வழிகேடர்களை அடையாளம் காட்டுவதின் அவசியம்!
சிலர் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம், (வழிகேடர்களை) வெளிப்படையாக அடையாளம் காட்டுவதற்கு தயக்கமாக உள்ளதாக கூறினார்கள்.
அதற்கவர்கள்,” நாம் மௌனமாக இருந்தால், சாதாரண மக்கள் எப்படி, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை அடையாளம் காண்பார்கள்?” என பதில் அளித்தார்.
ஒருவர், தொழுது கொண்டு, நோன்பை நோர்த்து, அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளியில் ஒதிங்கி இருக்கிறார். இன்னுமொருவர், வழிகேட்டின் அழைப்பாளர்களுக்கு எதிராக பேசுகிறார். யார் அவருக்கு அதிகம் விருப்பமுடையவர் என்று, அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கவர், “ஒருவர் தொழுது கொண்டும், நோன்பை நோற்றுக் கொண்டும், பள்ளியில் தனித்திருந்து இபாதத் செய்வதெல்லாம் அவரின் சொந்த நன்மைக்கு மாத்திரமேயாகும்.
ஆனால் அவர் வழிகேடர்களுக்கு எதிராக பேசுவது, முஸ்லிம்களின் பொது நன்மைக்கேயாகும். அதனால் இதுவே சிறந்த செயலாகும்.” என்று பதில் அளித்தார்கள் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் (அஹ்மத் பின் ஹன்பல் அவர்களின் வரலாற்றில்லிருந்து)