ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிப்பா? : மேல்முறையீடு செய்வது எப்படி?
அரசின் பல்வேறு சலுகைகளை பெறவும், பொது வினியோக திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்களை பெறவும், குடும்ப அட்டை மிகவும் அவசியம். தமிழக அரசு, குடும்ப அட்டை பெறுவதற்கு பல்வேறு தகுதிகளையும், விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்கள் மற்றும் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து, சென்னையில் மட்டும் உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர், மற்ற மாவட்ட பகுதிகளில் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
60 நாள் : விண்ணப்பங்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும். 60 நாட்களுக்கு மேல், காலதாமதம் ஏற்பட்டால் விண்ணப்பதாரர் உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் துறை அதிகாரியை சந்தித்து, கால தாமதத்துக்கான காரணத்தை அறியலாம்.
விண்ணப்பம் வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர் அல்லது பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உதவி ஆணையாளர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர்கள், மேல்முறையீடு மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் தெற்கு ஆகியோரிடம் முறையிடலாம். பிற மாவட்ட பகுதிகளில், மாவட்ட வழங்கல் அலுவலரை அணுகலாம்.
புகார் எங்கே?: புகார் செய்ய விரும்பினால், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தை 044- 28592255, என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
குடிநீர் பிரச்னையா? புகார் சொல்லுங்கள்
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நடைபெறும் திறந்தவெளி கூட்டம், நாளை காலை 10 மணி முதல் முதல் பிற்பகல் 1 மணி வரை, குடிநீர் வாரியத்தின் அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி அலுவலகங்களிலும் நடக்கிறது.
இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் பிரச்னைகள் மற்றும் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 84 மனுக்கள் பெறப்பட்டு, 72 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமையல் எரிவாயு இனிமேல் அடுத்தநாளே பதியலாம்
சமையல் எரிவாயு வாங்கி 20 நாட்கள் காத்திருந்துதான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இனி சமையல்எரிவாயு வந்த மறுநாளே பதிவு செய்துகொள்ளலாம் என்று இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து இண்டேன் மண்டல மேலாளர்முரளி கூறுககையில், சமையல் எரிவாயுபதிவுசெய்ய தானியங்கி குரல் பதிவு முறைyil (IVRS) குறுஞ்செய்தி வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆங்கிலத்தில் IOC என்று டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு அந்தந்த பகுதி வினியோகஸ்தரின் போன் நம்பரை டைப்செய்ய வேண்டும். பின்னர் வாடிக்கையாளரின் நுகர்வோர் எண்ணுடன், தனது கைபேசியில் இருந்து 8124024365 என்றஎண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த எண்ணில் 24 மணி நேரமும் எல்லா நாட்களிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு முன்னர் சமையல் எரிவாயு வந்த 21 நாட்களுக்கு பிறகே விநியோகஸ்தரின் கணினியில் பதிய முடியும். ஆனால் IVRS முறையில் வாடிக்கையாளர்கள் சமையல்எரிவாயு வாங்கிய மறுநாளே அடுத்த சமையல் எரிவாயுக்குப் பதிவு செய்யலாம்.இப்புதிய முறையால் கேஸ் ஏஜென்சி நிறுவனங்களில் பதிய மறுப்பதாகச் சொல்லப்படும் புகார்கள் இனிமேல் வராது.
தற்போது வாடிக்கையாளர் பதிவு செய்து 30 முதல் 45 நாட்கள் வரை காலதாமதம் ஆகிறது. இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
– جَزَاكَ اللَّهُ خَيْرًا – Sarfudeen