Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மணமகள் இருக்குமிடமெல்லாம்….!

Posted on May 8, 2012 by admin

மணமகள் இருக்குமிடமெல்லாம்….!

மணமகள் இருக்குமிடமெல்லாம் ஆயிரக்கணக்கான விளக்குகள், அவளை சுற்றி புதிய செயற்கை மலர்கள் மற்றும் இயற்கை மலர்கள். ஒரு நகைக்கடையே அந்த மணப்பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான செலவு செய்து அலங்கரிக்கப்பட்ட மேடை, அதில் பலர் மணமகளை சூழ நின்று மணமகளோடு படம் பிடிப்பவருக்கு கவனம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்வார்கள். இதற்கு மணப் பெண்ணோடு சேர்ந்து நிற்க ‘தள்ளுபடி’ இத்தனையும் இருக்கும்.

இப்பொழுது இது ஒரு திருமண காட்சி பகுதியாக இருந்து வருகின்றது. இதன் பின் ஒரு விசித்திரமான கதை ஒளிந்துள்ளது. திருமணம் என்பது பெண்ணின் கனவு – அந்த ஒரு சரியான நாள் வர காத்திருந்து அதற்குள் ஆயிரம் கற்பனைகள் அது நினைத்தபடி நடந்ததா? அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை திருமணம் சந்தையில் விலை போனாளா? அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை எவ்வளவு? பட்ட கடன்கள் எவ்வளவு?

மாப்பிளை வீட்டாரின் வலையில் விழ வேறு காரணங்கள் உள்ளதா? இவைபோன்ற உள்ளார்த்தமான நிகழ்வுகள் மறைக்கப் பட்டு திருமண கோலாகல நிகழ்வுகள் பலவகையான உணவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும்.

இதில் சிலர் விருந்தையே குறிவைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் தம்மை திருமணதிற்கு அழைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் வீட்டில் அல்லது கடைத்தெருவில் மாப்பிளை மற்றும் பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி கதை அளந்து அவதூறு பேசவும் தயங்க மாட்டார்கள். இந்த அவதூறு திருமண மண்டபத்திலேயும் பேசுவார்கள். .

“எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு”. (திருக்குர்ஆன் 24:23)

“எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.” (திருக்குர்ஆன் 24:4)

திருமண மேடைக்கு வாழ்த்து சொல்ல அழைக்கப்பட்டவர் அரசியல், மற்ற கதைகளும் சொல்வார்கள். (இவர்கள் ‘எப்படா முடிப்பார்கள்’ என்று முனு முனுப்பவர்கள் உண்டு)

திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் நடக்கும் ஒப்பந்தம். அதோடு சரி. தேவைக்கு இரண்டு சாட்சிகள் மற்றும் ஒரு திருமண ஒப்பந்த பத்திரத்திற்கு ஒரு சான்று பத்திரம்; அத்தோடு முடிய வேண்டியது.

சமூகத்தில் நமது மகள்கள் திருமணம் செய்து கொடுக்க எத்தனை வகை பரிசு கொடுக்க அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. காலணிகள் முதல் ஒரு நூறு ஆடைகள், மின்சார கருவிகளும், குளிர் சாதனப் பெட்டி,’ ஸ்பிலிட் ஏசி’ (split a.c) மற்றும் மரச்சாமான்கள், தங்கம், வெள்ளி. வைர நகைகள், ஒரு வாகனம், மாப்பிள்ளையின் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பரிசுகள் இப்படியே முடிந்தவரை சுருட்டும் பகிரங்க கொள்ளை.பெண்களுக்கு கொடுத்து திருமணம் செய்ய கடமைப் போய் பெண் வீட்டாரிடமே அதிகாரப் பிச்சை வாங்குவது நடைமுறைக்கு வந்தது மிகக் கேவலமான ஒன்று.

”நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்.” (அல்குர்ஆன் 4:4)

யார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது? அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மணமகன் பக்கம் உள்ளது; பெண் அடிமையாவதற்கு பெண்ணும் துணை போகிறாள் இந்த சமூக தீய ஊக்குவிப்பதனை அவர்களின் பெற்றோர்கள் தடுக்க வேண்டும். பழைய மரபுகள் மற்றும் கலாச்சார போலியான திருமண கேலிக் கூத்துகள் ஒழிக்கப்பட வேண்டும்.

நாம் நம் வசதிக்கேற்ப அதிகமான பணம் வீண் விரயம் செய்யப்படுவதை நம்மால் காணமுடிகிறது.

”வீண் விரயம் செய்வதை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். செல்வத்தை அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்; ஏனென்றால் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தான் இறைவனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவன்.” (அல்குர்ஆன் 17:26,27)

”உம்முடைய பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது உம்முடைய கையை கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர்; அன்றி உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து உம்முடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், முடைப்பட்டவராகவும் தங்கி விடுவீர்.” (அல்குர்ஆன் 17:29)

source: http://nidurseasons.blogspot.in/2012/05/blog-post_08.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 70 = 78

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb