Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஹம்மது எனும் திருநாமத்தின் மகிமை

Posted on April 15, 2012 by admin

 

 முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனும் திருநாமத்தின் மகிமை 

[ நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கிறார்கள்; “யாருக்கு அல்லாஹ் மூன்று ஆண் மகன்களை வழங்கியும், அவர்களில் ஒருவருக்கும் “முஹம்மது” எனும் பெயர் சூடப்படவில்லையெனில் அவர் முட்டாள்”. மறுமை நாளில் அல்லாஹ் கூறுவான் “முஹம்மது எழுந்திரும். சுவர்க்கம் புகுந்துவிடும்”. முஹம்மது பெயர் வைத்த அனைவரும் எழுந்து நிற்பர்.]

ஆல இம்ரா, ருக் கூ ஹ் 15, ஐந்து சிறிய ஆயத்துகள். உஹது போர் பின்னணியில் இறக்கியருஅளப்பட்டவை. முஸ்லிம்களுக்கு சிரமம் ஏற்பட்ட நேரம். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டதாக வதந்தி பரவியது. போர் செய்து என்ன பயன்? நபிகளார் உயிருடனில்லை எனும் வதந்தியியை நம்பியதால் சில நல்லறத் தோழர்களின் மனநிலையில் தடுமாற்றம். “அபூ சுஃப்யான் வசம் சரணடைந்து விடுவோம்”. குழப்பம் நேர்ந்தது. ஒவ்வொரு ஸஹாபியும் வெவ்வேறு மனநிலையில் உழன்றனர். “முஹம்மது இறைவனின் தூதரேயன்றி வேறு அல்லர்” – வசனம் இறங்கியது.

இதற்கு முன்னர் பல நபிமார்கள் வந்துள்ளனர். ரஸூல்மார்கள் போய்விட்ட பின்பு சண்டையிட போராட மறுப்பது சரியான கொள்கையல்ல. “ரஸூல் உயிருடனிருந்தால் தீனை பின்பற்றுவோம். மரணித்துவிட்டால் மார்க்கத்தைப் பின்பற்றமாட்டோம்” எனும் வாதம் எவ்வகையிலும் முறையாகாது.

நான்காவது ஜுஸ்வு, இங்குதான் திருக்குர்ஆனில் முதன்முறையாக “முஹம்மது” (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெயர் வருகிறது. இது அல்லாஹ்வுக்கு ரஸூல் மீது உள்ள பிரியத்தை, நெருக்கத்தை குறிக்கிறது. மிகச் சில இடங்களில் மட்டுமே முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெயரை அல்லாஹ் பயன்படுத்துகிறான். வழக்கமாக, அடிக்கடி, ஜாடையாக “இஷாரா” மூலம் பேசுவான். முழுக் குர் ஆனைத் தேடிப்பார்த்தால் “முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனும் பெயர் நான்கு இடங்களில் வருகிறது. இது இஸ்மி ஜாத். அடையாளப் பெயர். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டும் குறிக்கும் சொல். இதர இடங்களில், மக்கீ, மதனீ, தாஹா என பல பெயர்களில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரிக்கிறார்கள் – “யாருக்கு அல்லாஹ் மூன்று ஆண் மகன்களை வழங்கியும், அவர்களில் ஒருவருக்கும் “முஹம்மது” எனும் பெயர் சூடப்படவில்லையெனில் அவர் முட்டாள்”. மறுமை நாளில்  அல்லாஹ் கூறுவான் “முஹம்மது எழுந்திரும். சுவர்க்கம் புகுந்துவிடும்”. முஹம்மது பெயர் வைத்த அனைவரும் எழுந்து நிற்பர்.

சில சமூகங்களில் இரண்டு முஹம்மது பெயர் நாமம் சூடுவதுண்டு. முஹம்மது முஹம்மது ஹுஸைனி… உதாரணம். முஹம்மது நாமத்துடன் இணைந்து பெயர் சூடுவதும் பல குடும்பங்களில் வழக்கமாயுள்ளது. (உலகிலேயே முஹம்மது எனும் பெயர் சூடப்பட்டுள்ளவர்களே அதிகம் என்கிறது “கின்னஸ்” புத்தகம்).

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இன்னொரு நாமம் “அஹமது”. ஹம்து என்பதன் அர்த்தம் புகழ். முஹம்மது என்பதன் அர்த்தம் எந்நேரமும் புகழப்படுபவர். திரும்பத் திரும்ப மீண்டும் மீண்டும் அடிக்கடி புகழப்படுபவர்.

ஏன் முஹம்மது பெயர்? மற்ற விஷயங்களில் மனிதர்கள் புகழ்கின்றனர். ஆனால், அல்லாஹ் முஹம்மதை மட்டுமே புகழ்கின்றான். பெருமை சேர்க்கின்றான். ஆகையால் அண்ணாரின் நாமம் முஹம்மது – புகழப்படுபவர்.

உங்களுக்கு மிக வியப்பாக இருக்கும், இதற்கு முன் யாரும் “முஹம்மது” எனும் பெயரை சூட்டியதே இல்லை. சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை “முஜம்மம்” – இகழப்படுபவர் என்று நாமம் சூட்டி அழைத்த செய்தி  எட்டிய பொழுது “அல்லாஹ் என்னை முஹம்மது ஆக்கியுள்ளான். காஃபிர்கள் வேறு யாரையோ “முஜம்மம்” பட்டம் வழங்கி அழைக்கின்றனர். இழிவுபடுத்துகின்றனர். என்னை அல்ல” என்று பதிலளித்தார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

யாருக்கு முஹம்மது எனும் பெயர் உள்ளதோ அவரை திட்ட வேண்டாம். மரியாதை அளிப்பீர். அஹமது – புகழ்கிறவர். முஹம்மது – புகழப்படுபவர். இரண்டு நாமங்கள் அல்லாஹ் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கியுள்ளான்.

அனைத்தும் அல்லாஹ்வை புகழ்கின்றன. என்றாலும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்போன்று இறைவனை புகழ்பவர் யாருமில்லை. அதனால் அஹமது. படைப்பினங்கள் அல்லாஹ்வைப் புகழ்கின்றன. என்றாலும் சுத்தமில்லாதவை. அல்லாஹ் அனைத்து மொழிகளையும் படைத்தான். அல்லாஹ் போல் புகழ்வதற்கு யாருக்கும் ஆற்றல் இல்லை. மூன்று மொழிகள், ஐந்து மொழிகள் கற்றுக்கொண்டாலே பெரிய விஷயம். அல்லாஹ் அனைத்து மொழிகளையும் படைத்தவன். அவன் புகழ்ந்தால் எப்படியிருக்கும். அளவே இல்லை. அதனால்தான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழ்பவராகவும், புகழப்படுபவராகவும் உள்ளார்கள்.

posted by: Abu safiyah

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb