‘இல்ம்’ என்பது மார்க்க கல்வியா? துனியாவின் கல்வியா?
[ இன்று பிள்ளைகள் கெட்டிக் காரர்களாக இருந்தால் எந்த பாடசாலையில் சேர்ப்பது என்று தேடி அலையும் பெற்றோர் ஒரு புறம், பிள்ளை சரியான குரும்புக்காரனாக, அடாவடித்தனம் மிக்கவனாக இருக்கிறான் என்றால் எந்த மத்ரஸாவில் சேர்ப்பது என்று தேடி அலையும் பெற்றோர் இன்னொரு புறம்.
படிப்பே ஏறாத மக்குகளை தான் மார்க்கம் படிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இந்த மக்கு மக்கள் மௌலவிகள் ஆகி மார்க்க பிரச்சாரம் வேறு செய்கிறார்கள்.
சரி கல்வி என்று பட்டதாரிகள் ஆகி விட்டவர்களை பார்த்தால் அவர்களுக்கு தொழுகைக்கே நேரமில்லை. இன்னும் அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்றே தெரியாத அளவில் தான் அவர்கள் இருக்கிறார்கள். என்ன அநியாயம்!!
இன்னும் சிலர், உலகின் எல்லா மொழிகளையும், கலைகளையும் முறையாக படிப்பார்கள், ஆனால் மார்க்கத்தை மட்டும் சொந்தமாக இந்த அரை குறை மௌலவிகளின் புத்தகங்களை படித்து, மார்க்கத்தை பற்றி தாறுமாறாக விவாதித்து அலைவார்கள். எதற்கு எடுத்தாலும் வா விவாததிற்கு என்ற விவாத அழைப்பு.
கடமையாக்கப்பட்ட மார்க்க கல்வியை முறையாக கற்பதை விடவும் உலக கல்வியை கற்று அதனை இன்னும் மேம்படுத்த அயராத உழைப்பு . எல்லா புத்தக கண்காட்சிக்கும் சென்று எல்லா புத்தகங்களையும் வாங்கி வீட்டில் அடுக்குவான் ஆனால் அவனிடம் அல் குர் ஆனையும் ஸுன்னாவையும் சுமந்த இமாம்களின் புத்தகம் ஒன்று இருப்பதே அரிது.]
கல்வி என்று எல்லோரும் துள்ளிக் குதிக்கிறார்கள். கல்விக்கு முதலிடம் கொடுங்கள்.. கல்வியை தேடி படியுங்கள் என்றெல்லாம் கூறி அல் குர்ஆனிலும் சுன்னாவிலும் இல்ம் என்ற சொற்றொடருடன் சம்பந்தப் படுத்தி கூறப்பட்டுள்ள வசனங்களையும் ஹதீதுகளையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு தடுமாறுகின்றார்கள் .
அல் குர் ஆனும் சுன்னாவும் எடுத்தியம்புகிற இல்ம் என்ற கல்வி இந்த உலகக் கல்வியை தான் குறிக்கிறதா? பிரயோசனமான இல்ம் என்று சொல்லப்படுவது இந்த உலகக் கல்விக்கு முதலிடம் கொடுக்கிறதா? அல்லது மார்க்க கல்விக்கு முதலிடம் கொடுக்கிறதா?
சற்று உன்னிப்பாக கவனித்தால், இது மார்க்க கல்விக்கே முதலிடம் கொடுக்கிறது. இமாம் இப்னு கையும் அல் ஜவ்சியா ரஹீமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் “இல்ம் என்பது அல்லாஹ் சொன்னது, அவனுடைய ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஆனால் இன்று மார்க்க கல்வி ஒரு புறம் தள்ளி வைக்கப்பட்டு உலகக் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது மிகப் பெரும் அநியாயமாகும். கல்வியை தேடிப் படிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்று இஸ்லாம் கூறுகிறது.
இந்த வாஜிபான விடயம் கணிதம், விஞ்ஞனம் படிப்பதை குறிக்கிறதா அல்லது மார்க்கத்தைப்படிப்பதை குறிக்கிறதா? நிச்சயமாக இது மார்க்கத்தை படிப்பதை தான் குறிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஆனால் இன்று முஸ்லிம்கள் மார்க்கம் படிப்பது வாஜிப் என்பதையே மறந்து விட்டு உலக கல்வியை தேடுவதில் ஈடுபட்டு மார்க்கத்தையே மறந்தது மட்டுமில்லாமல் தாம் முஸ்லிம்கள் என்பதையே மறந்து விட்டனர்.
இன்று பிள்ளைகள் கெட்டிக் காரர்களாக இருந்தால் எந்த பாடசாலையில் சேர்ப்பது என்று தேடி அலையும் பெற்றோர் ஒரு புறம், பிள்ளை சரியான குரும்புக்காரனாக, அடாவடித்தனம் மிக்கவனாக இருக்கிறான் என்றால் எந்த மத்ரஸாவில் சேர்ப்பது என்று தேடி அலையும் பெற்றோர் இன்னொரு புறம்.
படிப்பே ஏறாத மக்குகளை தான் மார்க்கம் படிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இந்த மக்கு மக்கள் மௌலவிகள் ஆகி மார்க்க பிரச்சாரம் வேறு செய்கிறார்கள். உருப்படுமா எமது சமுதாயம்?
சரி கல்வி என்று பட்டதாரிகள் ஆகி விட்டவர்களை பார்த்தால் அவர்களுக்கு தொழுகைக்கே நேரமில்லை. இன்னும் அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்றே தெரியாத அளவில் தான் அவர்கள் இருக்கிறார்கள். என்ன அநியாயம்!!
இன்னும் சிலர், உலகின் எல்லா மொழிகளையும், கலைகளையும் முறையாக படிப்பார்கள், ஆனால் மார்க்கத்தை மட்டும் சொந்தமாக இந்த அரை குறை மௌலவிகளின் புத்தகங்களை படித்து, மார்க்கத்தை பற்றி தாறுமாறாக விவாதித்து அலைவார்கள். எதற்கு எடுத்தாலும் வா விவாததிற்கு என்ற விவாத அழைப்பு.
இன்னும் சிலர், தனது அறிவியல் அறிவை குர் ஆனின் விளக்கமாக நிருபிப்பதற்கு அயராத முயற்சி. அதுவும் இறை நிராகரிப்பாளர்களின் கண்டு பிடிப்புகளை அல்லாஹ்வின் வார்த்தையை கொண்டு நிரூபிக்க முயச்சி.
இவர்களது கண்டு பிடிப்பும் அல்லாஹ்வின் வசனமும் ஒரே மாதிரியாக இருந்தால், அல்லாஹ் இதைதான் குறிப்பிடுகிறான் என்று ஒரு வாதாட்டம், நிரூபிக்கப்பட்ட உண்மை என்று பிடிவாதம் பிடிப்பான்.
ஆனால் எத்தனையோ நிரூபிக்கப்பட்ட உண்மைகள் பிற்காலத்தில் பிழையென அவர்களே நிருபித்துள்ளனர். இது இன்னொரு அறியாமையும் அநியாயமும்.
இவ்வாறு கடமையாக்கப்பட்ட மார்க்க கல்வியை முறையாக கற்பதை விடவும் உலக கல்வியை கற்று அதனை இன்னும் மேம்படுத்த அயராத உழைப்பு . எல்லா புத்தக கண்காட்சிக்கும் சென்று எல்லா புத்தகங்களையும் வாங்கி வீட்டில் அடுக்குவான் ஆனால் அவனிடம் அல் குர் ஆனையும் ஸுன்னாவையும் சுமந்த இமாம்களின் புத்தகம் ஒன்று இருப்பதே அரிது.
இவ்வாறு கல்வியின் பெயரால் தூய்மையான, வாஜிபான கல்விக்கே ஆப்பு வைக்கிறார்கள். இன்னும் எல்லா வழிகெட்ட கலாசாலைகளையும் குறிப்பிட்டு அறிமுகம் செய்து மங்கியிருந்தவைகளையும் உயிர்பித்து விடுவார்கள்.
கல்வின் பெயரில் இஸ்லாமிய கல்வியை அழித்துக் கொண்டு வருகிறார்கள். முறையாக மார்க்கம் படிப்பிக்கபடும் இடங்களையும் அறிஞ்சர்களையும் பற்றி, அவதூறுகளை பரப்பி சமூகத்தில் இருந்து ஒதுக்கியும் மறைத்தும் விடுவார்கள்.
-தமிழ் ஸலஃபி