மிருக உணர்ச்சியா ‘அது’?!
[ காம உணர்ச்சியை மிருக உணர்ச்சி என்று சொல்வது தாம்பத்யத்தை கேவலப்படுத்துவதாகும்.]
தம்பதிகளுக்கிடையே உள்ள அற்புதமான புனிதமான உறவை அழுத்தமாக உணர்த்தும் இன்பமயமான உணர்ச்சியை மிருக உணர்ச்சி என்று இழிவு படுத்திக் கூறுவது சரியானதாகாது, பொருந்தாது.
பால் உணர்ச்சியென்பது இல்லாவிட்டால் கணவனுக்கும் மனைவிக்கும் காதல் எப்படித் தோன்றும்?
சரீர உறவின்மூலம் கிடைக்கும் இன்பமே வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. இந்த இன்பத்தை அடையமுடியும் எனும் நம்பிக்கைதான் ஆண் பெண் ஒருவரையொருவர் மணமுடிப்பது எல்லாம்.]
காதலின் முடிவு காமம் தான். சில நேரம் அல்ல பல நேரங்களில் காதலின் ஆரம்பமே காமம் தான். காமம் இல்லையேல் காதல் இல்லை. காமம் இல்லா காதலில்லை. ஆனால் காதலில்லா காமம் உண்டு.
காமம் இல்லையெனில் காதலுக்கு அங்கே வேலையே இல்லை.
ஆண்மையில்லாத ஆணை ஒரு பெண்ணோ, பெண்மையில்லாத பெண்ணை ஒரு ஆணோ காதலிப்பது சாத்தியமே இல்லை.
காம உணர்வின் மூலம் கிடைக்கும் இன்பமே வாழ்வின் அடிப்படைத்தேவையாக இருக்கிறது.
தாம்பத்ய வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடிய பலகோடி இன்பங்களுள் தலையாயது உடல் உராய்வினால் (உடலுறவினால்) அடையும் இன்ப சுகம். இதுதான் கணவன் மனைவி இருவரையும் ஒருமனப்படுத்துவது, பரவசப்படுத்துவது, ஒன்றுபட்டுவாழ வைப்பது. ஒருவருக்காக மற்றவர் தியாகம் செய்யும் மனோவுறுதியைக் கொடுப்பது. இந்த சுகத்தை எதிர்நோக்கியே பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
உணர்ச்சி என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானது. இந்த உணர்ச்சியின் ஆவேசம் ஒருவருக்கு இருந்தால்தான் ஆண் என்றோ, பெண் என்றோ பெருமைப்படுத்திச் சொல்ல முடியும். தேகத்திலுள்ள உயிர் உறுப்பக்களில் உள்ள உணர்ச்சி நரம்புகளாலும், உணர்ச்சியூட்டும் தசைகளாலும், மூலையிலுள்ள இச்சையைத்தூண்டும் சாதனத்தாலும், இறைவனே அற்புத சக்தியை – ஒரு வேட்கையை மானிடர்களுக்குள் வைத்து, செயல்படுத்தி, அதன் மூலம் குடும்பங்கள் செழிக்கவும், தம்பதிகள் சந்தோஷமாக இருக்கவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், உலகம் தழைக்கவும் வைக்கின்றான்.
தன் உணர்ச்சிகளை திருப்திப்படுத்திக்கொள்ள கணவன் எவ்வளவு ஆர்வமுள்ளவனாக இருக்கிறானோ, அதேபோல் தன் மனைவியின் ஆசைகளையும் அவளுடைய முகக்குறிப்பாலேயே அறிந்து, உணர்ந்து மனைவியை திருப்தி செய்ய வேண்டியது கணவனின் கடமையாகிறது.
காம உணர்ச்சியை மிருக உணர்ச்சி என்று கேவலப்படுத்திப் பேசக்கூடிய அத்தனைபேரும் வேஷதாரிகளே! அல்லது அவர்கள் ஆண்மை குறைபாடு உடையவர்களாக இருக்க வேண்டும். காம உணர்ச்சியை மிருக உணர்ச்சி என்று கூறுவது தாம்பத்யத்தையே கேவலப்படுத்துவதாகும்.
