Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கிருமிகள் – கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்

Posted on May 17, 2012 by admin

கிருமிகள் – கண்ணுக்கு தெரியாத வில்லன்கள்

நம்மைசுற்றி எல்லா இடங்களிலும் கோடிக்கணக்கான கண்ணுக்குத்தெரியாத நோய்கிருமிகள் நிறைந்திருக்கிறது. நம் நோயெதிர்ப்பு சக்தி வலுவிழக்கும் நேரம் பார்த்து இவை நம்மை தாக்கி நோயாளியாக்கக் காத்திருக்கின்றன. பொதுவாக எங்கெங்கே இந்த கிருமிகள் கூடாரம் போட்டு தங்கக் கூடும் என்று பார்ப்போம். அவற்றை இல்லாது ஒழிப்பதன் மூலம் உடல் நலத்தைக் காப்போம்.

o சமையல் அறையும் சுற்றுப்புறமும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

o சமையலறையில் பாத்திரம் துலக்க உதவும் ஸ்பாஞ்ச் அதிக அளவு கிருமிகள் இருக்கும் இடம். அதன் ஒரு சதுர இஞ்ச் பரப்பில் 134,000 பாக்டீரியாக்கள் இருக்கலாம் என சோதனை முடிவுகள் காட்டுகின்றன. அதன் ஈரப்பதம் கிருமிகள் பல்கி பெருகுவதற்கு ஏற்ற சூழ்லைக் கொடுக்கிறது. வயிற்றோட்டட்டம் மற்றும் வயிற்று வலி உருவாக்கும் Salmonella , Campylobacter போன்ற கிருமிகள் அதில் இருக்கலாம்.

o சமையலறை ஸ்பாஞ்சுகளை வாரம் ஒரு முறை மாற்றவும். அல்லது ப்ளீச் கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து கழுவி உபயோகப்படுத்தவும்.

o சமையலறை பாத்திரங்கள் கழுவும் தொட்டி கிருமிகள் நிறைந்திருக்கும் மற்றொரு இடம். சமையலறை கழிவு நீர் குழாய்களில் ஒரு சதுர இஞ்ச் இடத்தில் சுமார் 500,000 பாக்டீரியாக்கள் சாதாரணமாக காணப்படுமாம்.

o சோப்புக்கள் கிருமிகளை கொல்வதில்லை.பிளீச்சிங் பவுடர் கலந்த தண்ணீர் தான் கிருமிகள் ஒழிப்பதற்கு சிறந்தது.

o சமயலறை மற்றும் பாத்ரூம்களில் உள்ள தண்ணீர் குழய்களின் கைப்பிடிகள், கதவுகள் கைப்பிடிகள் போன்றவற்றில் ஏராளமான் கிருமிகள் இருக்கக்கூடும். ஒரு சதுர இஞ்சில் 13,000 பாக்டீரியாக்களும் 6000 மற்ற கிருமிகளும் இருக்கலாம்.

o சமையலறை கட்டிங் போர்டு ஏராளமான கிருமிகளின் உறைவிடம்.

o கழிவறை பீங்கானில் சதுர இஞ்சுக்கு சராசரி 3.2 மில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

o குளியல் தொட்டிகளில் நீர் வெளியேறும் பகுதியில் சதுர இஞ்சுக்கு 120,000 சராசரி பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

o குளியலறை திரை சீலைகளில் Sphingomonas மற்றும் Methylobacterium போன்ற பாக்டீரியாக்கள் பெருமளவில் பதுங்கிஇருக்கின்றன.

o வாஷிங் மெசினிலும் மிகப்பெருமளவு கிருமிகள் நிறைந்திருக்கிறது. கழுவிய துணிகளிலும் எளிதில் இக்கிருமிகள் தொற்றி விடுகின்றன.

o வாக்குவம் கிளீனர்களின் புருஸ் களில் பெருமளவு பாக்டீரியாகாள் இருக்கின்றன, அதில் 50% fecal bacteria மற்றும் 13% e-coli bacteria காணப்படுகின்றன.சுத்தமான இடத்தை முதலிலும் அசுத்தமான இடத்தை கடைசியிலும் சுத்தம் செய்வது மூலம் கிருமிகள் எல்லா இடமும் பரவாது தடுக்கலாம். வாக்குவம் கிளீனர் உபயோகப்படுத்திய பின் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்வது அவசியம்.

o மிதியடிகளை சுத்தமாக வைத்திருக்கவும்.

o படுக்கைகள், படுக்கை விரிப்புகள் ,போர்வைகள் ,தலையணைகள் பல்வேறு வகை கிருமிகள் மற்றும் நுண்ணிய பூச்சிகளின் உறைவிடம் .எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவும். இல்லையேல் பலவிதமான அலர்ஜிகளை இக்கிருமிகள் ஏற்படுத்தக்கூடும். இந்த துணிகளை கழுவிய பின் பூச்சிகள் சாகும் வரை கொதிநீரில் போட்டு, பின் உலர்த்தி உபயோகிக்கவும்.

o குளிர் பதன பெட்டியில் கெட்டுப்போன, நாள்பட்ட எதையும் வைக்காதீர்கள்.

o லாட்ஜுகளில் உள்ள போர்வைகள், ரிமோட் கண்ட்ரோல்களில் ஆபத்தான கிருமிகள் காணப்படலாம்.

o பொது தொலை பேசி கிருமிகளின் சந்தை.

o உதடுகளை அடிக்கடி நாக்கால் நக்கி ஈரப்படுத்தும் பழக்கம் நல்லதல்ல. உதடுகளின் வெளிப்புறம் நிறைய கிருமிகள் இருக்கலாம்.

o நாற்றமான சூழல் பாக்டீரியாக்களின் தேசம். அங்கே அதிக நேரம் நிற்க வேண்டாம்.

o சாலையோர உணவு விடுதிகளில் உணவு உண்பதை தவிர்க்கவும்.

o டின்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள் அதன் விளிம்புகளில் நம் உதடு படும் இடங்கள் கிருமிகள் இருக்கக்கூடும்.மூடியுள்ள பாட்டில்கள் நல்லது.

o காலணிகளை வீட்டின் வெளியே கழற்றியிடவும்.

o பாத்ரூம் காலணிகளில் கிருமிகள் அதிகம் இருக்கும். சுத்தமாக வைத்திருக்கவும்.

o வீட்டில் எல்லா இடமும் ஈரப்பதமின்றியும் சூரிய வெளிச்சம் படும்படியும் பார்த்துக்கொள்வோம்.

o கைகள் நோய் கிருமிகளின் வளர்ப்புப் பண்ணை. எனவே நோயாளிகள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

o ஜலதோசத்துடன் கூடிய காய்ச்சல் இருந்தால் அடிக்கடி கையை கழுவுதல் நல்லது. நோய்த்தொற்றை குறைக்கும்.

o பிறருடன் கைகுலுக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும். பிறரது கைகள் எந்த அளவு சுத்தமானவை என்பது தெரியாது. சும்மா விஷ் பண்ணுதே நல்லது.

o உணவு உண்ணும் முன்பும் பிறகும் கைகளை சுத்தமாக கழுவுவது மிக முக்கியம்.

o ரிமோட் கண்ட்ரோல்கள், மொபைல் ஃபோன்கள், டெலிஃபோன் பட்டன்கள் , ஃபிரிட்ஜ் கதவு கைப்பிடி , கம்ப்யூட்டர் கீ போர்டு, மவுஸ், கதவு குமிழ்கள், சுவிட்சுகள், ரூபாய் நோட்டுகள், பேருந்துகளில் கைப் பிடிகள். பேனாக்கள், விசிட்டிங் கார்டுகள், மருத்துவமனை வராண்டாக்கள் , கைப்பிடிச்சுவர்கள், புத்தகங்கள் இவை யாவும் நோய்கிருமிகள் சர்வ சாதாரணமாக புழங்கும் இடங்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.

o ரூபாய் நோட்டுகளை எச்சில் தொட்டு எண்ணாதீர்கள்.

o பேருந்துகள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள் எங்கும் நோய்கிருமிகள் நிறைந்திருக்கும்.

o தினமும் குளிப்பது மிக நல்ல பழக்கம்.இது தினமும் உடலில் தங்கும் கிருமிகளை நீக்குகிறது.

o டால்கம் பவுடர் போடுவது தோலில் கிருமிகள் வளர்வதை தடுக்கிறது.

o அழுக்கான ஆடைகளை உடுக்காதீர்கள்.

o தண்ணீர் தேங்க விடாமல் நோய் பரப்பும் கொசுக்கள் பெருகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

o தூங்கும் போது கொசு வலைகள் உப்யோகித்து கொசுவால் பரவும் டெங்கு, மலேரியா,போன்ற வைரசுகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்

o வைரஸ் அதிகமாக புழங்கக்கூடும் என கருதும் மேற்கண்ட இடங்களை சோப்பு மற்றும் டெட்டால் போன்ற மருந்துகள் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவது நல்லது.

o வீட்டில் சேரும் கழிவுப் பொருட்களையும் குப்பைகளையும் நாள் தோறும் அப்புறப்படுத்த வேண்டும்.

இதெல்லாம் நீங்கள் உசாராய் இருக்க வேண்டி சொன்னது தான். பயந்து கவச உடை போடுமளவுக்கு போக வேண்டாம். முடிந்த அளவு விழிப்பாக இருப்போம். அதையும் மீறி இந்த கண்ணுக்கு தெரியாத வில்லன்கள் தாக்காமல் இயற்கை நமக்கு தந்த கவசமான நோய் எதிர்ப்பு சக்தியையும் சத்தான உணவுகள் உண்பதன் மூலம் வளர்த்துக் கொள்வோம்.

source: http://sathik-ali.blogspot.in/

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb