[ “என் அடியார்களே! உங்களில் முன்னவர்களும், பின்னால் தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், உங்களில் ஜின்னுகளும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் கேட்கட்டும். அவர்கள் கேட்பவை அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அப்படிக் கொடுத்து விடுவதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதில் கடல் நீர் ஒட்டிக்கொள்வதால் கடலில் நீர் குறையும் அளவுக்குக்கூட என்னிடமுள்ள செளபாக்கியங்கள் (நிஃமத்துகள்) குறைந்துவிட மாட்டாது.
என் அடியார்க்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும், நான் நேர்வழியில் நடத்துபவர்கள் அதற்கு விதிவிலக்கானவர். ஆகவே, நேர்வழியைக்காட்டுமாறு என்னிடம் கேளுங்கள், நான் (உங்களுக்கு) நேர்வழியைத் காட்டுகிறேன்.
என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் பசித்தவர்களே. ஆகவே, உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.]
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (18)
அல்லாஹ்வின் வல்லமையை விளக்கி நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவாகும் இது:
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும். நாம் அவனைப் புகழ்ந்து, அவனிடமே உதவி தேடுவோம். நம்முடைய நஃப்ஸுகளாலும், நமது செயல்களாலும் விளையும் தீமைகளை விட்டும் அவனிடமே பாதுகாவல் தேடுவோம். அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்டவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது. மேலும், அல்லாஹ்வே வழி தவறும்படி விதித்து விட்டவர்களை நேர்வழியில் செலுத்தவும் யாராலும் முடியாது. வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் ஏகன், அவனுக்கு ஒப்பாரும், மிக்காரும் யாருமில்லை என்று உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அடியாரும் தூதரும் ஆவார்.
அல்லாஹ் கூறுகின்றான் :
“எனது அடியார்களே! நிச்சயமாக நான் (யாருக்கும் அநீதி இழைக்க மாட்டேன் என்று) என் மீது அநீதியை ஹராமாக்கிக்கொண்டேன். மேலும், உங்கள் மீதும் (உங்களுக்கிடையில்) அதை ஹராமாக்கிவிட்டேன். ஆகவே, நீங்களும் (யாருக்கும்) அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்க்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள் தாம். எனினும், நான் நேர்வழியில் நடத்துபவர்கள் அதற்கு விதிவிலக்கானவர். ஆகவே, நேர்வழியைக்காட்டுமாறு என்னிடம் கேளுங்கள், நான் (உங்களுக்கு) நேர்வழியைத் காட்டுகிறேன். என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் பசித்தவர்களே. ஆகவே, உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.
“என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே! நீங்கள் இரவிலும், பகலிலும் பாவகாரியங்களைப் புரிகின்றீர்கள்; நான் எல்லா பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே, என்னிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள், நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.
“என் அடியார்களே! நீங்கள் எனக்கு தீங்கிழைக்கவும், நன்மை புரியவும் முடியாது. (அதற்கு உங்களிடம் சக்தி இல்லை.) என் அடியார்களே! உங்களில் முன்னவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், உங்களில் ஜின்னுகளும் (அனைவரும் ஒன்று கூடி) கல்பு (உள்ளம்) தூய்மை பெற்ற முத்தகீன்களாக (புனிதசீலர்களாக) ஆகி விட்டாலும், அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே! உங்களில் முன்னவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், உங்களில் ஜின்னுகளும் (அனைவரும் ஒன்று சேர்ந்து) மிக கெட்ட மனம் படைத்தவர்களாக ஆகிவிட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது.
“ஹே, என் அடியார்களே! உங்களில் முன்னவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், உங்களில் ஜின்னுகளும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்று கொண்டு என்னிடம் கேட்கட்டும். அவர்கள் கேட்பவை அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அப்படிக் கொடுத்து விடுவதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதில் கடல் நீர் ஒட்டிக்கொள்வதால் கடலில் நீர் குறையும் அளவுக்குக்கூட என்னிடமுள்ள செளபாக்கியங்கள் (நிஃமத்துகள்) குறைந்துவிட மாட்டாது.
“என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களை உங்களுக்காகவே கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (கியாமத்த் நாளில் – தீர்ப்பளிக்கும் நாளில்) அதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால் அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டுங்கள். நல்லது அல்லாததை (தண்டனையை) நீங்கள் பெற்றுக்கொண்டால் அதற்காக நீங்கள் உங்கள் “நஃப்ஸை”த்தான் பழித்து (நொந்து)க் கொள்ள வேண்டும். (நூல்: முஸ்லிம்)
– அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.
www.nidur.info