பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
நம் சமுதாய பெண்கள் மட்டுமின்றி பிற மத சகோதரிகளும் இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற அரிய நோக்கில் பல மார்க்கப்பணிகளை இறைவனின் பொருத்தம் நாடி திறன்பட செய்து கொண்டு வரும் முத்துப்பேட்டை – ரஹ்மத் அறக்கட்டளை,
இன்ஷா அல்லாஹ், மே மாதம் 1 ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ள ”பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு” ஒன்றினை ரஹ்மத் பள்ளி வளாகத்தில் நடத்த உள்ளது.
அதற்காக பரப்புரை பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை கண்ணுறும் திருவாரூர், தஞ்சாவூர், நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரியினை சார்ந்த சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.
மேலும், மேற்குறிப்பிட்ட ஊர்களை சார்ந்த அன்னிய நாட்டில் தமிழ்ச் சொந்தங்களை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தாங்களின் இல்லங்களுக்கு இச்செய்தியினை பரப்புரை செய்து அதற்கான நன்மையினை ஏக இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
”உண்மையை (பேசுவது) நன்மையின் பால் வழிகாட்டும் நன்மை சுவனத்தின் பால் வழிகாட்டும்.” (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6094)
posted by: Muduvai Hidayath