Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்!

Posted on April 30, 2012 by admin

ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்!

    உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?    

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறியுள்ளார்.

அதாவது இதன் பொருள், ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத்திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வளவு தான்.

சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள்ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படுத்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பது, பெண்களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட்கம் அல்லது அச்சம் கொள்வது, செக்ஸ் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பது, செக்ஸ் திரைப்படங்கள் பார்ப்பது, அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு விந்தை வீணாக்குவது, தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்றவற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்படும்.

இன்னொரு விஷயம், ஆணோ, பெண்ணோ, தங்கள் உடலைப் பிறந்த மேனிக்குத் திறந்து போட்டுக்கு கொண்டு தனியறையில் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படுத்தி விடும்

 எதுக்குமே லாயக்கில்லை என்று கணவரிடம் சொல்லாதீர்கள்! 

குடும்பத்தில் கணவன் மனைவியரிடையே ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்தல் இருந்தால்தான் இல்லறத்தில் இனிமை கூடும். ஆனால் எதற்கெடுத்தாலும் கேள்விகள் கேட்டு கணவரை எரிச்சல் படுத்தும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஒரு சில கேள்விகளை கேட்பதினால் கணவர் வெறுப்பின் உச்சக்கட்டத்திற்கே செல்கின்றனராம். கணவரிடம் எந்த மாதிரி நடந்து கொள்ளக்கூடாது என்று உளவியல் எழுத்தாளர் ‘ஜூடி போர்ட்’தனது ‘எவ்ரிடே லவ்’ என்னும் நூலில் என்ற எழுதியுள்ளார். கணவரை காயப்படுத்தும் விசயங்கள் எவை எவை என்று பட்டியல் இட்டுள்ளார் உளவியல் நிபுணர் படித்துப் பாருங்களேன்.

தாம்பத்ய உறவின் போது சரியாக செயல்படவில்லை என்று பொய் சொல்வது ஆண்களை எரிச்சல் படுத்தும்.

உங்க அப்பாவைப் போல அதே குணம் உங்களுக்கு இருக்கு என்று மட்டம் தட்டுவது ஆண்களுக்கு பிடிக்காது

”எப்ப புதுவேலை தேடப்போறீங்க?”

இது எல்லா மனைவிகளும் கேட்கும் கேள்விதான் என்றாலும் எரிச்சலான கேள்வி. இந்த வேலையை விட நல்ல வேலை எப்ப கண்டுபிடிக்கப் போறீங்க? என்பதுதான் அது.

உங்களோட நடவடிக்கைகளை கண்காணிக்கச் சொல்லி எங்கம்மா எனக்கு எச்சரிக்கை செய்திருக்காங்க என்று கணவரிடம் கூறுவது அவரை காயப்படுத்திவிடும்.

”எல்லாம் எனக்குத் தெரியும்”

கணவர் ஏதாவது ஒரு விசயத்தில் மனைவிக்கு உதவி செய்ய வரும் பட்சத்தில் எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க அதை விட்டுடுங்க. நான் பாத்துக்கிறேன் என்று கூறுவது தவறானது.

இதயத்தை நொறுக்கிவிடும்

ஏதாவது ஒரு செயலை செய்வதில் சிறு தவறு நேரும் பட்சத்தில் நீங்க எதுக்குமே லாயக்கில்லை, பைசாவுக்கு பிரயோசனமில்லை என்று கூறுவது கணவரின் இதயத்தை நொறுக்கிவிடுமாம்.

கணவரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்கிறேன் என்ற எண்ணத்தில் அவரது உடை அணியும் விதத்தை விமர்சனம் செய்யக்கூடாது.

நண்பர்களை இழிவுபடுத்துவது

உங்கள் கணவரின் நண்பர்களை மதிக்காமல் இருப்பதும். அவர்களின் முன்னிலையிலேயே கணவரை அவமானப்படுத்துவதும் அவருக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துமாம்.

இறுதியாக ஆனால் இதுவே கடைசியானதில்லை. ”தயவு செய்து குழந்தைகளை பாத்துக்கிறீங்களா? அவர்களை பத்திரமா பாத்துக்கங்க அப்படியே அப்பனை உரிச்சி வச்சிருக்காங்க” என்று கூறக்கூடாதாம். இதுபோன்ற நடவடிக்கைகளினால் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்கின்றார் உளவியல் நிபுணர்.

என்ன பெண்மணிகளே உங்கள் கணவரின் மனதை காயப்படுத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டீர்கள்தானே?!

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

27 + = 35

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb