடு, சிறுகுடும்ப யோசனை மேற்கத்திய தரித்திரச் சித்தாந்தம். இறைநம்பிக்கை பாழாகும். இறை பாதுகாப்பிலிருந்து வெளியேற நேரிடும்.]
மனித வாழ்க்கை இன்று தொன்னூறு வயது வரை எளிதாகவே நீடிக்கிறது. மனக்கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு, பண்பாட்டு யோக்யதை அடிப்படையை தீர்மானிக்கும். சராசரியாக இருபத்தி ஐந்தாண்டுகள் படிப்பதற்கும், தொழில் திருமணம், சொந்த வீடு ஐந்தாண்டுகளை முழுங்கிவிடுகிறது.
திருமணம் முடிப்பவர்கள் அதிகபட்சம் இருபதாண்டுகள் மட்டுமே இல்லற சுகத்தை அனுபவிக்க இயலும். ஐம்பது வயதில் வியாதி தொற்றிக் கொள்கிறது. கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் அதிகம். இதயம் பணி செய்ய மறுக்கும். இனி எஞ்சிய ஆண்டுகள் டாக்டர், மருந்து, அறிவியல் உபகரண உபயம். மகளிர் நிலை இன்னும் மோசம்.
குடும்பக் கட்டுப்பாடு யுக்தியில் அனைவரும் சிக்கி திணறுகின்றனர். ‘‘லூப்’’ கருத்தடை வளையம், மாத்திரை, கருக்கலைப்பு அபார்ஷன், கருவை தள்ளிப் போடுதல், மழலை மறுப்பு இயற்கைக்கு விரோதம். அதிக உதிரப் போக்கு, கர்ப்பப் பை கீழிறங்குவது அன்றாட உபத்திரவம். நாற்பது வயதுக்கு மேல் இல்லற சுகத்துக்கு அருவெறுப்பு, இயலாமை, உடல்பலவீனம், தடை, உடல் ஒத்துழையாமை, நோய் பரவல் மனித குல வளர்ச்சியை தடுமாறச் செய்துள்ளது.
இஸ்லாமிய அடிப்படை சிந்தனையை முஸ்லிம்கள் அடியோடு புறக்கணித்தனர். ஆண் பெண் யாராகவிருந்தாலும் பாலிஹ் ஆன உடன் (வயதுக்கு வந்தவுடன்) திருமணம் ஏற்பாடு வேண்டும். மேற்கத்திய, முன்னுதாரண வாழ்க்கை பயனளிக்காது.
பலதார மணம் அருமருந்து. உடல் வலிமை, பண வலிமை மிக்கவர் இரண்டாவது, மூன்றாவது திருமணத்துக்கு ஒப்ப வேண்டும். வெட்கப்பட ஏதுமில்லை. இல்லையேல் கள ஒழுக்கம் புரளும். தவறான பாலியல் உறவுகள் பரவும். தோல், மர்ம உறுப்பு நோய்கள் வாழ்வை கண்ணியத்தை சீரழிக்கும். ஆண் சம்பாதிக்க வேண்டும்.
மகளிர் பூரண நிறைவுடன் குடும்ப பராமரிப்பை ஏற்கலாம். இருவரும் வெளியே சென்று சம்பாதிப்பது, வலம் வருவது குடும்ப நிம்மதியை கெடுக்கும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. பரக்கத் வரும். சுகம் வாழ்க்கையில் கிட்டும். குடும்பக் கட்டுப்பாடு, சிறுகுடும்ப யோசனை மேற்கத்திய தரித்திரச் சித்தாந்தம். இறைநம்பிக்கை பாழாகும். இறை பாதுகாப்பிலிருந்து வெளியேற நேரிடும். வரதட்சணை ஹராம். அதிக நகை மோகம் ஆபத்தானது. தொழில், வருமானம் முடங்கும். இருபதாண்டு மட்டுமே இன்று நீடிக்கும் மண வாழ்வுக்கு எஞ்சிய எழுபதாண்டுகளை கேவலப் படுத்த வேண்டாம்.
-ஆரெம்., முஸ்லிம் முரசு ஏப்ரல் 2012
source: http://jahangeer.in/?paged=3