Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்!

Posted on May 5, 2012 by admin

பாராளுமன்றங்களும், முஸ்லிம் பெண்களும்!

சமீபத்தில் பழம்பெரும் அமைப்பான “Inter-Parliamentary Union”, சில மாதங்களுக்கு முன்பாக, பாராளுமன்றங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. சுமார் 188 நாடுகளின் தகவல்களை கொண்டு தரவரிசையை வெளியிட்டிருந்தது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகள் அந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம்பிடித்திருந்தன.

பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள்.

துனிசியா நம்மை ஆச்சர்யப்படுத்த இன்னொரு காரணமும் உண்டு. புரட்சிக்கு பிறகு துனிசியாவில் ஆட்சியை பிடித்தது மீடியாக்களால் இஸ்லாமிய கட்சி என்று அழைக்கப்படும் Ennahda கட்சியே. மீடியாக்களால் இஸ்லாமியவாதிகள் என்று அழைப்பட்ட இவர்கள் அதிக அளவிலான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தனர். முடிவோ, இன்று துனிசிய பாராளுமன்றத்தில் நிறைய பெண் உறுப்பினர்கள்.

ஆச்சர்யங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல இருந்தது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் குறித்த தகவல் தான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் வரிசையில் இந்த நாட்டிற்கே முதல் இடம். ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் 27.7% பேர் பெண்கள்.

நம் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும் (22.2%), பங்களாதேஷுக்கும் (18.6%) முறையே 47 மற்றும் 63-வது இடங்கள். நம் நாடு 10.8% பெண் உறுப்பினர்களுடன் 99-வது இடத்தில் இருக்கின்றது.

இப்போது பதிவின் முக்கிய பகுதிக்கு வருவோம். பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசும் அமெரிக்கா, பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் /தேர்ந்தெடுக்கும் விசயத்தில் பின்னணியிலேயே இருக்கின்றது. பிரான்சும் அப்படியே. இவை முறையே 71 மற்றும் 61-வது இடத்தில் இருக்கின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 16.8% பேர் மட்டுமே பெண்கள்.

இந்த தகவல்களை கொண்டு எந்த முடிவிற்கும் வருவது இந்த பதிவின் நோக்கமல்ல. மாறாக, தாங்கள் பெரிதும் விரும்பும் ஒரு மார்க்கம் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால், இத்தனை பெண்கள் தலைவர்களாக வந்திருக்க முடியாது.

அதுபோல, யாரை நோக்கி ‘பெண்களை அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குகின்றனர்’ என்று குற்றம் சாட்டப்படுகின்றதோ, அவர்களும் இத்தனை பெண்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்க முடியாது.

தெளிவான ஆதாரங்கள் நம் கண்முனே இருக்கின்றன. புரிந்துக்கொள்ள முடிந்தவர்கள் புரிந்துக்கொள்ளட்டும்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

My Sincere thanks to:

1. Brother Garibaldi of Loonwatch.

References:

1. Women in national parliaments – Inter-Parliamentary Union (situation as of Nov, 2011). link

2. Women in Parliament: Islamists in Tunisia Field More Women as Candidates than the Percentage of Women in the US Congress – Loonwatch. link

3. Inter-Parliamentary Union – Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹமத் அ

source: http://www.ethirkkural.com/2012/02/blog-post_28.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

20 − = 16

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb