பொருளைச் செலவழிக்கும்போது….
[ ஜகாத் மற்றும் கடமையான தர்மங்களை நிறைவேற்றுவதையும் அவர்களின் மனம் கடுமையாகக் கருதுகிறது. பெரும் சிரமத்திற்குப் பிறகே ஜகாத் போன்றவற்றை நிறைவேற்றவும் மனம் இசைகிறது.
எத்தனையோ முஸ்லிம் செல்வந்தர்கள், லட்சங்கள், கோடிகளின் சொத்துகளுக்கு ஜகாத் கடமையானவர்களாக உள்ளனர். எனினும், ஜகாத்தை நிறைவேற்ற அவர்களிடம் எந்த அமைப்பும் இல்லை என்பதை வைத்து முஸ்லிம்கள் பொருளையும், செல்வத்தையும் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை கணித்துக்கொள்ளுங்கள்.
”செல்வம் மற்றும் மறுமையின் பிரியம் ஒரு இடத்தில் ஒன்று சேர முடியாது” என்பது வெளிப்படையானதாகும். மறுமையின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மரணத்திற்குப் பின்னால், தாம் உலகில் செலவழித்த ஒரு ரூபாய்க்குப்பகரமாக 700 நன்மைகள் கிடைக்குமென்ற ஆசை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வுடைய திருப்பொருத்தமே மற்ற அனைத்தையும் விடவும் முக்கியமானதாகவும், முன்னிரிமை தரத் தக்கதாகவும் ஆகி விடும். செல்வத்தை தியாகம் செய்து மறுமையை வாங்கவே அவர்கள் விரும்புவார்கள்.]
இன்று எல்லாக் குழப்பங்களும் எதனால் உருவாகின்றதென்றால், செல்வந்தர்கள் பொருளுக்கும், சொத்துக்களுக்கும் தாமே உண்மையான உரிமையாளர்கள் என்று எண்ணுவதால்தான்!
ஏழைகள், அனாதைகள், தேவை என்று வருவோருக்காக செலவழிப்பதற்கு மாறாக, சொத்துக்கள், கஜானாக்களை கையகப்படுத்திக் கொண்டு அவர்கள் அமர்ந்துள்ளனர்.
தம் உறவினர்கள், அண்டை வீட்டாரைப்பற்றிய சிந்தனை அவர்களுக்கு இருப்பதில்லை. முஸ்லிம் பொது மக்களின் சிரமங்கள், இதயத்துடிப்புகள், வேதனைக் கண்ணீர் பற்றிய சிந்தனை அவர்களிடம் இல்லை. “நாம் சம்பாதிக்கும் எல்லாப் பொருட்கள், வசதிகள் நமக்கு மட்டுமே உரித்தானது” எனும் தவறான எண்ணமே காரணம்.
அமானிதம், பொறுப்பு பற்றியெல்லாம் அவர்களின் சிந்தனையில் எந்த வரைபடமும் இருப்பதில்லை. பொருளும், செல்வமும் நிழலைப்போல, இன்று அது நம்மிடமிருக்கிறதெனில், நாளை இல்லாமல் போவதற்கும் சாத்தியமுள்ளது. மற்றவர்களிடம் தேவையாகி நம் வாழ்வைக் கழிக்க நேரலாம்” எனும் எண்ணம் நம் மனதிலோ, எண்ணத்திலோ இருப்பதில்லை. முஸ்லிம்களின் செயல்பாட்டின் மூலம், அவர்கள் தம் பொருள், செல்வத்தின் ஆளுமை எந்நிலையிலும் முடிந்து போவதை விரும்புவதில்லை; அவர்கள் மேலும் மேலும் சொத்து சேர்ப்பதை விரும்புகின்றனர். ஆனால், எவ்விதத்திலும் அதில் குறைவு ஏற்படுவதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பது தெளிவாகிறது. அதனால்தான் உபரியான (நஃபில்) தான தர்மங்கள், ஈகை, நல்லுதவிக்காக செலவு செய்வதை பாரதூரமாகக் கருதுகின்றனர்.
ஜகாத் மற்றும் கடமையான தர்மங்களை நிறைவேற்றுவதையும் அவர்களின் மனம் கடுமையாகக் கருதுகிறது. பெரும் சிரமத்திற்குப் பிறகே ஜகாத் போன்றவற்றை நிறைவேற்றவும் மனம் இசைகிறது.
