இளம்”’பருவ நோய்”க்கு மருந்தென்ன?
[ மாணவர்களின் இளம்பருவ கோளாருக்கு காரணத்தை தெரிந்து கொள்வதே பிரச்சனைகளை தீர்க்க முதல் படி. இந்த பிரச்சனைக்கு ஊடகங்களே முக்கிய காரணம்.ஊடகம் என்றால் சினிமா, தொலைக்காட்சிகள், மாத, வார இதழ்கள் வாசகர்கள் முன்வைக்கின்ற கதைகள், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நாடகங்கலில் வரும் முறையற்ற குடும்ப உறவுகள், சினிமாவில் வியாபார நோக்கத்தோடு வைக்கப்படும் காமம் ததும்பும் பாடல்கள் போன்றவை முக்கியக்காரணங்களாகும். அடுத்ததாக செல்போன்கள், இன்டர்நெட், என மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. தொலைக்காட்சி, சினிமா மாணவர்களுக்கு காமப்பாடத்தில் பாலபாடத்தை நடத்தினால், இணையதளம் முதுநிலை பட்டபடிப்பையே நடத்திவிடுகிறது.]
திருமணவயது ஆண்களுக்கு 21 என்றும், பெண்களுக்கு 18 வயது என்றும் அரசு நிர்ணயித்து உள்ளது. ஆனால் மருத்துவர்கள் விஞ்ஞான ரீதியாக ஆண்களுக்கு 25 வயதிலும், பெண்களுக்கு 21 வயதிலும் திருமண வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள் எனக்கூறுகின்றது. உண்மையில்
தற்போதைய இளையசமுதாயம் திருமணம் வரை ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தற்போதைய இளைய சமுதாயம் தனது 15 வயதிலேயே முறைதவறிய பாதைக்கு சென்றுவிடுகிறார்கள். இதை மாற்றமுடியுமா?. இந்த இளம்பருவ காமநோய்க்கு மருத்துதென்ன?
சமீபகாலமாக தமிழகத்தில் பாலியல் குற்றங்களும், கொலைகளும் அதிகரித்து வருவது கவலைக்குரிய செயதிகளாகும். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகிற பாலியல்குற்றங்கள் வருங்கால தலைமுறை தவறான பாதையில் செல்கிறதே என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.
2011 ஜூலை மாதம் 17ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரியில் 8வயது சிறுவன் ஜெயசூர்யா கொலைசெய்யப்பட்ட விதமும், அதற்கான காரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்த விசாரணையில் அரவிந்தன்(14)- 8ம்வகுப்பு), வடிவேலுகண்ணன்(17), அருள்மருகன்(17), சுந்தரராஜ பெருமாள்(17) இவர்கள் மூவரும் ப்ளஸ்ஒன் படிக்கும் மாணவர்கள், திருப்பதி(18) தனியார்மில் தொழிலாளி என 20வயதைக்கூட தாண்டாத மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி ஜெயசூர்யாவை வலுக்கட்டாயமாக வன்புணர்ச்சி ஓரினச்சேர்க்கை செய்த போது மயக்கமடைந்து விட்டதாகவும், அதனால் அவனது கழுத்தை நெரித்து கொலை செய்து மரப்பெட்டியில் வைத்து முடிவைத்துவிட்டதாகவும் சொன்னபோது விசாரணை செய்த போலீசாரே அதிர்ந்து போனார்கள்.
இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் திடீர் சோதனைக்கு வந்த கல்விஆய்வாளர் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் (மாணவிகளையும் சேர்த்துதான்) புத்தகப்பைகளை சோதனை செய்த போது அவருக்கு கிடைத்த பொருட்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. செக்ஸ் புத்தகங்கள், நடிகைகளின் நிர்வாணப்படங்கள், செல்போன்களில் பூளுபிலம் காட்சிகள் என கண்டெடுக்கப்பட்ட போது இன்றைய மாணவசமுதாயம் எந்த அளவிற்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு ஒருசிறு உதாரணமாக இருந்தது.
மேற்கண்ட சம்பவங்கள் பலகேள்விகளை நம்முன் எழுப்புகின்றன. மாணவர்களின் இந்த இளம்பருவகோளாருக்குக் காரணம் என்ன?. எதிர்காலத்தில் இதன் விளைவு எப்படியிருக்கும்?.இதற்கு தீர்வுதான் என்ன?.
இந்நிலைக்கு காரணம் என்ன?
மாணவர்களின் இளம்பருவ கோளாருக்கு காரணத்தை தெரிந்து கொள்வதே பிரச்சனைகளை தீர்க்க முதல் படி. இந்த பிரச்சனைக்கு ஊடகங்களே முக்கிய காரணம்.ஊடகம் என்றால் சினிமா, தொலைக்காட்சிகள், மாத, வார இதழ்கள் வாசகர்கள் முன்வைக்கின்ற கதைகள், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நாடகங்கலில் வரும் முறையற்ற குடும்ப உறவுகள், சினிமாவில் வியாபார நோக்கத்தோடு வைக்கப்படும் காமம் ததும்பும் பாடல்கள் போன்றவை முக்கியக்காரணங்களாகும். அடுத்ததாக செல்போன்கள், இன்டர்நெட், என மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. தொலைக்காட்சி, சினிமா மாணவர்களுக்கு காமப்பாடத்தில் பாலபாடத்தை நடத்தினால், இணையதளம் முதுநிலை பட்டபடிப்பையே நடத்திவிடுகிறது.
இப்படி ஊடகங்களை மட்டும் குறை சொல்லி பொற்றோர்கள் தப்பிக்க முடியாது.60சதம் சிறுவர்கள் பெற்றோர்களின் கவனமின்மையிலேயே பாதை தவறுகிறார்கள்.இதற்கு தீர்வுதான என்ன? உங்கள் குழந்தைகளின் தவறுகளை திருத்துவதாக நினைத்து நேரடியாக தவறுகளை சுட்டிகாட்டாமல், அவர்களிடம் அதிக நேரம் செலவழித்து நண்பனை போல ஆலோசனை சொல்லுங்கள்.மறைமுகமாக அவர்களை கண்காணியுங்கள். உலகத்திற்கு 1000க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை வழங்கிய எடிசன் பள்ளியிலிருந்து விரட்டப்பட்டவர். அவருடைய தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டவர் என்பதை நினைத்து பார்க்கவேண்டும்.
பொற்றோர் வீட்டில் இருக்கும் ஆசிரியர், ஆசிரியர்கள் பள்ளியிலிருக்கும் பொற்றோர் என்ற கருத்துக்கு இணங்க எதிர்கால சந்ததியை கவனமாக வளர்த்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்.
– w.ஷாஜகான்