‘‘எங்கு அல்லாஹ்வை குறித்து பேசப்படுகிறதோ, அங்கு மலக்குகள் அணிவகுக்கின்றனர்.’’
வானவர்களின் பேரவை!
தரையில் அரைமணி நேரம் அமர்வது உடலுக்கு சிரமமாயுள்ளது. நாற்காலிகள் முழுவதும் போடவேண்டியுள்ளது. அவை நெருக்கமாயிருக்க வேண்டும். நெருங்கி அமர வேண்டும். நாற்காலி போடப்பட்ட அவையில் தரையில் யாரும் உட்கார விரும்புவதில்லை. நெருக்கடி. நிர்ப்பந்தம்.
உடல் நோய், பலவீனம் தொல்லை தருகிறது. என்றாலும் அவையில் செவிமடுப்பது அல்லாஹ்வின் கருணை. யார் யாரையெல்லாம் நபிகளார் அழைத்தார்களோ அவர்களனைவரும் இங்கு உள்ளே அமர்ந்திருக்கிறீர்.
‘‘எங்கு அல்லாஹ்வை குறித்து பேசப்படுகிறதோ, அங்கு மலக்குகள் அணிவகுக்கின்றனர்.’’ அல்லாஹ் சில ‘‘சய்யாஹீன் மலக்குமார்களை படைத்துள்ளான். நபித்தோழர்கள் வினவினர். ‘‘சய்யாஹீன்’’ சிறப்புமிக்க மலக்குமார்கள் யார்? எண்ணிக்கையில் அதிகம். சதா பூமியை சுற்றிக் கொண்டேயிருப்பர். ஒவ்வொரு பகுதியாக செல்வார்கள். மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு திசைகளில் ஏகாந்தம், தனிமையிலும், பள்ளிவாசல், மத்ரசா, பரவி தேடுவர்.
நபித் தோழர்கள் கேட்டார்கள். ‘‘எதை தேடுவார்கள்’’ மலக்குகள் ‘‘திக்ரு அவை’’ தேடுகின்றனர். திக்ரு நடக்குமிடம் அறிந்ததும் இறக்கைகளை மேல் கூரையாக ஷாமியானாவாக விரிப்பார்கள். நிலைத்து அங்கேயே தங்கி விடுவர். இதர மலக்கு வானவர்களையும் அங்கே வருமாறு அழைப்பார்கள். நீங்கள் தேடியலைந்து கொண்டிருக்கும் இடம் இங்கே அமைந்துள்ளது.
நபிகளார் மேலும் விவரிக்கிறார். அனைத்து மலக்குகளும் வந்துவிடுவர். ஒரு அணி பின் இன்னொரு அணியாக பூமியிலிருந்து வானம் வரை நீக்கமற நெருக்கியடித்துக் கொண்டு நிற்பர். இத்தகைய விழாக்கள், உயர்ந்தோர் அவை. வானவர் பேரவை.
நபிகளார் கூறுகிறார்கள் இது மலக்குமார்களின் இறக்கையால் போர்த்தப்பட்ட புனித அவை.
மலக்குகள் திரும்பி அல்லாஹ்விடம் மீளுகின்றனர். அல்லாஹ் கேட்கிறான் – கேள்வி கேட்பது இரண்டு வகைப்படும். மலக்குகளின் மகிழ்ச்சி சூழல் அல்லாஹ்வுக்கு மிக நன்கு தெரியும்.
கல்லூரி, பள்ளிக்கூட தேர்வுகளில் ‘‘புரிதல்’’ குறித்து கேள்விகளை கேட்பதுண்டு.
கபுர் கேள்வி உண்டு. அல்லாஹ்வின் சிறப்பு, உயர்வை பிரகடனப்படுத்த, அந்தஸ்தை சுட்டிக்காட்ட கேள்வி கேட்கிறான்.
’’ அல்லாஹ், அல்லாஹ் குரல், முழக்கத்துடன், மன்னிப்பு கோரினர். நினைவு கூர்ந்தனர். சுவனம் வேண்டினர். உன்னை புகழ்ந்தனர்.
அல்லாஹ்வின் அருங்குணங்களை உணர்ந்து சொற்பொழிவுகளாற்றினர்.
‘‘என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா’’ அல்லாஹ் கேட்கிறான்.
மலக்குமார்கள் கூறினர் உன்னைப் பார்க்காமல் உனது உயர்வு சிறப்பினை வானளாவ புகழ்ந்தனர்.
’’ என்னை பார்த்திருந்தால் என்னவாயிருக்கும்.’’
மலக்குமார்கள் கூறினர். ‘‘உயிரை விட்டிருப்பார்கள்.
’’ நீங்கள் சாட்சியாயிருப்பீர். அவர்களின் பாவங்களனைத்தையும் நான் மன்னித்து விட்டேன். குற்றங்களை மன்னித்து விட்டேன்.’’
மலக்குமார்கள் கேட்டனர். ‘‘சிலர் செவிமடுக்க வரவில்லை.’’ வெட்டித்தனமாக உட்கார்ந்திருந்தனர்.
’’ அவர்களையும் நான் மன்னித்து விட்டேன்.”
-முஃப்தீ ஜமீல் அஹமதுகான் காதிரி, பல்ராம்பூர், உ.பி.
-தமிழில் : ஆ.மு. ரசூல் மொஹிதீன்
source: முஸ்லிம் முரசு மார்ச் 2012