எத்தனையோ முஸ்லிம் செல்வந்தர்கள், லட்சங்கள், கோடிகளின் சொத்துகளுக்கு ஜகாத் கடமையானவர்களாக உள்ளனர். எனினும், ஜகாத்தை நிறைவேற்ற அவர்களிடம் எந்த அமைப்பும் இல்லை என்பதை வைத்து முஸ்லிம்கள் பொருளையும், செல்வத்தையும் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை கணித்துக்கொள்ளுங்கள்.
”செல்வம் மற்றும் மறுமையின் பிரியம் ஒரு இடத்தில் ஒன்று சேர முடியாது” என்பது வெளிப்படையானதாகும். மறுமையின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மரணத்திற்குப் பின்னால், தாம் உலகில் செலவழித்த ஒரு ரூபாய்க்குப்பகரமாக 700 நம்னைகள் கிடைக்குமென்ற ஆசை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வுடைய திருப்பொருத்தமே மற்ற அனைத்தையும் விடவும் முக்கியமானதாகவும், முன்னிரிமை தரத் தக்கதாகவும் ஆகி விடும். செல்வத்தை தியாகம் செய்து மறுமையை வாங்கவே அவர்கள் விரும்புவார்கள்.
நபித்தோழர்கள் தம்முடைய ஏழ்மையான சூழ்நிலையிலும், மற்றவர்களுக்காகச் செலவழிக்கும் வாயிலைத் திறந்து விட்டவர்களாவார்கள். அதைப்போன்ற ஒரு காட்சியை அரிதாகவே காணமுடியும்.
ஹிஜ்ரி 9- ஆம் ஆண்டில் தபூக் யுத்தம் நடைபெற்றபோது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுக்கு செலவழிப்பதற்கான ஆர்வத்தை ஊட்டினார்கள். அப்போது ஹளரத் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் எடுத்து வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னால் சமர்ப்பித்தார்கள். ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டிலிருந்த பாதிப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். ஹளரத் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 300 ஒட்டகைகளையும், அவற்றின் மீது நிறைய பொருட்களையும், ஓராயிரம் தங்கக்காசுகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் சமர்ப்பித்தார்கள். அதைக்கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து “யா அல்லாஹ்! நான் உஸ்மானைப் பொருந்திக்கொண்டேன். நீயும் அவரைப் பொருந்திக்கொள்வாயாக!” என்று துஆச் செய்தார்கள். மேலும் இப்படிக் கூறினார்கள்; “இந்த நற்செயலுக்குப் பின்னால் உஸ்மானுக்கு வேறு எந்தச் செயலும் இடையூறு ஏற்படுத்திவிட முடியாது”.
ஹளரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 200 ஊகியா வெள்ளி கொண்டு வந்து வழங்கினார்கள். ஆஸிம் பின் அதீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுபது மரக்கால் பேரித்தம்பழங்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதாவது, யாரால் எது முடியுமோ அதைத் தம் வசதிக்கும், தகுதிக்கும் அதிகமாகவே அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தார்கள்.
இதுமட்டுமல்ல எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் அந்தப் பெருமக்கள் அல்லாஹ்வின் பாதையில் நன்கு செலவழித்தார்கள். எனக்குப் பின்னால் என் பிள்ளைகள் என்ன ஆவார்கள்? அவர்களின் தேவைக்கு எந்தப் பொருளை வைத்துக்கொள்வார்கள் எனும் சிந்தனை அவர்களுக்கு ஒருபோதும் தடைக்கல்லாக இருந்ததில்லை. எணென்றால் அவர்கள் மறுமையின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்திருந்தார்கள். மறுமையில் கிடைக்கும் வெற்றியே உண்மையான வெற்றி என்று கருதினார்கள். எனவேதான் உலகப் பொருட்களை கணக்கின்றி செலவழித்து மறுமையை விலைக்கு வாங்குவதை அவர்கள் முதன்மையான நோக்கமாகக் கருதினார்கள்.
பிள்ளைகளுக்காகவும் சிந்திப்பது, அவர்களுக்காக சில வாழ்க்கைச் சாதனக்களை விட்டுச் செல்வது உறுதியாக சிறந்ததுதான். ஆனால், அந்த மோகத்திலேயே மக்கள் போதுமென்று மனத்தில் இருந்து விடக் கூடாது.
தன்ளீமே ஆலம் காஸிமி, ஹைத்ராபாத்
தமிழில்: மவ்லவி, எம். அப்துல் ஜப்பார் மன்பஈ
மறைச்சுடர், பிப்ரவரி 2011