Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

களத்தை விட்டு பின் வாங்குதலும் மீள வருதலும்

Posted on May 11, 2012 by admin

    களத்தை விட்டு பின் வாங்குதலும் மீள வருதலும்    

அல்லாஹ்வின் இறுதித் தூதரே எமது வழிகாட்டி. இஸ்லாமிய சட்டப் பகுதிக்கான அடிப்படைகளை எவ்வாறு முன்வைத்தார்களோ அதே போன்று இஸ்லாமிய அழைப்புப் பணிக்கான மூலக் கோடுகளையும் கீறி விட்டே சென்றுள்ளார்கள். அந்த வகையில் காலத்துக்குக் காலம் தோன்றிய இமாம்களும் அறிஞர்களும் தமது மூல ஆதாரங் களாக குர்ஆனையும் சுன்னாவையுமே எடுத்துக் கொண்டனர்.

இக்கட்டுரையில் நபியவர்கள் தனது தஃவாக் கட்டங்களில் முன்வைத்த ஓர் அடிப்படைக் கோட்பாட்டைப் பற்றியும், பிற் காலத்தில் இஸ்லாமிய எழுச்சிக்குசிந்தனாரீதியாக பெரும் பங்காற்றிய இமாம் கஸ்ஸாலியினது அக்கோட்பாட்டுக்கான நுண்மையான பின்பற்றலையும் பற்றிய ஓர் அறிமுகத்தை முன்வைக்க முனைகின்றோம்.

நபி (ஸல்) அவர்கள் நுபுவ்வத் கிடைக்கு முன்னரே சமூக சீர்திருத்தம் குறித்து ஆழமாக சிந்திக்க முற்படுகின்றார்கள். காலப்போக்கில் சிந்தனை நாட்டமாக பரிணாமம் எடுத்து,களத்தை சீர்படுத்தும் பணியில் இறங்கியும் விடுகின்றார்கள். இது இன்னும் வஹி இறங்காத காலம். களத்தில் அவதானித்த ஜாஹிலிய்யத் துர்நாற்றங்களை அகற்றுவதற்காக தன்னால் முடிந்த பிரயத்தனங்களை மேற்கொள்கின்றார்கள்.

பல சம்பவங்களை இதற்கு உதாரணமாக கூறமுடியுமாயினும் ஒரு சம்பவத்தை மாத்திரம் தொட்டுக் காட்டுகின்றோம். அநியாயம் இழைக்கப்பட்டவனுக்கு சார்பாக அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆவுடைய வீட்டில் கூடி எடுத்த தீர்மானத்திற்கு நபியவர்கள் வழங்கிய ஆதரவை நாம் அறிந்தே வைத்துள்ளோம். பிற்பட்ட காலத்தில் இது பற்றிக் கூறிய நபியவர்கள் ‘விலை மதிக்க முடியாத ஓர் ஒட்டகை கிடைப்பதை விட அவ்வொப்பந்தத்தில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் விருப்பமாக இருக்கின்றது’ என்றார்கள்.

ஜாஹிலிய்ய சமூகத்தில் புரையோடிப் போயிருந்த அருவருக்கத்தக்க செயல் களுக்கு நபியவர்கள் நுபுவ்வத்துக்கு முன்னிருந்தே சிவப்புக் கொடி காட்டி வந்துள்ளார் என்பதை ஸீராவை மேலோட்ட மாக வாசிப்பவர் கூட அறிந்து கொள்ளும் விடயமாகும். சமூகக்களத்தை மாற்றியமைப்பதற்கு பல்வேறு வழிவகை களைக் கைக்கொண்டும் அவர்களால் பெரும் புரட்சியை ஏற்படுத்த முடியவில்லை. இங்கு வலியுறுத்த வருவது நபி (ஸல்) அவர்கள் நுபுவ்வத்துக்கு முன்னிருந்தே களத்தில் இயங்கியிருக்கின்றார்கள் என்பதேயாகும்.

இறுதியில் சமூகத்தை விட்டும் சற்று ஒதுங்குகின்றார்கள். ஹிராக்குகைக்கு சென்றுசமூகத்தையும் அதன் மீது படிந்துள்ள கரைகளையும் பற்றி ஆழமாகவே சிந்திக்க ஆரம்பிக்கின்றார்கள். ஏறக்குறைய மூன்று வருடங்களாக படைப்பாளன், பிரபஞ்சம், மனிதன், சமூகம் போன்ற யதார்த்தங்கள் குறித்த ஆழமான சிந்தனையில் ஈடுபடுகிறார்கள்.மூன்று வருடங்களாக ஆழ்ந்த சிந்தனையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நபியவர்கள் தனது நாற்பதாவது வயதில் பாரிய சிந்தனையை சுமந்தவர்களாக சமூகக் களத்தினுள் மீண்டும் பிரவேசிக்கிறார்கள்.

சமூக மாற்றம் பற்றிய தனது சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நபியவர்கள் உணர்ந்து கொள்கின்றார்கள். மூன்று வருட ஆய்வின்பின் புதிய சிந்தனையோடு களத்துக்கு மீண்ட நபியவர்கள் குறுகிய காலத்தினுள்ளே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றார்கள். நபியவர் களைத் தொடர்ந்து வந்த நான்கு கலீபாக்களும் தமது ஆட்சிகளை சிறப்பாகவே அமைக்க முயன்றனர். முதல் இரண்டு கலீபாக்களது ஆட்சிகளும் எவ்வித உள்நாட்டு குழப்பங்களும் பிரிவினைகளும் அற்றதாகவே காணப்பட்டன.

அடுத்த இரண்டு கலீபாக்களது ஆட்சிக் காலங்களும் ஓரளவு பிரச்சினை நிறைந்ததாகக் காணப்பட்டாலும் இஸ்லாமிய இயல்பைக் கொண்ட ஓர் சாம்ராஜ்யமாகவே அது தொடர்ந்தும் இயங்கி வந்தது. கிலாபா ராஷ

pதாவை அடுத்து வந்த ஆட்சிகள் இஸ்லாமிய இயல்பை மெது மெதுவாக இழக்க ஆரம்பித்தன.

குறிப்பாக இஸ்லாமிய அறிஞர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான இடைவெளி மென் மேலும் விரிவாக்க மடைகின்றது. நன்மையை ஏவித் தீமையைத் தடுக்க முனைந்த அறிஞர்களை ஆட்சியாளர்கள் சிறைப்படுத்தியும், நாடுகடத்தியும் தண்டனைக்குட்படுத்தினர்.இமாம் அபூஹனீபா, இமாம் அஹ்மத், இமாம் இப்னு தைமியா போன்றோர்பட்ட துன்பங்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

அல்குர்ஆன் படைக்கப்பட்டதல்ல, அது அல்லாஹ்வின் கலாம் என்ற கருத்தை வலியுறுத்திய இமாம் அஹ்மத் முஃதஸி லாக்களின் சிந்தனையை மறுத்து விட்டார் என்ற குற்றச் சாட்டில் கலீபாவினால் பல வருடங்கள் சிறைப்படுத்தப்;படுகின்றார்.

இக்கால கட்டத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் அரசியல், சமூக விவகாரங்களில் தலையிடுவதை இயன்றளவு தவிர்த்தே வந்தனர். நவீனகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான கலாநிதி அப்துல் ஹமீத் அபூ ஸுலைமான் குறிப்பிடுவது போல் ‘சிந்தனை இயக்கம், அரசியல் இயக்கம் என்ற இருவகையான இயக்கங்கள் இக்காலத்திலேயே தோன்றின’ என்கின்றார்.

அறிஞர்கள் அரசியல், சமூக விவகாரங் களிலோ அரசியல்வாதிகள் மார்க்க விடயங் களிலோ ஈடுபடுவதை தவிர்ந்து கொண்டனர். அரசியல், சமூகக் களங்கள் மார்க்க வழி காட்டலை விட்டும் தூரமாகிக் கொண்டே சென்ற அதே வேளை அறிஞர்கள் இபாதத், நிகாஹ், தலாக் போன்ற தனியார் சட்டங்களிலே தமது ஆய்வுகளை அமைத்துக் கொண்டனர்.

இமாம் கஸ்ஸாலி வளர்ந்து வந்த காலப் பிரிவிலும் இதே நிலைமைதான் சமூகத்தில் இழையோடிக் காணப்பட்டது. அறிஞர் களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மத்தியி லிருந்த தொடர்பு முற்றாகவே அறுபட்டுக்; காணப்பட்டது. மார்க்கம் வேறு, அரசியல் வேறு என்ற கருத்து கூட சமூகத்தில் ஆழ மாகவே பதிந்திருந்த காலம் அது. அறிஞர்கள் என்ற பெயர்ப்பலகையை முதுகில் ஒட்டிக் கொண்ட சிலர் அரசர்களது அடாவடித்தனங்களுக்கும், பிழையான வழிமுறைகளுக்கும் பச்சைக் கொடி காட்டிக் கொண்டு தமது பிழைப்பூதியத்துக்கு மார்க்கத்தைப் பயன்படுத்தினர்.

இமாம் கஸ்ஸாலி தன்னை நிழாமிய்யா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக சேர்த்துக் கொண்ட காலம். சமூகத் தளத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற வேட்கையில் சில வருடங்களாக பணியைத் தொடர்ந்தாலும் அவர்களால் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. நபியவர்கள் எவ்வாறு களத்தை விட்டு ஒதுங்கி அது பற்றிய நுண்மையான ஆய்வின் பின் மீண்டும் களத்தில் குதித்தார்களோ அது போன்றதொரு வழிமுறையை பின்பற்றுவதே சமூகமாற்றம் பற்றிய தெளிவைத் தரும் என்ற முடிவுக்கு வருகின்றார்.

பின்வரும் ஹதீஸே அவரை நெறிப் படுத்தியது :

‘வழிப்படுகின்ற தன்னலம், மனோஇச்சையைப் பின்பற்றல், உலகை மேலாக மதித்தல், கருத்துச் சொல்லக் கூடிய ஒவ்வொருவரும் தம் கருத்திலேயே பிடிவாதமாக இருத்தல் இவ்வாறான நிலைமை இருந்தால் பொது விவகாரங்களை விட்டு விட்டு உனது தனிப்பட்ட விடயங்களிலேயே நீ கவனம் செலுத்து’ (திர்மிதி, அபூதாவூத்)

சமூகக் களத்தை விட்டொதுங்கிய இமாம் கஸ்ஸாலி ஷாம் பிரதேசத்தில் கிட்டத் தட்ட 10 வருடங்களாக தனது ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள்;. நபியவர் களுடைய ஆய்வு மூன்று வருடங்களாக அமைய இமாம் கஸ்ஸாலியுடைய ஆய்வு பத்து வருடங்களை எடுக்கின்றது.’ஹாகதா ழஹர ஜீலு ஸலாஹித்தீனி வ ஹாகதா ஆததில் குத்ஸ்’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான கலாநிதி மாஜித் இர்ஸான் அல்கைலானி இமாம் கஸ்ஸாலியின் ஆய்வின் கருவை இரண்டாகப் பிரிக்கின்றார்.

01. நபியவர்கள் உருவாக்கிய இஸ்லாமிய சமூகத்திற்கும் தற்கால சமூகத்திற்குமிடை யிலான ஓர் ஓப்பீட்டாய்வு.

02. இது வரையிலான தனது களச்செயற்பாட்டின் உண்மையான உளநோக்கு.

இவ்விரு கருப்பொருட்களையும் இமாம் கஸ்ஸாலி மிக ஆழமாகவே ஆய்வுக் குட்படுத்துகின்றார். இவருடைய பத்து வருட ஆய்வை ‘இஹ்யாஉ உலூமித்தீன்’ எனும் பெரும் பொக்கிஷத்தில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஷhமில் வைத்து பத்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவே இஹ்யாஉ உலூமித்தீன் எனும் நூலாகும். மேற்கூறிய இரு கருப்பொருட்களும் இந்நூலில் மிக விரிவாகவே பேசப்பட்டுள்ளன.

10 வருடங்கள் கழித்து புதியதோர் சிந்தனையை சுமந்தவராக மீண்டும் களத்தில் குதிக்கின்றார். இமாம் கஸ்ஸாலி இக்கால கட்டத்தில் இமாமவர்கள் எழுதிய புத்தகம் 10 வருடங்களில் அவர் அடைந்த சிந்தனைத் தெளிவை எமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றது. ‘அல்முன்கித் மினழ்ழலால்’-வழிகேட்டிலிருந்து காப்பாற்றியவன்- என்ற புத்தகத்தின் தலைப்பே அவருள் ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

புதிய சிந்தனையோடு சமூகக் களத்தில் மீண்டும் நுழைந்த இமாம் கஸ்ஸாலி மிக முக்கியமாக மேற்கூறிய இரு பணிகளையும் தலையாய இலக்குகளாகக் கொண்டார் என கலாநிதி மாஜித் இர்ஸான் குறிப்பிடுகின்றார்.

01. புதியதோர் அறிஞர் பரம்பரை

அரசர்களுக்கு வாலாட்டக் கூடிய அறிஞர் களை சரியாகவே இனங்கண்டு கொண்ட இமாம் கஸ்ஸாலி புதியதோர் அறிஞர் பரம்பரையின் அவசியத்தை உணர்கிறார். ஆழ்ந்த சிந்தனை, தூய எண்ணம் ஆகிய இரு பண்புகளையும் ஒரு சேரப் பெற்றவர்களே உருவாக்கப் படவேண்டும் என்ற நோக்கில் அப் பரம்பரையை உருவாக்க எத்தனித்தார்.

இவர் உருவாக்கிய பயிற்சிப் பாசறையின் தாக்கம் இமாம் அப்துல் காதிர் ஜீலானி போன்ற பெரும் அறிஞர்களில் பிரதிபளிக்கின்றது. அபுல் கத்தாப், இப்னு உகைல், அப்துல் கரீம் அர்ராஸி, ஸஅத் இப்னுல் பஸ்ஸார், முஹம்மத் இப்னு யஹ்யா போன்ற அறிஞர்கள் இமாம் கஸ்ஸாலியின் பாசறையிலேயே வார்க்கப்பட்டவர்கள.; மேற்கூறிய இரு பண்புகளையும் பெற்ற அறிஞர் பரம்பரையை உருவாக்கியது அவரது சிந்தனை பல பாகங்களுக்கும் பரவுவதற்கும் ஏதுவாக இருந்தது.

02. மூல நோயை இனங்காணல்

10 வருடங்களாக சமூகத்தை ஆய்வுக் குட்படுத்திய இமாமவர்கள் அதன் மூல நோயை சுருக்கமாகக் கூறுவதாயின் ‘தோல்விக்கான தயார் நிலை’ எனக் குறித்துக் காட்டினார். அதாவது சமூகமானது எல்லாத் துறைகளிலும் வீழ்ச்சியுற்று தாமாகவே நலிவுற்றிருக்கும் நிலையே இது வாகும். எந்த சமூகம் இப் பரிதாப நிலைக் குற்படுமோ அச் சமூகத்தை ஏனைய சமூகங் கள் தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முயற்சிக்கும் என்பதை விளக்கிய இமாம் கஸ்ஸாலி மிக காரசாரமாகவே தன் சமூகத்தை விமர்சிக்கின்றார்.

சமூகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு களையும் அதற்கான காரணங்களையும் ஆராய்ந்த இமாம் கஸ்ஸாலி அவற்றுக்கான பரிகாரங்களையும் விளக்கி செயற்படுத்த முனைந்தார.; சமூகத்தை நோக்கிய தனது விமர்சனத்தை வெறும் குற்றச்சாட்டாக முன்வைக்காமல் அதற்குறிய பரிகாரத்தை யும் சேர்த்தே முன்வைத்தார். எனவே வரலாற்றில் பெரும் புரட்சியை ஏற்படுத்த அவர்களால் முடியுமாக இருந்தது.

இங்கு இமாம் கஸ்ஸாலி பின்பற்றிய ‘களத்தை விட்டு பின்வாங்குதலும், நுண்மையான ஆய்வின்பின் மீண்டும் களத்திற்கு வருதலும்’ என்ற கோட்பாடு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தஃவா வழிமுறையே என்பதை நபியவர்கள் ஹிராவை நோக்கி பின்வாங்கி யதையும், ஏலவே கூறிய ஹதீஸையும் வைத்து விளங்கிக் கொள்ளலாம்.

தஃவாக் களத்தில் இருக்கின்ற ஒவ் வொரு இயக்கமும், நிறுவனமும் இக்கோட் பாட்டை தமது சிந்தனைக்கு எடுத்து நடை முறைப்படுத்துவது அதன் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கையின் சமூகக்களம் பற்றிய கடந்தகால அனுபவங்களோhடு இன்றைய நிலைமைகளையும் ஆய்வுக்குட்படுத்தி எதிர் காலத்திற்கான வியூகங்களை வகுப்பது இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது.

50,30 வருடங்கள் தாண்டிய எமது இயக்க, நிறுவனங்களது அனுபவம் இன்றியமையாதது. அன்றைய, இன்றைய இலங்கை மண்ணின் இயல்பு, வளர்ச்சி வீதம், ஏற்பட்ட கோளாறுகள், எதிர்காலத் திற்கான துல்லியமான திட்டங்கள், அங்கத்தவர்களை பயிற்றுவித்தலின் வெற்றி, தோல்வி போன்ற பகுதிகள் மிக ஆழமாக ஆராயப்பட வேண்டியவை. ‘களத்தை விட்டு பின்வாங்குதலும் நுண்மையான ஆய்வின்பின் மீண்டும் களத்திற்கு வருதலும்’ என்ற கோட்பாடு இன்றைய காலத்திற்கு மிக அவசியமான ஒன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

source: http://www.usthazmansoor.com/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

16 + = 21

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb