மரியாதைக்குறிய 4 இமாம்களும்
குர்ஆன், ஹதீஸையே இறுதி தீர்வாக கூறுகிறார்கள்
இமாம் அபூஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள் :
ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே என் வழியாகும். (ஆதார நூல்கள்: ரஸ்முல் முஃப்தி, ஹாஷியா பின் ஆபிதீன், ஈகாலுல் ஹிமம்)
“எந்த ஆதார அடிப்படையில் நாம் முடிவெடுத்தோம்?” என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை. (ஆதார நூல்கள்: அல்இன்திகா, ஹாஷியா இப்னு ஆபிதீன், ரஸ்முல் முஃப்தி)
”என் ஆதாரத்தை அறியாதவன் என் சொல்லை பயன்படுத்தி ஃபத்வா கொடுப்பது ஹராமாகும்.” (ஆதாரம்: மீஜான் அஷ்ஷஃரானி)
”நாங்கள் இன்று ஒன்றை கூறிவிட்டு நாளை அதிலிருந்து வாபஸ் வாங்கிக்கொள்ளும் மனிதர்தாம்.” (எனவே குர்ஆன், ஹதீஸை ஒப்பிட்டு பார்க்காமல் பின்பற்றாதீர்கள்.) (ஆதாரம்: அல்மீஜான் ஷஃரானி)
அல்லாஹ்வின் வேதத்திற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறைக்கும் மாற்றமாக நான் ஒன்றை சொன்னால் என் சொல்லை ஆதாரமாக எடுக்காமல் விட்டு விடுங்கள். (ஆதாரம்: ஈகாழுல் ஹிமம்)
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்க தக்கவைகளும் உண்டு. விடப்படக் கூடியவைகளும் உண்டு. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல் மட்டுமே முற்றாக ஏற்க வேண்டியவைகளாகும். (ஆதார நூல்கள்: இர்ஷாதுஸ்ஸாலிக், ஜாமிவு இப்னு அப்துல்பர், உஸூலுல் அஹ்காம்)
நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொறுத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கும், நபி வழிக்கும் உட்படாதவற்றை விட்டு விடுங்கள். (ஆதாரங்கள்: ஈகாழுல் ஹிமம், ஜாமிவு இப்னு அப்துல்பர், உஸூலுல் அஹ்காம்)
இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள் :
எவராக இருப்பினும் அவரை விட்டும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழி முறைகளில் ஏதேனும் தவறிவிடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு தீர்வை கூறும்போது, அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்து தரும்போது “அல்லாஹ்வின் தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால், டூறைத் தூதருடைய கூற்றே ஏற்கப்படவேண்டும்”. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற்றே ஏற்கப் படவேண்டும்”. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற்றை ஏற்பதே என் கொள்கையாகும். (ஆதார நூல்கள்: இப்னு அஸாகீர், ஈகாழுல் ஹிமம்)
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை எவருக்கு தெரிகின்றதோ, அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் அல்ல என்று இக்கால முஸ்லிம்கள் ஏகோபித்து முடிவு செய்துள்ளார்கள். (ஆதார நூல்: ஈகாழுல் ஹிமம்)
எனது நூலில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துக்கு மாற்றமானதைக் கண்டால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னத்தையே எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்! என் சொல்லை விட்டு விடுங்கள். (ஆதார நூல்கள்: அல் மஜ்வு நவவி, இப்னு அஸாகீர், தம்முல் கலாம், ஈகாழுல் ஹிமம், இஜ்திஹாத்)
ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கும்போது அதை ஏற்பதே எனது வழியாகும். (ஆதார நூல்கள்: அல் மஜ்வு நவவி, மீஸான் ஸஃரானி)
நான் கூறிய சொற்கள் ஆதாரப்பூர்வமான நபி மொழிக்கு முரண்படும்போது நபியின் வழி முறைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னை (தக்லீத் கண்மூடி) பின்பற்றாதீர்கள். (ஆதார நூல்கள்: இப்னு அபீஹாதமின், அல்அதாப், அபூநயீம்)
இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள் :
என்னையே, மாலிக், ஷாஃபிஈ, அவ்ஸாயி, ஃதெªவ்ரி போன்றவர்களையோ “தக்லீத்” கண்மூடி பின்பற்றாதே. மாறாக அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ அதிலிருந்து (குர்ஆன், ஹதீஸிலிருந்து) நீயும் புரிந்துகொள். (ஆதார நூல்: ஈகழுல் ஹிமம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸை நிராகரிப்பவர்கள் அழிவின் விளிம்பிலே இருக்கிறார்கள். (ஆதார நூல்: இப்னு ஸவ்ஸி)
இதுவரை மரியாதைக்குறிய நான்கு இமாம்களும் குர்ஆனையும், ஹதீஸ் 8230 யும் சிந்தித்துச் செயல்படுங்கள் என்று எச்சரித்து விட்டு சென்றுள்ளார்கள். வல்ல நாயன் நம் அனைவரயும் குர்ஆன், ஹதீஸ் வழியில் நடக்க துணை புரிவானாக! ஆமீன்.