மரணம் வாழ்க்கையின் வேகத் தடை!
மௌலானா வஹிதுத்தீன்கான்
[ ”ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. ஆனால் மவுத்துக்கு மருந்து இல்லை.”]
உலகில் இரண்டு சக்திகள் உள்ளன. இரண்டு படைப்பாளன்களல்ல. இரண்டு படைப்புகள். அல்லாஹ் மனிதனை படைக்கும் போது இரண்டு இனங்கள் இருந்தன.
ஜின், மலக்கு
ஜின் இனத்தை சேர்ந்தவன், ஷைத்தான். பூமியை மனிதன் வசம் அல்லாஹ் ஒப்படைத்தான் “கான மினல் ஜின்னி” சூரா கஹ்ஃபு 18, வசனம் 50.
பூமியின் பொறுப்பு மனிதனிடம் வழங்கப் பட்டது. இன்னீ ஜாயிலுன் ஃபில் அர்ளி கலீஃபா அத்தியாயம் 2, பகரா வசனம் 30 மனிதன் பூமியின் உரிமையாளனல்ல. மனிதன் சோதிக்கப்படுகிறான். தாவூது அலைஹிஸ்ஸலாம் கூறுகிறார்கள் நான் நன்றி செலுத்துகிறேனா. சோதிக்கவே ஆட்சி எனக்கு வழங்கப்பட்டது. துனியா பரீட்சைக் களம். மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் வசதியும் டெஸ்ட் பேப்பர். இன்னமா அம்வாலகும் வ அவ்லா துகும் ஃபித்னா. இங்கு ஃபித்னா பொருள் வாயிலாகவும் பரீட்சை நடைபெறுகிறது. மரணம் வரை சோதனை நீடிக்கும். பூமியில் மனிதன் இரண்டு சக்திகளுக்கிடையில் வசிக்க வேண்டியுள்ளது.
மலக்கு, ஷைத்தான்
மலக்கு நன்மைக்கான ஆதாரம். ஷைத்தான் தீமைக்கான ஆதாரம்.
இரண்டு தன்மைகள் மனிதரில் உண்டு.
நஃப்ஸ் லவ்வாமா,
நஃப்ஸ் அம்மாரா,
ஈகோ ஷைத்தானின் நுழைவாயில் கான்ஷியஸ் மலக்குமார்களின் நுழைவாயில் (ணிழிஜிஸிசீ றிளிமிழிஜி) நீங்கள் ஈகோவின் பிடியில் வந்து விட்டால், ஷைத்தான் ஆட்படுத்துவான். ஷைத்தான் மனிதர்களை வழிகெடுக்க விரும்புகிறான்.
அபுபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எதிரியால் நேரடியாக வசை பாடப்பட்டார். திட்டி தீர்த்தார் எதிரி. நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் சொல்ல ஆரம்பித்தார்கள். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விடத்தை விட்டு உடன் அகன்றார்கள். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் கூறினார்கள் ”நீங்கள் மவுனமாயிருந்த வரை உமது சார்பில் மலக்குமார்கள் பேசினர்கள். நீங்கள் பதிலுக்கு திட்ட ஆரம்பித்ததும் மலக்குகள் விலகிச் சென்று விட்டனர். நானும் விலகி விட்டேன்.
அமைதியாய் அபுபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நின்றவரையில் எதிரியின் மனச்சாட்சி கேள்வி கேட்டது. “அமைதியாய் நின்றவரை பார்த்து திட்டுகிறாயே.” அபுபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் திட்ட தொடங்கியதும் ஈகோ தலைதூக்கியது. நீங்கள் எதை ஆக்டிவேட் செய்றீர்கள்? “லவ்வாமா,” “அம்மாரா”. நீங்கள் ஈகோவை தூண்டினால் வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு கிடைக்கும். மனச் சாட்சியை தூண்டிவிட்டால் பிரியம், நட்பு கிடைக்கும்.
ஒவ்வொரு மனிதனிடம், வீட்டில், வெளியில் இரண்டு குணங்களை பார்க்கலாம். ஒரு மனிதனை எதிரியாகவும் மாற்றலாம். நண்பனாகவும¢ மாற்றலாம். ஆண், பெண், குழந்தை, கறுப்பு, வெள்ளை, ஏழை, பணக்காரன் அனைவரிடமும் இந்த இரண்டு பண்புகள் உள்ளன. மனிதனின் படைப்பு உயர்வானது. சுவர்க்கம் மட்டுமே நற்கூலியாவதற்கு தகுதியானது. ஆனால் ஷைத்தான் சின்னச்சின்ன விஷயங்களில் தள்ளி விடுகிறான். மனிதனின் சாய்ஸ் விருப்பமல்ல. இரண்டு குணாதிசயங்களையும் அல்லாஹ் படைத்து மனிதனுக்குள் வைத்துள்ளான். கெட்ட விஷயமல்ல. இரண்டும் அல்லாஹ்வின் படைப்புகள். ஒவ்வொரு விஷயத்துக்கும் பாசிடிவ், நெகடிவ் பண்பு உண்டு. ஈகோ இருப்பதனால் நீங்கள் உங்களை நிரூபித்துக் கொள்கிறீர்.
தீர்மானம் முடிவெடுக்கும் ஆற்றல், ஈகோ மூலமாகவே வரும். மனிதன் சவால்களை சந்தித்துக் கொண்டேயிருக்கிறான். இதன் எதிர்விளைவு கோபம், பழி உணர்வு. ஈகோ கெட்டதாக மாறினால் பிறர் மீது வெறுப்புணர்வு அதிகரிக்கும். இதன் ஆக்கப் பூர்வ பண்புகளை மட்டும் சுவீகரிக்கலாம். அதே நேரத்தில் மற்றவர்களுடைய சுயமரியாதையை நாம் தூண்டி விடக் கூடாது. இழிவுபடுத்தக் கூடாது கடவுள் மனிதனை படைத்தது வெற்றியடைவதற்காகவே. தோல்வி தழுவக் கூடாது. கடவுள் படைத்த பூமியில் நாம் ஆதிக்கம் செலுத்து கிறோம். வாழ்கிறோம். கடவுளின் புனிதமான விதிகள் இங்கு நினைவில் வைப்போம். இப்போது மனிதனின் வாழ்வு முயற்சி எளிதாகும்.
இதனை புரிந்து கொண்டால் மனிதன் கட்டுப்பாடு இழக்க மாட்டான். மரணத்தை தடுக்க முடியாது. எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும் சரியே. இதுதான் வாழ்க்கையில் ஸ்பீடு பிரேக்கர். ஹதீஸ் – மவுத்தை அதிகமாக நினையுங்கள். ஆசை ஒழியும். இன்னொரு ஹதீஸ் ”ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. ஆனால் மவுத்துக்கு மருந்து இல்லை.”
-தமிழில்: பொறியாளர் ஆ.ர. இபுராஹிம்., முஸ்லிம் முரசு, மே 2012
source: http://jahangeer.in/