டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்தின் முன் குண்டு வைத்தது ஈரான் அல்ல – இந்திய உளவுத்துறை “ரா” அறிக்கை
இந்தியாவிலுள்ள ஊடகங்கள்(!!!) எல்லாம் ஈரானை தீவிரவாத நாடாகக் காட்டிட முயற்சி செய்திடும்போது நமது மத்திய உலவுத்துறையின் வெளிநாட்டுப்பிரிவு, “ரா” இஸ்ரேலைய குண்டு வெடிப்பிற்கும், ஈரானுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அறிவித்துள்ளது.
இந்த உண்மையை IBN-7 எனும் தொலைக்காட்சி மட்டும் காட்டியது. (இதிலிருந்து இந்தியாவிலுள்ள பெரும்பாலான தொலைக்காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.) நமது மத்திய உளவுத்துறையின் வெளிநாட்டுப் பிரிவு பேங்காங்கிலிருந்து அனுப்பிய ரகசிய உளவில் இதைக் கூறியுள்ளது.
இந்த ரகசிய உளவிலேயே இஸ்ரேலிய நாட்டின் சர்வதேச சக்திகளின் தற்போதைய வெளிப்பாடுதான் டெல்லியில் தொடங்கி இன்னுமுள்ள நாடுகளிலும் நடந்த குண்டு வெடிப்பு எனக் கூறியுள்ளது.
அதுபோல், இந்த குண்டு வெடிப்புகளில், டெல்லி, பேங்காக், ஜார்ஜியா ஆகிய மூன்று இடங்களிலும் வெடித்த குண்டுகள் சக்தி குறைந்தவை. இதற்கான சதிகள் அமெரிக்காவில், யூதர்களால் தீட்டப்பட்டவையே. ஆனால், குண்டு வெடிப்புகள் நடந்த நாடுகளில் அமெரிக்க, யூத கையாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த குண்டுகளின் நோக்கம் யாரையும் கொலை செய்வதற்கல்ல. மாறாக இந்தியா, பேங்காக் ஆகிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே உள்ள உறவுகளைச் சேதப்படுத்தவும், ஈரானை ஒரு தீவிரவாத நாடாக உலக மக்கள் மன்றத்தில் காட்டுவதுமேயாகும்.
இதுபோன்ற குண்டு வெடிப்புகளில் ஏதேனும் அப்பாவி முஸ்லிம்களைப் பிடித்து இவர்கள்தான் குண்டு வைக்க அந்த இடத்தை நோட்டமிட்டார்கள் என்றொரு புரளியைக் கிளப்புவது வழக்கம். ஆனால், அதை டெல்லி குண்டுவெடிப்பில் யாரும் செய்ததாகச் சொல்லவில்லை. இதையும் இப்போது நமது உளவுத்துறைகள் உர்ஜிதம் செய்துள்ளன.
ஒரு “சிவப்பு” நிற மோட்டார் பைக் குண்டு பொருத்தப்பெற்ற இஸ்ரேலிய தூதரின் மனைவியின் காரை கடந்து சென்றதாகச் சொன்னவையும் பொய்த்தகவல் எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற அமெரிக்க யூத சதிகள் டெல்லியில் நிறைவேறாமல் தடுப்பதற்கு என்ன செய்யப்போகிறோம்?
இந்த மொத்த நிகழ்வில் ஈரான் சொன்னவையெல்லாம் உண்மையென நிரூபனமாகியுள்ளன. அவற்றுள் ஒன்று இந்த குண்டு வெடிப்புகளெல்லாம் “மொஸாத்” -ன் கையிருப்புகள் என்பதாகும்.
மேலும் இது குறித்த விரிவான செய்திகளுக்கு: ”வைகறை வெளிச்சம்” ஏப்ரல் – மே 2012