தாவத் நெருக்கடிகள் !
[ ஐம்பது ஆண்டுகள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் மத பிரச்சார பீடங்களை அலங்கரித்தவர்கள் ஒரே ஒருவரையும் இஸ்லாம் மதத்துக்குள் நுழைக்கவில்லை. களப்பணி காட்டும் உண்மை புள்ளிவிவரம் இது.]
இந்துக்களை முஸ்லிமாக மாற்றுவது, தாவத் பணி இலக்கு.
அரசாங்கம் இந்துக்களின் பெரும் ஆதரவில் நிலைநிறுத்தப்படுகிறது.
மதமாற்றம் சொல்லாட்சி மிகக் குறுகலானது. சிக்கலை வரவழைக்கும். காவல்துறை, நீதிமன்றம், பாயும். முகமூடி தேவைப்படுகிறது. ‘‘அழைப்புப் பணி’’ சொல் பயன்தருகிறது. பாதுகாப்பு கிடைக்கும்.
இந்து சமுதாயத்தில் ஒருவரும் மதம் மாற தயாராயில்லை.
குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள் அரசின் பல சலுகைகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டுள்ளனர். பண வசதி, வேலை வாய்ப்பு, கல்வி, விடுதி சலுகை, கடன் தள்ளுபடி, சுகத்தை தியாகம் செய்ய யாரும் விரும்புவதில்லை.
எண்பது ஆண்டுகள் முன்னர், ‘‘மேடை முதலாளிகள்’’ நெல்லை சுற்றுப்புற மாவட்ட பகுதிகளில் மத மாற்றம் செய்தனர். தொடர்ந்து வந்த மாநில, மத்திய அரசுகள் தாழ்த்தப்பட்ட குடிகளை கல்வி, பொருளாதார நிலைகளில் உயரே தூக்கி நிறுத்தின. மதமாற்றம் அவசியப்படவில்லை.
இந்துக்களாக பிறந்தவர்கள் இந்து மதத்தில் வாழ தலைப்படுகின்றனர். இஸ்லாம் சமயத்தில் நுழைய வலிமையான காரணங்கள் தேவைப்படுகின்றன. செட்டியார், பிராமணர், முதலியார், தேவர், வன்னியர் இனமக்கள் இஸ்லாம் மதத்துக்குள் நுழைவதில்லை. தாவத் இயக்கங்கள் தாராளமாக வெள்ளை அறிக்கை வெளியிடலாம்.
‘‘லாஇலாஹ இல்லல்லாஹ்’’ கூறினால் போதும். இந்து முஸ்லிமாகி விடுவார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாரின் இனிய பண்புகளை கடைப்பிடிக்கலாம். ஆன்மீகம், வளர்ச்சி பெறும்.
ஆனால் முஸ்லிம் மத குருமார்களில் ‘‘கலிமா’’ விளக்கம் கூற அனுபவசாலிகளில்லை. தனித்த சம்பவங்கள், வரலாற்று நிகழ்வுகள், சடங்கு திணிப்புகளை பிரச்சாரமாக்குகின்றனர்.
அனைத்து தமிழர்களுக்கும் பொதுவான கலிமா பிரச்சாரம் துளிர்விடவில்லை.
இறைவனுக்கும் மனிதனுக்குமுள்ள தொடர்பு பதினோரு ஆண்டுகள் வலியுறுத்தப்பட்டன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாரின் முன்னோடி வழிகாட்டுதல் தமிழகத்தில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.
கலிமா விளக்கம் முஸ்லிம்களுக்கே தெரியாது. இதனை எவ்வாறு இந்துக்கள் மீது திணிக்க முடியும்.
சவூதி சில்லறை முப்பது ஆண்டுகளாக தாவத் துறையை செழிக்க வைத்துள்ளது. கூலிக்கார இயக்கவாதிகளை வைத்துக் கொண்டு கலிமா பிரச்சாரம் எடுபடாது.
ஐம்பது ஆண்டுகள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் மத பிரச்சார பீடங்களை அலங்கரித்தவர்கள் ஒரே ஒருவரையும் இஸ்லாம் மதத்துக்குள் நுழைக்கவில்லை. களப்பணி காட்டும் உண்மை புள்ளிவிவரம் இது.
தாவத் துறை தமிழகத்தில் இம்போர்டட் துறை. இறக்குமதி கொள்கை. கலிமா விளக்கம் பெற முஸ்லிம் சமுதாயம் நஸீபு பெறலாம். பிறகு தாவத் – அடுத்தவர் தலையில் இஸ்லாத்தை திணிக்கலாம்.
-ஆணங்காச்சி ரசூல், நவம்பர் முஸ்லிம் முரசு 2011
source: http://jahangeer.in/