ஒரே ஹதீஸில் பொதிந்திருக்கும் பல அறிவுரைகள் (1)
ஒவ்வொரு முஸ்லிமும் தனது மனதில் அவசியம் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்
“சந்தேகம் கொள்வதைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டுகின்றேன். ஏனெனில் சந்தேகம்தான் பொய்க்கு காரணமாகும். எனவே நீங்கள் துருவித் துருவிப் பிறருடைய செய்தியை விசாரிக்காதீர்கள்.
ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்காதீர்கள். பெருமை பாராட்டாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறம் பேசாதீர்கள். புறக்கணிக்கவும் செய்யாதீர்கள். இறைவன் உங்களுக்கிட்ட கட்டளைக்கிணங்க இறை அடியார்களான நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் சகோதரராக இருந்து வாருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரரே ஆவார். அவர் (பிற முஸ்லிமுக்கு) அநியாயமும் செய்ய மாட்டார்; இழிவும் படுத்த மாட்டார். மனிதன் தீயவனாக ஆக அவன் தன் சகோதர முஸ்லிமை இழிவாகக் கருதுவதே போதுமானதாகும்.
ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் பிற முஸ்லிமுடைய உயிர், பொருள், மானம் தடை செய்யப்பட்டிருக்கிறது.
நிச்சயமாக, இறைவன் உங்களுடைய கோலத்தையும், உடல் அமைப்பையும் பார்ப்பதில்லை. எனினும் உங்களுடைய உள்ளத்தையும், செயல்களையும்தாம் நோட்டமிடுகிறான்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறித் தங்களின் நெஞ்சின் பக்கம் சாஅடை செய்து “இங்குதான் பயபக்தி உள்ளது” என்று மூன்று முறை கூறி,
மேலும் அறிந்து கொள்ளுங்கள்; “உங்களில் (ஒரு பொருளை) ஒருவர் விலை பேசும் பொழுது மற்றவர் (அந்தப் பொருளை) விலை பேச வேண்டாம்.
இறைவனின் அடியார்களான நீங்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரராக இருந்து வாருங்கள். எந்த முஸ்லிமும் தன் சகோதர முஸ்லிமிடம் மூன்று நாட்களுக்குமேல் பேசாது இருக்க வேண்டாம்” என்று கூறினர்.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூ தாவூது, திர்மிதீ)