பால் உணர்ச்சியென்பது இல்லாவிட்டால் கணவனுக்கும் மனைவிக்கும் காதல் எப்படித் தோன்றும்? சரீர உறவின்மூலம் கிடைக்கும் இன்பமே வாழ்க்கையின் அடிப்படைத் தெவையாக இருக்கிறது. இந்த இன்பத்தை அடையமுடியும் எனும் நம்பிக்கைதான் ஆண் பெண் ஒருவரையொருவர் மணமுடிப்பது எல்லாம்.
இதை மிருக உணர்ச்சி என் கூறுவது சரியானதாகாது, பொருந்தாது :
இதை மிருக உணர்ச்சி என் கூறுவது சரியானதாகாது, பொருந்தாது. எனேனில் மிருகங்களுக்குள்ள உணர்ச்சிக்கும், மனிதர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது. மனிதனுக்கு பகுத்தறிவு – சிந்தனை – கற்பனை என்பவை உண்டு. அதனாலேயே மனிதர்கள் காட்சிகளைப் பார்த்தோ, கற்பனை செய்தோ உணர்ச்சிவசப்படுகின்றனர். மிருகங்களுக்கு அப்படியல்ல. மிருகங்களுக்கு உணர்ச்சி காலம் என்பது இருக்கிறது. பருவ காலத்தில்தான் அவைகளுக்கு உணர்ச்சி தோன்றித் திருப்தி செய்துகொள்ளத்துடிக்கும். மனிதர்கள் உணர்ச்சிவசப்பட தனியாக காலமில்லை, பருவமில்லை, நேரமும் இல்லை. ஆண்களும், பெண்களும் தங்கள் அறிவைக்கொண்டு எவ்வளவோ கட்டுப்படுத்திக்கொண்டு உணர்ச்சிகளை அடக்கியே வாழ்ந்து வருகிறார்கள் என்றே சொல்லலாம்.
மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் மற்றோர் வித்தியாசம் உண்டு. மிருகங்களுக்கு உஷ்ணம் இருக்கும்போதுதான் உணர்ச்சித் தோன்றிக் கூடுகின்றன. எப்போது உஷ்ணம் இருக்கும்? நமது பெண்கள் மாதவிடாயாகும்போது கர்ப்பந்தரிப்பதற்குத் தகுதியுடன் இருப்பதில்லை. அந்த நிலையில் ஆண்களும் அவர்களை அணுகுவதும் இல்லை. ஆனால் மிருகங்களுக்கு அந்த சந்தர்ப்பம்தான் ‘உறவு’ காலமாகவும், கர்ப்பகாலமாகவும் இருக்கிறது.
இன்னுமொரு வித்தியாசத்தை கவனியுங்கள். மிருகங்கள் கூடும்போது குழந்தையைப் பற்றியோ, உறவைப் பற்றியோ எண்ணிப் பார்ப்பதில்லை. அந்த அறிவு அவைகளுக்கில்லை. ஆனால் மனிதர்கள் விஷயத்தில் அப்படியல்ல. குழந்தை உண்டாகலாம் என்று தெரியும். உடலுறவு கொள்வது தனது மனைவியா அல்லது வேறு ஒருத்தியா என்பதும் புரியும். அதுபோலவே அவளுக்கும் வேறுபாடு தெரியும். ஆனால் மிருகங்களுக்கோ தாயென்றும், மகளென்றும் வித்தியாசம் தெரியாது. உணர்ச்சியை திருப்தி செய்துகொள்ளவே அவை கூடுகின்றன. எனவே நமது தாம்பத்திய உணர்ச்சியை மிருக உணர்ச்சி என்று சொல்வதற்கில்லை.
இறுதியாக, மிருகங்கள் கர்ப்பமானதும் மீண்டும் கலவியின்பப் பசி கிடையாது. பருவம் தவறினாலும் உணர்ச்சி கிடையாது. மற்றக் காலங்களில் எல்லாம் பிரம்மச்சாரியத்துடனேயே வாழ்கின்றன. ஆனால் மனிதர்கள் அவ்வாரல்லவே!
-கே. வெங்கடராவ், ‘