உறவுக்குப் பின்…!
தம்பதியர் இருவரும் தங்களுக்கு தேவையானவற்றை விவாதித்தால் தாம்பத்ய உறவில் எந்த வித சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவு விஷயத்தைப் பற்றி எப்போது, எப்படி விவாதிப்பது உங்களுக்குப் பிடிக்கும் என்பதை இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொள்ளலாம். உடலுறவு முடிந்ததும் பேசுவது சிலருக்கு இதமாக இருக்கும். சிலருக்கு மறுநாள் ஓய்வு நேரத்தில் பேசுவது பிடிக்கும்.
திருப்தி அடைந்ததை மனைவி கணவனிடம் காட்டுவது அல்லது அதிருப்தியை காட்டுவது தவறு என்று எண்ணுகிறார்கள் பெண்கள். இந்த எண்ணம் கணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பது பல பெண்களுக்கு தெரிவதில்லை.
திருப்தியை வெளிப்படுத்தும்போது கணவனுக்கு மனைவி மீது கூடுதல் அன்பும், பாசமும், நேசமும் உண்டாகிறது. அதிருப்தியைச் சொல்லும் போது, கணவனிடம் செல்லமாக அனுசரணையுடன் கூறவேண்டும். இது போன்றே கணவனும் மனைவியிடம் தனது திருப்தி, அதிருப்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
தாம்பத்ய உறவைப் பொறுத்தவரையில், புரிதல் என்பது சமமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இரண்டு பேருக்கும் புரிதல் இருக்கலாம். இதனை ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக்கொள்வதன் மூலம் தீர்க்கலாம்.
பேசும்போது எனக்கு இவ்வாறு இருந்தால் பிடிக்கும். நான் இதுபோன்று விரும்புகிறேன் என எடுத்துக்கூறுங்கள். உனக்கு இவ்வாறு செய்யத் தெரியவில்லை என புகார் கூறாதீர்கள்.
கணவருக்கு ஒரு குறிப்பிட்ட தாம்பத்ய உறவு முறை பிடிக்கும் என்பதால், எப்போதுமே அதையே செய்து கொண்டிருக்க வேண்டும் என அர்த்தமில்லை. மாறுதல்கள் சில நேரங்களில் உன்னதமாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட செக்ஸ் முறை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களையே நிராகரித்ததாக நினைக்காதீர்கள்.
உறவுக்குப் பின் கணவர் மீது பாசம் அதிகரிக்கிறதா?
தாம்பத்ய உறவிற்குப் பின்னர் பெண்களுக்கு தங்கள் கணவர்களின் மீது அதீத காதல் ஏற்படுகிறதாம். இதற்கு காரணம் ஆக்ஸிடோசின் ஹார்மோன் செய்யும் மாயம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
ஆக்ஸிடோசின் ஹார்மோன் பொதுவாக சுகப்பிரசவ காலங்களிலும், தாம்பத்ய உறவின் போதும் அதிகமா சுரக்குமாம்! அதுமட்டுமில்லாம “தாம்பத்ய உறவுக்கு” அடிப்படையே இந்த ஆக்ஸிடோசின்தானாம்!
மனிதர்களின் பொதுவான உணர்வுகளான, “அன்பு, நம்பிக்கை, பரிவு, தியாக உணர்வு”, இப்படி பல வகையான உணர்வுகளோட ஒரு அழகான கலவைதான் காதல் என்கின்றனர் நிபுணர்கள். இந்த உணர்வுகளையும் கட்டுபடுத்தக் கூடிய ஹார்மோன்தான் இந்த ஆக்ஸிடோசின்.
மனிதர்களின் உடலில் எண்ணற்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அதில் ஆக்ஸிடோசின் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மோனாக கருதப்படுகிறது. மூளையின் பின்புறத்தில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் இந்த ஹார்மோனை சுரக்கிறது. இதனால்தான் செக்ஸ் உணர்விற்கும் மூளைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
உடலுறவின்போது ஆக்ஸிடோசின் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. எனவேதான் தாம்பத்ய உறவு முடிந்த உடன் தங்கள் துணையின் மீது அதீத காதலும், அதிக பாசமும் ஏற்படுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.
தாம்பத்ய உறவுக்கு மட்டுமல்லாது கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்திற்கும், ஆக்ஸிடோசின்தான் காரணமாகிறது. குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பை அதிகரிப்பதும் இந்த ஹார்மோன்தான் என்கின்றனர் பிரபல மருத்துவர்கள்.
“காரியம்” முடிந்த உடனேயே தூங்கப் போயிடாதீங்க!
தம்பத்ய உறவு முடிந்த உடன் இனிமையான உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனராம். ஆனால் காரியம் முடிந்த உடன் பெரும்பாலான ஆண்கள் உறங்கப்போய்விடுவதை பெண்கள் விரும்புவதில்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இல்லறத்தில் தாம்பத்தியம் என்பது அவசியமானது. இது உடல் தேவைக்காக மட்டுமல்ல மன ஆறுதலையும் தரக்கூடியது. ஆனால் துரதிஷ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோஷமாக இருப்பது கிடையாது. தம்பதியரிடையே உடலுறவு தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. இது குறித்து மெக்சிகன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 456 பேர் பங்கேற்ற ஆய்வில் பெண்கள் தங்கள் உள்ளக் குமுறலை கொட்டியுள்ளனர். நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
தூங்கும் கணவர்கள்
தாம்பத்ய உறவிற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள். ஆனால் காரியம் முடிந்த உடன் தூங்கப் போய்விடுவதால் பெண்கள் தனிமை அடைகின்றனர். உங்களால் தூக்கத்தை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது, மெதுவாக செய்யுங்கள்.
பெண்களின் விருப்பம்
தாம்பத்ய உறவில் பெண்களின் விருப்பம் அவசியம். ஆனால் சில ஆண்கள் கண்டதையும் பார்த்துவிட்டு வந்து தங்கள் வீட்டில் பெண்களும் அதேபோல் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் பல சிக்கல்கள் உள்ளன. பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது. பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.
பெண்களுக்கு வாய்ப்பு கொடுங்க
பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும், கோபங்களையும் குறைப்பதற்காக தாம்பத்யத்தில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது. இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களுக்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது.
தாம்பத்ய உறவிற்கு முன்னதாக பெண்ணிற்கு 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. சினிமா படங்களில் வருகின்ற பெண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ வாழ்கையில் நடக்க சாத்தியம் இல்லை. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்பங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
காரியம் சாதிக்க
பெரும்பாலான வீடுகளில் பகல் நேரங்களில் சண்டை ஏற்பட்டால் மனைவியை அடித்து துவைத்து விடுவார்கள். அதேசமயம் இரவு நேர தேவைக்காக தாஜா செய்வார்கள். இதையும் பெண்கள் விரும்புவதில்லை. அதேபோல் தங்களை கவர்வதற்காக சமையலறையில் புகுந்து உதவி செய்வதையும் (நடிப்பதையும்)பெண்கள் விரும்புவதில்லையாம். எப்பொழுதும் ஒரே மாதிரி அன்பாக, அரவணைப்போடு நடந்து கொள்ளும் கணவர்தான் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் கூறியுள்ளனர்.
புதிதாக கற்றுக்கொள்ளுங்கள்
மணமாகி பல ஆண்டுகளான தம்பதிகளிடம்கூட, வெளிப்படையாக தங்கள் தாம்பத்ய உறவு பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. வயதான பின்பும்கூட பலர் அதை பற்றிப் பேச கூச்சப்படுகிறார்கள். பரஸ்பரம் தாம்பத்ய உறவைப் பற்றி தம்பதிகள் எந்த கூச்சமும் இல்லாமல் தங்களுக்குள் சந்தேகத்தைத் கேட்டுத்தெரிந்து கொள்வது சிறந்த வழியாகும்.
தாம்பத்ய உறவு, வாழ்நாள் முழுவதும் விருப்பமான ஒரு செயலாக இருக்க வேண்டுமெனில் ”அதில்” புதுப் புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுவரஸ்யம் அதிகரிக்கும்.