Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறை வழிகாட்டுதலும், மனித பின்பற்றுதலும்! எங்கே தவறு?

Posted on March 15, 2012 by admin

இறை வழிகாட்டுதலும், மனித பின்பற்றுதலும்! எங்கே தவறு?

மதங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவானவையாக இருப்பினும் அதனைப் பின்பற்றுவோர் அனைவரும் நல்லவர்களாக இல்லையே…? -அப்படியென்றால் மதங்களின் ஊடான கடவுளின் ஆளுமை மக்கள் மீது இல்லையா…? தவறு செய்யும் மதம் சார்ந்த நபர்களை பார்க்கும்போது…

கடவுள் ஏன் அவர்களை தண்டிக்கவில்லை அப்படி

கண்டிக்காத கடவுள் நமக்கு ஏன் இருக்க வேண்டும்?

இப்படி ஒரு பொது நிலை கேள்வி எல்லோர் மனதிலும் உதிப்பது இயல்பே…

பொதுவாக மதங்களை நோக்கி இக்கேள்வி முன்வைக்கப்பட்டாலும் இஸ்லாம் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என பார்ப்போம்!

இஸ்லாத்தை பொருத்தவரை ஒரு செயலை முன்னிருத்தி அதை எப்படி நன்மையாக மேற்கொள்வது என்ற வழிமுறையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அத்தோடு அச்செயலுக்கு மாறாய் உண்டாகும் எதிர்விளைவையும் விளக்கி அதற்குண்டான பிரதிபலன்களையும் தெளிவாய் மக்கள் முன்னிலையில் பிரகனப்படுத்துகிறது.

ஆக எந்த ஒரு செயலையும் மிக தெளிவாக மனித சமூகத்திற்கு விளக்கி பின்னரே அவற்றை செய்யவோ, தவிர்க்கவோ பணிக்கிறது.

அவ்வாறு மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் இறைவனின் வழிக்காட்டுதலை மையமாக வைத்து தங்களின் சுய அறிவை பயன்படுத்த சொல்கிறது.,

ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என்ற வழியும் அச்செயலை செய்வதால் எற்படும் சாதகம்/பாதகம் குறித்த அறிவும் மிக தெளிவாய் நமக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.

இவற்றை வைத்து எந்த செயலையும் ஏற்று செய்வதாக இருப்பீனும் விட்டு விலகுவதாக இருப்பீனும் கடவுளின் போதனைகளை அடிப்படையாக வைத்து நாம் சிந்தனைரீதியான முடிவுகளை எடுக்க முடியும்.

ஆக ஒரு செயலுக்கு முழுமுதற் காரணகர்த்தா கடவுளாயினும் மேற்கொள்ளும் செயல்கள் குறித்த முடிவுகள் நமது சிந்தனையிலே விடப்படுவதால் அவற்றிற்கு முழுப்பொறுப்பு நாம் தாம் என்பது தெளிவாகிறது.

அவ்வாறு இருக்கும் போது மனிதன் சிந்தையில் ஏற்படும் தீமையான எண்ணங்களால் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு அவனே காரணம். மாறாக கடவுளல்ல…! (விதி என்ற நிலைப்பாட்டை குறித்து இங்கு சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க)

அதாவது கடவுளோ….

கொலை செய்யாதே

விபச்சாரம் புரியாதே

வட்டி வாங்காதே

பிறரை ஏமாற்றதே…

ஒழுக்கமாய் இரு…

என தம்மை வணங்கி வழிபடும் மக்களுக்கு போதனைகளை வழங்கினால்…

கொலை செய்து

விபச்சாரம் புரிந்து

வட்டி வாங்கி

பிறரை ஏமாற்றி

ஒழுங்கின்றி அலையும்

மக்களாக இருந்தால்… அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எப்படி கடவுள் பொறுப்பாவார்?

கடவுளோ மேற்கண்டவற்றை செய்யாதே என்று சொல்வதோடு அஃது செய்பவன் முறையாய் இறையை பின்பற்றுபவன் அல்ல என்றே பணிக்கிறார். ஒரு கொள்கையே ஏற்பதென்பது அதனை தமது நடைமுறை வாழ்வில் பின்பற்ற தகுந்த தருணங்கள் அனைத்திலும் செயல்படுத்துவதே.

அவ்வாறு இருக்கும் போது கடவுளை ஏற்பதாவோ அல்லது அவனது போதனைப்படி வாழ்வதாகவோ இருந்தால் அவனது சொல்லுக்கு மாறு செய்யா வாழ்வை வாழ வேண்டும். ஆனால் தங்களின் சுய நலத்திற்காக கடவுளின் சொல்லை புறக்கணித்து சமூகத்திற்கு தீமை ஏற்படுத்தினால் அவன் கொண்ட கொள்கைக்கே மாற்றமானதாக அவன் நிலை இருக்கும். அதாவது

கடவுளை ஏற்காதவர் எப்படி இறை நம்பிக்கையாளர் என்று அழைக்கப்பட மாட்டானோ அதைப்போல கடவுளை ஏற்று அவனது போதனைகளின் படி வாழ்வை அமைக்காத அல்லது அவனது போதனைகளுக்கு மாறு செய்து வாழ்பவன் எப்படி கடவுளை ஏற்பவன் என்ற வட்டத்திற்குள் வைத்து பார்க்க முடியும்.? அவனை ஒரு முழுமைப்பெற்ற இறை நம்பிக்கையாளனாக ஏற்க முடியாது.

ஏனையவர்களை விட மதரீதியான குறியீடுகளால் ஒருவன் சமூகத்தில் அடையாளப்படுத்தப்படும்போது அவன் செய்யும் தவறுகள் திரிபு அடைந்து கடவுளின் நீததன்மையின் மேல் பழிப்போட வழிவகுக்கிகிறது! கடவுளின் கூற்றுக்கு மாறு செய்யும் எவரையும் கடவுளை பின்பற்றுவோராக இனியும் இச்சமூகத்தில் முன்மொழியக்கூடாது மாறாக இறைச் சொல்லுக்கு மாறுசெய்வோர் இறை நிராகரிப்பாளர் என்றே அடையாளப்படுத்தப்படவேண்டும்!

அப்படினா…. கடவுள் இவ்வாறு கொலை, கொள்ளை &Etc தவறுகள் செய்யும் மனிதர்களை ஏன் ஒண்ணும் செய்வதில்லை….?

நல்ல கேள்வி!

இதற்கு இஸ்லாம் கூறும் இறை வழிக் கோட்பாடுகள் என்ன பதில் வைத்திருக்கிறது என முதலில் பார்க்கவேண்டும். பின்னே நமது நிலைப்பாட்டை அதில் பொருத்த வேண்டும். ஆனால் இக்கேள்வியே கேட்கும் பலரும்.. அதற்கான பதிலை தாங்களே வைத்திப்பதுப்போல…

நானே இவ்வளவு நாள் கடவுளை கன்னாபின்னாவென்று திட்டிக் கொண்டிருக்கிறேன். இதுவரை என்னையே ஒண்ணும் செய்யவில்லையே உங்கள் கடவுள்…?

மனிதனின் சுய நிலை எண்ணங்களின் வாயிலாக ஒரு செயலின் முடிவை தீர்மானிக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதால் அவசரத்திலோ, ஆத்திரத்திலோ தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. கடவுள் உடனுக்குடன் அவர்களுக்கு தண்டனை வழங்கினால் பின்னாளில் அவர்களின் தவறுகளுக்கு திருத்திக்கொள்ள வாய்ப்பும் இருக்காது.

மேலும் மக்களில் சிலர் வேண்டுமென்ற தவறுகள் செய்த போதிலும் அவர்களுக்கும் சிறு அவகாசம் கொடுக்கப்படுதற்காகவே காலம் தாழ்த்தப்படுகிறது. இதை தன் மறையில் இறைவன்

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் – அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். (16:61))

என தெளிவாக பிரகனப்படுத்துகிறான். மாறாக உடனே தண்டிக்கவில்லை என்பதற்காக இறைவன் இல்லையென்றாகி விடாது. ஏனெனில் மனித தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கினால் மட்டும் தான் கடவுள் இருப்பது உண்மையென்றால் அதற்கு பகரமாக தவறுகள் செய்யா நிலையிலேயே மனிதர்களை இயல்பாகவே கடவுள் படைத்திருக்கலாம். அதுவும் அனைவரையும் முஸ்லிம்களாகவே!

இறைவனை வணங்கி குற்றமிழைக்காத மக்கள் மட்டுமே இப்பூவியில் இருப்பர். அப்படி நன்மை செய்பவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தீமையை தவீர்த்து வாழ சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.

தீமையும் -நன்மையும் கலந்த வாழ்வில் தனக்கு பாதகமாக இருப்பீனும் அத்தகைய சூழ்நிலையிலும் நன்மையே மட்டுமே மேற்கொண்டு ஒரு மனிதன் வாழ்கிறானா என சோதிக்கப்படுவதற்கே இவ்வுலக வாழ்க்கை!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

source: http://iraiadimai.blogspot.in/2012/01/blog-post_17.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

44 + = 45

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb