Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்களின் முந்தைய நிலை! ஏன், இன்றைய நிலையும்தான்!

Posted on March 26, 2012 by admin

  பெண்களின் முந்தைய நிலை! ஏன், இன்றைய நிலையும்தான்!   

பெண்களை பற்றிய நூல் ஒன்று கண்ணில் தட்டுபட்ட, இப்புத்தகத்தில் பல தகவல்கள் அதிர்ச்சி கலந்தவையாக இருப்பதுடன் ஆச்சர்யமான விஷயங்களும் உள்ளது. ஆண்கள் மீதான வெறுப்புணர்ச்சியை ஆசிரியர் ஆங்காங்கே காட்டியிருக்கிறார். காரணம்? முகாந்திரம் ஏதாவது இருக்கலாம். படியுங்கள்.

‘சரித்திரம் ஆண்களின் வக்கிரத்தால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கோ அங்கு துளியளவு கூட இடமளிக்கப்படவில்லை.’ ஒரு பகுதியில் ஆசிரியர் இப்படி எழுதி இருந்தார். பல சரித்திர சாதனை பெண்களை பற்றி எழுதிய அவர் எழுத்துகளுக்கு மறைவில் தென்படும் வெறுப்புணர்ச்சியின் காரணம் என்னவாக இருக்கும்.

சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் கூட அதற்கு ஒரு காரணமாய் அமையலாம். சரித்திர ஏடுகளில் பெண்களுக்கு பல கொடுமைகளும் நிகழ்ந்திருக்கிறது. அதை பற்றிய தகவல்கள் சிலவற்றை இங்கே காண்போம்.

4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை ‘பாரோ’ என நாம் அழைப்போம். ‘பாரோ’ என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். தன்னைக் கடவுள் எனக் கருதும் ஒரு ஆணால் தண்டனைக் கொடுக்கப்பட்டு, மற்றொரு ஆணின் கையில் கொலையுண்டு போகிறாள் கொடூர முறையில்!

எகிப்திய சரித்திரத்தில் மீண்டும் இக்கொடுரம் ஏற்பட்டது. இம்முறை இரண்டாம் ராம்சேஸ் எகிப்திய ‘பாரோ’வாக இருக்கிறான். அவன் ஒரு கொடுங்கோலன். ராம்சேஸின் மனைவியான ‘ஆஸியா’ அவனை எதிர்க்கும் பொருட்டு அவளுக்கு பல கொடுமைகளை விளைவிக்கிறான். ஆஸியாவை சிறையெடுத்துக் கொடுமைச் செய்கிறான். கடைசியாக குத்துயிரும் கொலை உயிருமாய் இருந்த அவள் மார்பில் ஈட்டியை எய்தி கொல்கிறார்கள்.

மனிதனுக்கு சிந்தனைத் திறன் இருந்தும் அவன் உணர்ச்சிக்கே அதிகமாக இடம் கொடுக்கிறான். நாம் நாகரீகத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்து இருப்பினும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளன. மனிதர்களிடையே பாசம், நேசம், அன்பு என அனைத்தும் குருட்டு நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.

நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன. ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும், பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.

கிரேக்க நாகரீகத்தில் ஏறக் குறைய கி.மு 850 முதல் 480க்குள் பரவலாக நடந்த சம்பவம் உள்ளது. அக்காலகட்டத்தில் பெண் குழந்தைகளை கொலை செய்வது சாதாரண ஒன்றாக இருந்தது. ‘எதென்ஸ்’ மக்கள் பெண் என்பவளை ஒரு மதிப்பற்ற பொருளாகவே கருதினார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாகவும், குழந்தைகளை பெற்றுப் போடவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள்.

கிரேக்கர்களின் பார்வையில், பெண்ணானவள் வீட்டு வேலை செய்பவளாகவும், திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்பவளாகவும் மட்டுமே தெரிந்தாள். கிரேக்க அரசாங்கமும் பெண்களை நாட்டின் சுமை எனக் கருதியது. இதற்கு காரணம் பெண்களால் போரிட முடியாமல் இருந்தது, அரசாங்கத்தை தேர்வு செய்ய ஓட்டு போடும் உரிமையும் பெண்களுக்கு இல்லை. இது போக சொத்துகளை வாரிசு வகிக்கும் தகுதியும் பெண்களுக்கு இல்லை. ‘டெல்பி’யில் இருந்த 6000 குடும்பங்களில் 1 சதவீகிதத்திற்கு குறைவான பெண்களே இருந்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோன்றலுக்கு முன் அரேபிய மக்கள் பண்பினால் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அவர்களை ஜாஹிலியா காலத்து மக்கள் எனக் கூறுவார்கள். ஜாஹிலியா காலத்து ஆண்கள் மிகக் கொடுரமானவர்களாகவும், ஒழுக்கங் கெட்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். பெண்களை தங்களது காம இச்சையை தீர்க்கும் போக பொருளாக பயன்படுத்தினார்கள்.

அவர்களின் உடல் பசியை தீர்த்துக் கொண்ட பின் அப்பெண்ணை அடித்துத் துன்புறுத்துவார்கள். பல இன்னல்களுக்குப் பிறகு அப்பெண்ணிற்கு மிக மலிவான பணத்தைக் கொடுப்பார்கள். அப்பணம் அவளது ஒருவேளை உணவை வாங்குவதற்கே போதுமானதாக இருக்கும். அடுத்த வேளை உணவுக்காக அவள் மீண்டும் ஆணை நோக்கி போவாள். உடலை விற்பனை செய்து, கூடவே வேதனைகளையும் வாங்கிக் கொண்டு பணம் புரட்டுவாள்.

தனது சந்ததியினர் இப்படிபட்ட இழி நிலையினால் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதையே பெற்றோர்களும் நினைப்பார்கள். அதனால் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துவிடுவார்கள்.

கி.மு 580களில் சீன தேசம் ‘கம்பூசியஸ்’ மதத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அக்காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நாட்டின் முக்கிய தலைவர்கள் இறந்து போவாராயின் அவர் மனைவியை புதைக்க மாட்டார்கள் மாறாக அப்பெண்ணின் தொப்புள் முதல் தொடை வரை இரும்பு கலசங்களைக் கொண்டு பூட்டிவிடுவார்கள். தனது வாழ்நாள் முடியும் வரை அப்பெண் மற்ற ஆடவரோடு எந்தத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை பொருட்டு இப்படி செய்வார்கள்.

ஜேக் தீ ரீப்பர்’ பல மர்மக் கொலைகளை செய்த ஆசாமி. 19ஆம் நூற்றாண்டில் பிரிடானிய அரசாங்கத்திற்குத் தலைவலி கொடுத்ததில்லாமல் மக்களையும் பீதியில் ஆழ்த்தியவன். யார் இவன்? ‘ஜேக்’ விலைமாது பித்தன் என அறியப்பட்டான். இவனே நவீன சரித்திரத்தில் முதன் முதலாக பல மர்மக் கொலைகளை செய்தவனாகவும் கருதப்படுகிறான். பெண்களை அனுபவித்த பின் அவர்களின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக நறுக்கி போட்டுவிடுவான்.

இதனை அடுத்தாற் போல் ‘எட்வட் கெய்ன்’ என்பவனும் பெண்களுக்கெதிராக பல கொடூர கொலைகளை செய்திருக்கிறான். அவற்றுள் இரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவனது மர்மமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ‘தீ சைக்கோ’ மற்றும் ‘சைலன்ஸ் ஆப் தீ லேம்ப்’ எனும் இரு ஆங்கில படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.

‘கேய்ன்’ இறந்த பெண்களை தோண்டி எடுத்து அவர்களின் உறுப்புகளை வெட்டி தனது அழகு சாதனமாக வைத்துக் கொள்வானாம். அவன் பிடிபட்ட சமயம் பெண்களின் மர்ம உறுப்புகளை கொண்டு அவன் உருவாக்கிய பல அழகு சாதனப் பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளார்கள். ஜேக் மற்றும் கேய்ன் இருவரும் பைத்தியக்காரர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் பெண் வர்கத்தினருக்கு பெரும் கேடாகவே கருதப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பெண்களின் நிலையை சற்று அலசி பார்த்தோமேயானால் சோகத்தின் சாயல் அங்கும் ஒட்டி இருப்பதைக் காணலாம். பெண்களின் நிலை கேவலப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனைப்படச் செய்கிறது. பல நூறு சீன, கொரிய மற்றும் பிலிபீன்ஸ் தேச பெண்கள் ஜப்பானிய இராணுவத்தின் காம பசிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் அதிகம் பாதிகப்பட்டது சீனர்களே. இதற்குக் காரணம் சீனர்கள் மீது ஜப்பானியர்களுக்கு இருந்த தனிபட்ட வீரோதமேயாகும்.

போரில் ஈடுபடுவது இராணுவமாக(ஆண்கள்) இருந்தாலும் அதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே உரித்ததாய் அமைந்தது. பிள்ளைகளுடன் கைவிடபட்ட தாய் வறுமையில் வாடினாள். அப்படிபட்ட தாய்மார்கள் கொலையுண்ட போது அவர்களின் பிள்ளைகளும் தவிப்புக்குள்ளாகினர்.

1993ஆம் ஆண்டு போஸ்னியாவில் நிகழ்ந்த இன ஒழிப்புப் போர், ‘செச்னீயாவில் 1994ஆம் ஆண்டும் மற்றும் 1996ஆம் ஆண்டு ‘கோசோவோ’வில் நடந்த போர்களிலும் பெண்களே மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் தான் என்ன? பெண்கள் அழிக்கப்பட்டால் சந்ததியனர் உருவாவதை தடுக்க முடியும் என்ற எண்ணமே முக்கிய காரணமாகும்.

இப்போர்களின் சமயம் பெண்கள் மீது வெடி குண்டெறிந்தார்கள், மாதமாய் இருந்தவர்களை உதைத்தார்கள், அவர்கள் வயிற்றைச் சுட்டும் வெட்டியும் கொன்று போட்டார்கள். உதாரணமாக போஸ்னிய போரின் போது பல போஸ்னிய பெண்களை சைபீரியர்கள் கற்பழித்தார்கள். பிறக்கும் குழந்தையின் உடலில் சைபீரியர்களின் இரத்தமும் கலந்திருக்க வேண்டும் என்ற இன வெறியே இதற்குக் காரணம்.

தமிழ் நாட்டில் சில கிராமப் பகுதிகளில் வரதட்சணை பிரச்சனை அதிகமாக இருந்தது. ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை கொலைசெய்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகளுக்கு விவசாய உரமோ அல்லது நெல் மணிகளோ கொடுப்பார்கள், முகத்தை ஈர துணியால் மூடிவிடுவார்கள், கழுத்தை நெறித்தும் அல்லது பசியால் வாட வைத்தும் சாக விட்டுவிடுவார்கள்.

சீன தேசத்தில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது பெண் சிசு கரு கலைப்பு அதிகம் நடந்தது. கருவிலேயே சாகடிக்கப்பட்ட சிசுவை சீன உணவகங்களுக்கு மருத்துவ உணவு செய்யும் பொருட்டு விற்பனை செய்துவிடுவது கொடுமையினும் கொடுமை.

2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாக்கிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் தனது சகோதரன் ஒரு உயர் ஜாதி பெண்ணுடன் ஓடி விட்டான் என்ற குற்றத்திற்காக முக்தார் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை உயர் ஜாதி ஆண்கள் பலர் ஒன்று கூடி கற்பழித்திருக்கிறார்கள்.

இப்படியாக சரித்திரம் தொட்டே பெண்களுக்கெதிரான கொடுமைச் செயல்கள் நடந்து வந்திருக்கிறது. இப்போது நவநாகரிக உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும் பாலியல் கொடுமைகள் ஆங்காங்கெ நடந்த வண்ணமே உள்ளன. மனதின் ஏதோ ஒரு மூலையில் லேசாக ஒட்டிய பயத்துடனே பெண்கள் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினால் மிகையாகாது.

பெண்களை பொம்மை எனக் கருதுவதை தவிர்க்க வேண்டும். அவர்களும் உலக வாழ்க்கையின் முக்கிய அங்கமென கருதப்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினராகவும், உறவினராகவும் பார்க்கப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும்.

நாமும் ஒரு தாயின் வயிற்றில் தான் பிறந்திருக்கிறோம் என்பதை நினைவு கொள்ளவேண்டும்.

அதைவிட முக்கியம் மதமாச்சர்யம் மீறி இஸ்லாம் வழங்கும் கட்டுப்பாடு பெண்களுக்கு மிக முக்கியமான, அதே சமயம் முதல்தர பாதுகாப்பு என்பதை உணரவேண்டும்,ஏனெனில் இஸ்லாமிய சரித்திரத்தில் மட்டும் தான் பெண்களுக்கு சிறிது கூட தீங்கிழைப்பட்டதில்லை.

source: http://tamilhome.blogspot.in/search?updated-max=2009-07-22T13:14:00-07:00&max-results=20

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 9

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb