Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆண் பெண் தொடர்பாடல்

Posted on March 22, 2012 by admin

 ஆண் பெண் தொடர்பாடல் 

நூலிலிருந்து...

[ இஸ்லாமிய சமூகங்களில் பெண்களின் பிரச்சினைகளைப் போல் சத்தியமும் அசத்தியமும், சரியும் பிழையும், அதி தீவிரப் போக்கும் அளவு மீறிய நெகிழ்வும் கலந்து குழம்பிப் போன பிரச்சினை வேறெதுவும் கிடையாது.

உண்மையைக் கூறுவதாயின், எந்த மதமும், இலட்சியவாத அல்லது யதார்த்தவாத தத்துவமும் எதுவுமே இஸ்லாத்தைப் போல் பெண்ணை கண்ணியப்படுத்தி, நீதி வழங்கி அவளைப் பாதுகாக்கவில்லை.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது பெண் தொழில் செய்வது ஆகுமானது. சிலசமயம் அவ்வாறு தொழில் செய்வது சுன்னாஹ்வாக அமையலாம். சிலசமயம் கடமையாகலாம் (வாஜிப்). எடுத்துக்காட்டாக, ஒரு விதவைப் பெண் அல்லது விவாக விடுதலைபெற்ற பெண் இவர்களுக்கு வருமான வழியோ, உழைத்துக்கொடுக்க யாரும் இல்லை எனவோ கொள்வோம். பிறரிடம் கை நீட்டி இழிவுபடாத நிலையில் உழைக்கும் தகுதி இருக்கிறதென்றால் இவர்கள் உழைத்து உண்பது கடமை (வாஜிப்) ஆகும்.]

இந்நூல் எமது காலத்தில் வாழும் பெண்களோடு தொடர்புடைய சட்டவியல் கருத்துகள் (ஃபத்வா) சிலவற்றை அடக்கியுள்ளது.

அனைத்தும் நமது காலத்தில் வாழும் பெண்களோடு தொடர்புடையவை.

பெண் குறித்த வாதப் பிரதிவாதங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவை ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன. குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெண்ணுக்குள்ள பாரிய பங்களிப்பே அதற்கான காரணமாகும். பெண் சீராக அமையாவிட்டால் குடும்பம் சீர்பெறாது; சமூகமும் சீர்பெறமாட்டாது. இதற்கு முன் வெளிவந்த இன்னொரு சிறுநூலில் மனிதன், பெண், தாய், மகள், மனைவி, சமூக அங்கத்தவர் என்ற வகையில் பெண்ணின் அந்தஸ்து என்ன என்பதை விளக்கி னோம். இன்னொரு நூலில், நூதனம் (பித்ஆ) எனக் கூறுபவர்களுக்கும் வாஜிப் எனக் கூறுபவர்களுக்கும் இடையில் முகத்தை மூடி அணியும் பர்தா என்ற கருத்தை விளக்கினோம்.

இந்நூலில் அடங்கியுள்ள கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும் இக்காலப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மிகத் தேவையானவை. அதாவது, மார்க்க விஷயத்தில் கவனம் செலுத்துபவர்கள், தங்கள் இரட் சகனைத் திருப்திப்படுத்த வேண்டும் என விரும்புவோர், இறைவன் ஆகுமாக்கியவை எவை, தடை செய்தவை எவை எனக் கவனம் செலுத்துவோருக்கு இத்தீர்வுகள் மிகவும் அவசியமானவை.

‘பெண்கள் ஒரு பெரும் சோதனை’, ‘ஆண்களைப் பொறுத்தவரையில் மிகக் கூடுதலாகத் தீங்கு தரும் சோதனையாக பெண்களே உள்ளார்கள்’ போன்ற வாதங்களின் பொருளென்ன? சில மார்க்க பக்தி கொண்டோர் மத்தியில் பரவலான கருத்தாகக் கொள்ளப்படுகின்ற பெண்ணின் குரல் மறைக்கப்பட வேண்டிய ஒன்று என்பது உண்மையா?

ஓர் ஆண் பெண்ணைப் பார்ப்பது, பெண் ஆணைப் பார்ப்பது பற்றி இஸ்லாத்தின் தீர்வு என்ன?

பெண்களுக்கு ஸலாம் சொல்லலாமா? குறிப்பாக அண்டை வீட்டார், ஆசிரியர் போன்ற உறவு கொண்டோரைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

திருமணம் முடிக்க ஆகுமான ஒரு நோயாளியான ஆணை ஒரு பெண் நோய் விசாரிக்கச் செல்லலாமா? அவ்வாறே ஓர் ஆண் நோயாளியான ஒரு பெண்ணைப் பார்க்கச் செல்லலாமா?

ஒரு பெண் வீட்டுக்கு வெளியே தொழில் செய்வது குறித்து இஸ்லாத்தின் தீர்வென்ன? அது ஆகுமாயின் இஸ்லாம் அதற்கு விதிக்கும் கட் டுப்பாடுகள் யாவை?

மார்க்கப் பற்றுக் கொண்ட தனது மறுமை வாழ்வு குறித்து மிகுந்த கவனம் செலுத்தும் எந்த முஸ்லிம் பெண்ணும் இக்கேள்விகளை முக்கியமானதாகக் கருதுவாள்; பதிலைத் தேடுவாள். தான் நம்பிக்கை வைக்கின்ற இஸ்லாமிய அறிஞரிடத்தில் இதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புவாள்.

அல்-குர்ஆன், சுன்னாஹ்வின் அடிப்படையில் மனித நலன்களை நிறைவு செய்வதில் ஷரீஆவின் நோக்கங்களைக் கவனத்தில் கொண்டு இங்கு நாம் இக்கேள்விகளுக்கு பதில்களை வழங்கியுள்ளோம். மனி தர்களை வைத்து சத்தியத்தை அறியக்கூடாது. சத்தியத்தின் மூலமே மனிதர்களை அளவிட வேண்டிய மனோ நிலையில் இவற்றை நீங்கள் வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஃபத்வா வழங்கும்போது இலகுபடுத்தலை நாம் கவனத்தில் கொள் வதைப் பார்த்து நாம் யாருடையவாவது மனோ இச்சைகளைப் பின்பற் றுகிறோம் என நினைத்துக் கொள்ள வேண்டாம். ஷரீஆ கடினப்படுத் துவதன் மீதல்ல இலகுபடுத்தலின் மீதே அமையப் பெற்றுள்ளது. திட்டவட்டமாக கடினப்படுத்துதல் அதன் சட்டங்களுக்குப் புறம்பா னது என்பதுதான் இந்த முறையை நாம் கடைபிடிக்கக் காரணம். ஓர் அறிஞர் ஷரீஆவை ஆழ்ந்து கற்கக் கற்க அதன் இலகுத்தன்மை அவ ருக்குப் புரிகிறது. எல்லாக் காலங்களிலும் இடங்களிலும் வாழும் மனிதர்களின் தேவைகளை அது முழுமையாக நிறைவு செய்கிறது என்றும் அவரால் புரிய முடியும். இதனை நாம் ஆழ்ந்து ஆராய்ந்த போது புரிந்து கொண்டோம். இமாம் இப்னு கையிமின் வாசகத்தில் சொன்னால் ஷரீஆ பின்வருமாறு அமைந்துள்ளது:

அது ஒரு முழுமையான அருள்; முழுமையான நீதி; முழுமையான ஞானம்; முழுக்க முழுக்க நலன்களின் மீது அமைந்துள்ளது. ஏதாவதொரு தீர்வு அருள் என்ற பண்பை விட்டு அதற்கெதிர் நிலைக்குச் செல்லுமானால், நீதியை விட்டு அநீதியைத் தருமானால், ஞானத்தை விட்டு விளையாட்டாக அமையுமானால், நலன் பயத்தலை தவிர்த்து தீங்கு விளைவிக்குமானால் வலிந்து, விளக்கங்கள் கொடுத்து ஷரீஆவின் உள்ளே புகுத்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பினும் அது ஒருபோதும் ஷரீஆவைச் சேர்ந்ததாக மாட்டாது.

இறைவா! வானங்கள் பூமியைப் படைத்தவனே. புலன்களுக்கு உட்பட்டவற்றையும் மறைவானவற்றையும் அறிந்தவனே! நீ உன்னுடைய அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள விஷயங்களில் தீர்ப்பளிக்கிறாய். உன்னருளால் — சத்தியத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பகுதிகளில் — எம்மை நேர்வழி நடத்துவாயாக. நிச்சயமாக நீ விரும்பியோரை நேரான வழிக்கு நீ இட்டுச் செல்கிறாய்.

நூலின் பக்கங்கள்:.56 / விலை Rs 25

– யூசுஃப் அல்-கர்ளாவி (ஹி. 1416, அக்டோபர் 1995)

source: http://www.mellinam.in/bookdetails/aanpen.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 31 = 36

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb