Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை கொடுத்துள்ள ஈரான்!

Posted on April 14, 2012 by admin

 அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை கொடுத்துள்ள ஈரான்! 

”நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம். கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!” (அல்குர்ஆன் 12:76)

அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை சில மாதங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தியது।. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக்கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது.

இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

இவ்விடையம் ஏற்கனவே அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர்கள் வாயே திறக்கவில்லை காரணம் ஈரான் தான் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்க அப்படியே இருக்கட்டும் என அமெரிக்க விட்டுவிட்டது. விமானம் சுடப்பட்டால் அது தரையில் வந்து விழும்போது சிறிய அளவிலாவது சேதம் ஏற்படும். ஆனால் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படும் விமானத்தை ஈரான் காட்டும்போது அதனைப் பார்த்து உலகமே ஒரு கணம் ஆடிப்போய்விட்டது.

காரணம் அதில் எந்தச் சேதமும் இல்லை. (மிகமிகக் குறைந்த ஒரு சேதத்தைத் தவிர) அப்படி என்றால் விமானத்தை எவ்வாறு ஈரான் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு படியுங்கள்.

இந்த விடயத்தை சம்பவ தினமன்று குறிப்பிட்ட விமானம்(RQ – 170) அப்கானிஸ்தான் வான் பரப்பில் பறப்பது போன்ற தோற்றப்பட்டை கொடுத்துக்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா சொல்கிறது அவ்விமானம் சிலவேளை ஈரானின் எல்லைப் பகுதிக்குள் தற்செயலாகச் சென்றிருக்கலாம் என்று. ஆனால் அந்த விமானம் ஈரான் நாட்டிற்குள் சுமார் 200 கிலோ மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வேவுபார்த்துள்ளது என்பதே உண்மையாகும். குறிப்பிட்ட விமானம் உள்வாங்கும் GPS சமிஞ்சைகளை ஈரான் அவதானித்து அதனை வைத்து அந்த ஆளில்லா விமானத்தை ஏமாற்றியுள்ளது. புரியவில்லையா ? அதாவது இந்த அதி நவீன ஆளில்லா விமானம் செயற்கைக்கோளில் இருந்து வெளியாகும் சில சமிஞ்சைகளை வைத்தே தனது (பாதை) பயணத்தை உறுதிசெய்கிறது. அச் சமிஞ்சைகள் சிலவேளை கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே ஆட்டோ பைலட் (தானாகப் பறக்கும் திறனுக்கு) மாறும்.

ஈரான் முதலில் ஒருவகையான ஒலிக்கற்றைகளைப் பாவித்து செயற்கைக்கோளின் சமிஞ்சைகளைத் தடைசெய்துள்ளது। அவ்விமானம் உடனே ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கு தன்னை மாற்றி பறப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. இவ்வாறு பறப்பில் இருந்த விமானத்தின் கருவிகளோடு உடனடித் தொடர்பை ஏற்படுத்திய ஈரான் இராணுவத்தினர் விமானத்தில் ஏற்கனவே பதியப்பட்டிருந்த வரைபடங்களை மாற்றியுள்ளனர். உலகவரை படங்கள் சிலவற்றை மாற்றி அதனை அந்த விமானத்தின் மெமரியில் பதித்துள்ளனர்.

புதிதாகப் பதிக்கப்பட்ட மெமரியில் அந்த விமானம் இறங்கவேண்டிய இராணுவத் தளம் ஈரானின் ஒரு விமான நிலையம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தைப் பொறுத்தவரை ஈரான் நாடு தான்॥ தான் தரையிறங்கவேண்டிய கடைசி விமானநிலையம் என அது நினைத்துள்ளது. (அதாவது பாக்கிஸ்தான் இல்லையேல் அக்பானிஸ்தான் என்று அது நினைத்து ஈரானில் தரையிறங்கத் தயரானது). இந்த விமானத்தை அதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சி.ஐ.ஏ உளவு நிறுவனம் அதன் கட்டுப்பாட்டை சில நிமிடங்கள் இழந்தது. அதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ஈரான் அந்த ஆளில்லா விமானம் இறங்கவேண்டிய குறியீடுகளை தாம் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்த தொடர்புகள் மூலம் உட்செலுத்தியுள்ளது.

பறக்கும் அவ்விமானத்தின் உயரத்தை அவசரமாக கணக்கிட்ட அவர்கள் எத்தனை ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அது தரையிறங்கவேண்டும் என அறிவித்தல் சமிஞ்சைகளை விடுக்க அவ்விமானம் தனது சொந்த விமானநிலையத்துக்கு தாம் வந்துவிட்டதாகக் கருதி தரையிறங்கியுள்ளது. இருப்பினும் எல்லாவற்றையும் படு கச்சிதமாகச் செய்த ஈரானின் இராணுவ வல்லுனர்கள் சிறிய பிழை ஒன்றை மட்டும் விட்டுவிட்டனர். விமானத்திற்க்கும் ஓடு தளத்திற்கும் இடையே உள்ள தூரத்தை துல்லியமாக அவர்கள் கணக்கிடவில்லை. அதனால் அமெரிக்க விமானம் தரையிறங்கும்போது மெதுவாக இறங்கவில்லை. சற்றுக் கடினமான முறையில் தரையிறங்கி மிகச்சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளது அவ்வளவுதான். ஆனால் இது ஈரானின் பாரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

உலகில் உள்ள பல நாடுகளுக்கு மேல் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு நோட்டம் இட்டுள்ளது. இவ்விமானம் ரஷ்ய வான்பரப்பில் கூட பறந்து அங்கும் மண்ணைத்தூவி திரும்பியுள்ள நிலையில் இதனை ஈரான் எவ்வாறு துல்லியமாகக் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்தாமல் தரையிறக்கியுள்ளது என்பது பெரும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

இதனை விடப் பெரியவிடையம் என்னவென்றால் இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டு ஈரான் நாட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஈரான் இராணுவ வல்லுனர்கள் கடுகதி வேகத்தில் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது தான் தெரியவில்லையாம். இவ்விமானம் குறித்து ஏற்கனவே ஈரான் பல தகவல்களைத் தெரிந்துவைத்திருக்கிறதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தற்போது ஆழ்ந்த யோசனையில் உள்ளது. இதற்கான பதிலடியை ஈரானுக்கு எவ்வாறு கொடுப்பது என்பது அமெரிக்காவின் அடுத்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க கைப்பற்றப்பட்ட விமானத்தில் இருந்து அமெரிக்காவில் உள்ள தேசிய பாதுகாப்பு கம்பியூட்டர்களை அல்லது உளவு நிறுவனத்தின் கம்பியூட்டர்களைத் தொடர்புகொள்ள முடியும் என்பதனால் அனைத்துச் சேனல்களையும் அமெரிக்க பென்டகன் பாதுகாப்பு மையம் தற்போது முடக்கியுள்ளதாம்.

நன்றி: அமானுஷ்யம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb