வழிகாட்டியை பாராட்டுவோம்
மௌலவி ஹாபிஸ் முஹம்மது பக்ருத்தீன் ஹஸ்மதீ
[ ஒரு மனிதன் ஒரு முஸ்லிமை காஃபிர் பட்டம் கூறுகிறார். ஆனால் அந்த முஸ்லிமிடம் குப்ர் இல்லை. பழிசுமந்துவரிடமே குஃப்ர் திரும்பி வந்துவிடும்.
ஒரு முஸ்லிமை பார்த்து முஷ்ரிக் பட்டம் சுமத்துகிறீர். ஆனால் அவரிடம் எத்தகைய ஷிர்க் இல்லை. எச்சரிக்கை! ஷிர்க் பாவம் திருப்பி உங்களிடமே வந்து சேரும். ஒருவரிடம் வழிகேடு எதுவுமில்லை. ஆனால் நீங்கள் அந்த முஸ்லிமை சுட்டிக்காட்டி வழிகெட்டவர் பட்டம் கொடுக்கிறீர். நீங்கள் தான் வழிகேட்டில் விழுந்து விடுவீர்.
‘‘நபிகளாரை பின்பற்றியோரை பார்த்து முஷ்ரிக், காஃபிர், வழிகெட்டோர் கும்ராஹி கூற வேண்டாம்.
நீங்கள் மூஃமின் ஆக முடியாது. எதுவரை உமது உயிர், வாரிசு, பெற்றோர், முழு உலகைவிட அதிகம் நபி மீது பிரியம் வைக்காதவரை இறையடியாராக முடியாது.
அனைத்து பொருட்களை விட நபியை அதிகம் நேசிக்க வேண்டும். ஹதீஸை அறிவிக்கும் போது நாம் அங்கு உயிருடனில்லை. இன்று மத்ரஸா நடத்துவோர் உயிருடனில்லை. யாரை பார்த்து நபிகளார் எச்சரித்தார். நேரில் அமர்ந்தது யார்? அபூபக்கர், உமர் இதர நபித் தோழர்கள். அவர்களின் பற்று பாசம் பிரியத்துக்கு அளவே இல்லை. சுவனபதி வாக்களிப்பட்டவர்களிடம் இதே அறிவிப்பு வெளியிடப்படுகிறது.]
‘மீலாது கொண்டாடப்படுவதற்குரியதல்ல’. நேற்று ஒருவர் என்னிடம் வாதிட்டார். நாம் சமுதாயத்தின் ஊழியர்கள். வீடியோ, புகைப்படம் பதிவு செய்கின்றனர். அவசியம் கருதி நாம் மவுனமாகிறோம். நீண்ட தொலைவில் உள்ளவர்களுக்கும் செய்தி பரவுகிறது. அனுமதிக்க வேண்டியுள்ளது.
இங்கே வராதவர், வர இயலாதோர் வீட்டில் அமர்ந்து செவிமடுக்க வாய்ப்பு. காலத்தின் கட்டாயம் நாம் பொறுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. அடிமைக்கு அல்லாஹ் மாபெரும் வலிமை தருகிறான். நன்மையான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
நபிகளாரின் நினைவை சுமந்துக் கொண்டு நாடுமுழுவதும் சுற்றி வருகிறோம். பணி செய்கிறோம். விட்டில் பூச்சியாக பிரச்சாரம் நடத்துகிறோம். இறைவனின் கருணையால் அவையில் நினைவுகூர்கின்றீர். எமது மடியில் எதுவுமில்லை. எமது குணநலன், பெரியோர் தொடர்பு, பணி வலிமையால் பெரிய அசத்திய சக்திகளையும் தனித்து நின்று போராடுகிறோம். நாம் கனமாயுள்ளோம். இது கொள்கை தரும் வலிமை, சக்தி.
அல்லாஹ்வின் அந்தஸ்து யாருக்கும் புரியாது. மேடையில் மாவட்ட தலைமை காஜி அமர்ந்துள்ளார். அவருடைய நற்குணம், இரக்கம், படிப்பு ஞானம் எனக்கு தெரியும். அதனால் கண்ணியப்படுத்துகிறோம். அல்லாஹ்வின் வல்லமை, கருணை தெரியாமல் புகழமுடியாது. நபிகளாரை புகழ்வது, கொண்டாடுவது அல்லாஹ்வை புகழ்வதற்கும், கொண்டாடுவதற்கும் ஒப்பாகுமா. அப்படியானால் அல்லாஹ்வின் வல்லமைக்கு நீங்கள் எல்லை வரன் போடுகிறீர்.
ஆயிரமாயிரம் தடவை நான் பாவமன்னிப்பு கேட்கிறேன். அல்லாஹ் வல்லமைமிக்கவன். இணையில்லை. உலகம் முழுவதும் பரிபாலிக்கிறான். குன் சொல் கொண்டு உலகத்தை படைப்பான். ஆகு சொன்னால் போதும். அல்லாஹ் கட்டுப்படாதவன். ஹதீஸ்.
ஒரு மனிதன் ஒரு முஸ்லிமை காஃபிர் பட்டம் கூறுகிறார். ஆனால் அந்த முஸ்லிமிடம் குப்ர் இல்லை. பழிசுமந்துவரிடமே குஃப்ர் திரும்பி வந்துவிடும். ஒரு முஸ்லிமை பார்த்து முஷ்ரிக் பட்டம் சுமத்துகிறீர். ஆனால் அவரிடம் எத்தகைய ஷிர்க் இல்லை. எச்சரிக்கை. ஷிர்க் பாவம் திருப்பி உங்களிடமே வந்து சேரும். ஒருவரிடம் வழிகேடு எதுவுமில்லை. ஆனால் நீங்கள் அந்த முஸ்லிமை சுட்டிக்காட்டி வழிகெட்டவர் பட்டம் கொடுக்கிறீர். நீங்கள் தான் வழிகேட்டில் விழுந்து விடுவீர்.
‘‘நபிகளாரை பின்பற்றியோரை பார்த்து முஷ்ரிக், காஃபிர், வழிகெட்டோர் கும்ராஹி கூற வேண்டாம்.
நீங்கள் மூஃமின் ஆக முடியாது. எதுவரை உமது உயிர், வாரிசு, பெற்றோர், முழு உலகைவிட அதிகம் நபி மீது பிரியம் வைக்காதவரை இறையடியாராக முடியாது.
அனைத்து பொருட்களை விட நபியை அதிகம் நேசிக்க வேண்டும். ஹதீஸை அறிவிக்கும் போது நாம் அங்கு உயிருடனில்லை. இன்று மத்ரஸா நடத்துவோர் உயிருடனில்லை. யாரை பார்த்து நபிகளார் எச்சரித்தார். நேரில் அமர்ந்தது யார்? அபூபக்கர், உமர் இதர நபித் தோழர்கள். அவர்களின் பற்று பாசம் பிரியத்துக்கு அளவே இல்லை. சுவனபதி வாக்களிப்பட்டவர்களிடம் இதே அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
மிக அடிப்படையான விஷயம், நபி மீது பிரியம் வைப்பதாகும். எதிரி, விரோதி, துரோகியை யாரும் புகழமாட்டார்கள். நண்பன், உதவியாளர், வழிகாட்டியை அனைவரும் புகழ்வர்.
source: முஸ்லிம் முரசு மார்ச் 2012