Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தமிழை வெறுக்க வேண்டாம்!

Posted on May 20, 2012 by admin

தமிழை வெறுக்க வேண்டாம்! 

[ மத அடிப்படை அதி முக்கியம். தனது தாய் மொழி மீதான ஆளுமையும் அவசியம். ரேஷன்கார்டு வேணும். பாஸ்போட்வேணும். அடையாள அட்டை வேணும். வாழும் உரிமை வேண்டும். தமிழ¢ மட்டும் வேண்டாம். மன்னிக்காது தமிழ்ச் சமூகம். தனிமைப்படுத்தப்படுவோம். கோமா நிலைக்குச் செல்லும் நோயாளிக்கு தான் என்னவாக விருக்கிறோம். என்ன ஆகப்போகிறோம். தெரியாது. இந்த தன்மைக்கு சமூகம் தள்ளப்பட முஸ்லிம்கள் காரணமாகக் கூடாது.

தமிழை ஏற்கமாட்டோம். அலுச்சாட்டியம் செய்வோர் குர்ஆனிலாவது ஆளுமை பெற்றிருக்கின்றனரா? இல்லை. ஒருசில ஆயத்துகள் கூட நாவில் வர மறுக்கிறது. யாசின் ஓதத் தெரியாது. சின்ன துஆ கூட தெரிவதில்லை. தமிழையும் வெறுத்து குர்ஆனையும் அறை முன் பார்வைக்கு மட்டும் வைத்து வெகு தூரம் பயணம் சென்றிருக்கின்றோம்.

முஸ்லிம்! அவருக்கு தமிழ் தெரியாது. “நிம்மில்கி இன்னா சொன்னாங்கோ”. நம்மிள் செய்தாங்கோ” இவ்வாறு தமிழ் பேசுவது போலவும், கறி வெட்டுபவர், சாம்பிராணி தட்டு வைத்து புகை போட்டுபிச்சை எடுப்பவர் போலவும், குண்டு வைப்பவராகவும் ஊடகங்கள் அனைத்தும் வேறு பாடுன்றி முஸ்லிம்களைக் கேவலப்படுத்துகின்றன.]

  தமிழை வெறுக்க வேண்டாம்! 

தமிழ்ச் சமூகம் மத்தியில் கடுமையான விரோதத்தை விதைத்து வளர்ந்து விட்டிருக்கிறது சமூகம். மரபு வழியாக 15 லட்சம் ஆண்டுகளாக முஸ்லிம்கள் வளர்க்கப்பட்டும் தமிழில் ஆளுமை பெற வில்லை. தமிழின் உச்சத்தை தொடவில்லை. தகுதியற்றவர்கள், துறை சாராதவர்கள் தமிழ் மேடையில் அமருகின¢றனர். அமர்த்தப் படுகின்றனர். விளைவு தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரிய அவைகளுக்கு முஸ்லிம்கள் அழைக்கப்படுவதில்லை. அமர்த்தப்படுவதில்லை.

தமிழில் பேசுவது, எழுதுவது, புத்தகம் வெளியிடுவது, இஸ்லாமிய இலக்கியப்பதிவுகள் கொண்டுவருவது மட்டும் தமிழுக்குச் செய்த சேவையாகாது. மண்ணின் மரபுக்குச் சொந்தக் காரர்களான தமிழ் முஸ்லிம்கள் தமிழிலக்கியங்களுக்குள் மூழ்கி கண்டு பிடிப்பு நடத்தனும் இரண்டாயிரம் வருட இலக்கியங்களை ஆய்வு செய்தால் ஓரிறைக் கருத்துகள் கொட்டிக்கிடக்கின¢றன. இஸ்லாம் வலியுறுத்தும் வாழ்க்கை நெறி உள்ளுக்குள் புதையுண்டு கிடக்கின்றது. பலாப்பழத்தை பிளந்து தேவையற்றவைகளைக் களைந்து சுளையும் கொட்டையும் எடுப்பதற்குத் இன்று ஆள் தேவை. தமிழ¢ச் சமூகத்திற்கு வழங்கனும். புதிய கண்டுபிடிப்பு களைத் தரனும். நேர்வழிக்குத் தள்ளனும்.

தமிழை முஸ்லிம்கள் வெறுப்பதால், வாசிக்க மறுப்பதால், தேவையில்லையெனக் கருதுவதால் அவரவரும் தமக்குத் தக்க உரை எழுதி வைக்கின்றனர்! எழுதப்பட்ட உரைகள் செம்மையானவை அல்ல. விமர்சனம் ஒருபுறம் இருக்கிறது. தமிழறிஞர்கள் மேடைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

தமிழை ஏற்கமாட்டோம். அலுச்சாட்டியம் செய்வோர் குர்ஆனிலாவது ஆளுமை பெற்றிருக்கின்றனரா? இல்லை. ஒருசில ஆயத்துகள் கூட நாவில் வர மறுக்கிறது. யாசின் ஓதத் தெரியாது. சின்ன துஆ கூட தெரிவதில்லை. தமிழையும் வெறுத்து குர்ஆனையும் அறை முன் பார்வைக்கு மட்டும் வைத்து வெகு தூரம் பயணம் சென்றிருக்கின்றோம்.

மத அடிப்படை அதி முக்கியம். தனது தாய் மொழி மீதான ஆளுமையும் அவசியம். ரேஷன்கார்டு வேணும். பாஸ்போட்வேணும். அடையாள அட்டை வேணும். வாழும் உரிமை வேண்டும். தமிழ¢ மட்டும் வேண்டாம். மன்னிக்காது தமிழ்ச் சமூகம். தனிமைப்படுத்தப்படுவோம். கோமா நிலைக்குச் செல்லும் நோயாளிக்கு தான் என்னவாக விருக்கிறோம். என்ன ஆகப்போகிறோம். தெரியாது. இந்த தன்மைக்கு சமூகம் தள்ளப்பட முஸ்லிம்கள் காரணமாகக் கூடாது.

முஸ்லிம்! அவருக்கு தமிழ் தெரியாது. “நிம்மில்கி இன்னா சொன்னாங்கோ”. நம்மிள் செய்தாங்கோ” இவ்வாறு தமிழ் பேசுவது போலவும், கறி வெட்டுபவர், சாம்பிராணி தட்டு வைத்து புகை போட்டுபிச்சை எடுப்பவர் போலவும், குண்டு வைப்பவராகவும் ஊடகங்கள் அனைத்தும் வேறு பாடுன்றி முஸ்லிம்களைக் கேவலப்படுத்துகின்றன.

இன்றைய தலை முறையினர் மனத்தில் முஸ்லிம்கள் ஒன்றும் அறியா சமூகம் போன்றும், காட்டுமிராண்டி வாழ்க்கை போன்றும் விஷவித்தை விதைக்கின்றன. மற்றொருபுரம் தமிழுக்குச் சொந்தக்காரர்கள் தாங்கள் மட்டும் பிரச்சாரம் நடக்கிறது. அந்த அவைகளில் ஒரு முஸ்லிமும் இல்லை. தமிழைக் கொண்டு பிழைத்து சோறுண்டவர்கள் தமிழுக்கு உழைக்க மறுக்கின்றனர். ஆங்கிலக் குதிரையில் பிள்ளைகளை ஏற்ற¤ அன்னிய தேசப்பிழைப்புக்கு அனுப்பிவைக்கின்றனர்.

தமிழுக்காக முஸ்லிம் முன்னோடிகள் சிலர் உழைத்தனர். அவர்கள் உழைப்பின் பரக்கத்தை சமூகம் அனுபவித்தது. அவர்களுக்குப் பின் பணி தொடரப்படவில்லை. முஸ்லிம்களும் தமிழ் மண்ணின் மைந்தர்கள். மரபுக்குச் சொந்தக்காரர்கள். நாம் அனுபவிக்கும் கல்வி, பணி, அதிகாரம் அவர்களுக்கும் வழங்கப்படணும். தமிழ்ச் சமூகத்திடம் இந்த ஈரம் கசிய முஸ்லிம்கள் தமிழை நேசித்தல், வாசித்தல். ஆழமாகக் கற்றல் அவசியம்.

-ஜெ. ஜஹாங்கீர், முஸ்லிம் முரசு மே 2012

source: http://jahangeer.in/

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 12 = 15

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb