ஆணும் பெண்ணும் சமம் என்பது கேலி கூத்து!
ஒரு பெண்ணின் பார்வையில்….
இப்போது ஆண்கள் எல்லாம் கூடி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அதென்னவென்றால் ஆணுக்கு பெண் சமம் என்பதாம்!
எனக்கு அதை கேட்கும் போதுசிரிப்பும் கோபமும் இரக்கமும் வரும். சிரிப்பு, சமுதாயத்தை பார்த்து!
கோபம், பெண்களை பார்த்து! .
இரக்கம், பெண்களை பார்த்து!
பரிதாபம், ஆண்களைபார்த்து!
ஒரு காலத்தில் இந்த ஆண் வர்க்கம் நமக்கு இளைத்த கொடுமைகள் தான் எத்தனை எத்தனை. இன்னும் தொடர்கிறதே அந்த கொடுமைகள்.
1. கிராமங்களில் நம்மை வப்பாட்டியாய் வைத்துக்கொண்டார்கள். அதாவது இவர்கள் வந்தால்நாம் சோறு பொங்கி போட்டு கால் அமுக்கி விட்டு பிறகு பசி கொண்ட வெறி நாய்போல் நம் உடம்பை கிழிப்பார்கள். பெண் தான் இந்த பூமியில் உயர்ந்த படைப்பு. அவள் இயற்கையின் உன்னத படைப்பு.
2. பிறகு அதிகம் படிக்காத படிப்பறிவு இல்லாத பெண்களை வேறு தொழில் செய்ய முடியாதவர்களை ரெக்கார்டு டான்ஸ் ஆட வைத்து ரசித்தார்கள். அதாவது பெண் ஒவ்வொரு ஆடையாக உரித்து ஆடுவாள் இவர்கள் நோட்டு தாள்களை வீசுவார்களாம். அதை நாம் பொறுக்கிக்கொண்டு போய் கஞ்சி காச்சிகுடிக்க வேண்டுமாம். ஏன் இந்த அவலம். பெண்களே கல்வி தான் உங்கள் ஆயுதம். தொழில்கற்றுக் கொள்ளுங்கள். ஆண்களிடம் எப்போதும் கையேந்தும் சூழலுக்கு போகாதீர்கள். அவர்கள் கையேந்தும் பெண்களுக்கு செய்ததை எல்லாம் பார்த்தீர்கள் தானே! இப்போதும் சொல்கிறேன். நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை. ஆனால் சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்கள்.
நான் வரதட்சணை கொடுத்து வாங்கிய மாட்டை கூப்பிடுங்கள் என் ஷூவில் ஏதோ அழுக்கு இருக்கிறது.
அடுத்து வரதட்சணை. அறிவிலி பெண்களே. வரதட்சணை என்பது என்ன. நீங்கள் பணம் கொடுத்து ஒரு மாட்டை வாங்குவதற்கு சமம் தான் வரதட்சணை பெற்று செய்யப்படும் திருமணம். நீங்கள் வரதட்சணை கொடுத்து வாங்கிய மாடு உங்களை அடிமையாய் வைத்திருப்பதை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்? அந்தமாடு உங்களுக்கு சேவை செய்ய வேண்டும். வரதட்சணை பெற்று திருமணம் செய்யும் எல்லா ஆண்களும் மாடுகள். பெண்கள் அவர்களுக்கு மூக்கணாங் கயிறு போட்டு சாட்டையால் அடித்து பாலை பிழிந்து எடுங்கள். எத்தனை வரதட்சணை கொலைகள். எத்தனை கற்பழிப்புகள். எத்தனை ஈவ் டீசிங்க். இன்றுசட்டம் காட்டமாக இருப்பதால் இந்த கூட்டம் தன் வாலை கொஞ்சம் சுருட்டி வைத்திருக்கிறது. இருந்தபோதும் அத்துமீறல்கள்.
அடுத்து பெண்களை பாழாய் போன மூட பழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்களால் எப்படியெல்லாம் அடிமைசெய்து வைக்கிறார்கள் பாருங்கள். பெண் கணவனின் காலில் விழ வேண்டுமாம். அதாவது தான் வரதட்சணை கொடுத்து வாங்கிய மாட்டின் காலில் விழவேண்டுமாம். சிரிப்பு தான் வருகிறது. அடேய் மனசாட்சியே இல்லையே. இதை எல்லாம் ஏன் ஆண்களும் செய்யக்கூடாது.
முன்பெல்லாம் என்ன என்ன ஆட்டம். ஆண் வீட்டிலிருந்து அதை வாங்கி வா இதை வாங்கி வா என சித்தரவதை செய்தார்கள். இப்போது ஒரே ஒரு கம்பிளைன்ட் மொத்த குடும்பத்தையும் ஜெயிலில் போட்டு குத்துவார்கள். நான் மறுபடியும் உரக்க சொல்வேன். இறைவன் படைப்பில் இருவரும் சமமானவர்களே, ஒருவரை சார்ந்துதான் இன்னொருவர் வாழ்வு அமைந்துள்ளது என்பதை என்றைக்கு ஆணினம் புரிந்து நடந்துகொள்கிறதோ அன்றைக்குத்தான் பெண்ணடிமைத்தனம் ஒழியும்.