Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மணங்கள் மணக்க மனங்கள் மாறட்டும்

Posted on March 10, 2012 by admin

  மணங்கள் மணக்க மனங்கள் மாறட்டும் 

பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமின்றி அனுபவிக்கலாம். (அல்குர்ஆன்: 4-4)

பிற மதங்களில் இறைவைன (இறைவனின் பொருத்தத்தை) அடைதலை முத்தி நிலை என்கிறார்கள். இதனை அடைய ஆசைகளை துறத்தல் ேவண்டும். இல்லற வாழ்க்கையை வாழ்ந்தோ வாழாமலோ அனைத்தையும் துறந்த பின்பே ஆண்டவனை அடைய முடியும் என்கிறார்கள்.

இயற்கை மார்க்கமான இஸ்லாத்தில் துறவரம் என்பதே இல்லை. திருமணம் செய்யாதவர் நம்மை சார்ந்தவர் அல்ல என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லியிருக்கிறார்கள். முற்றும் துறந்த (என கூறிக்கொள்ளும்) மத போதகர்கள், மத குருக்கள், அப்பாக்கள் ஆடிய ஆட்டங்களை கண்டு பத்திரிக்கை வடித்த செய்திகள் பல பக்கங்களை நிறைத்தன. இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

மனிதனின் இயற்கை உணர்வுகளை மதித்து குடும்ப வாழ்க்கையை ஒரு இபாதத்தாக (வணக்கமாக) இஸ்லாம் கூறுகிறது. ஆனால் அப்படிப்பட்ட மணவாழ்க்கையின் தொடக்கமான திருமணத்தில் உலவும் பழக்க வழக்கங்கள் நம்மை மலைக்க வைப்பதோடு கலங்கவும் ைவக்கின்றன.

“வரதட்சணை, கைக்கூலி, வச்சுகொடுத்தல், சீர்வரிசை, பலகாரங்கள், நகைகள், வாகனங்கள், பரோட்டாக்கள் மற்றும் பிரியாணிகள்” என்ற வழக்கமான வழியிலிருந்து மாறி வெளிநாடு செல்ல விசா என்ற முறை ஏற்பட்டது. இப்போது ெவளிநாட்டில் வசிக்கும் “பசையான” ெபற்றோர்கள் தங்களது மக்களை மணந்தால் ெவளிநாட்டு PR [வெளி நாட்டில் தங்கும் நிரந்தரவாச தகுதி] என்ற ேபரம் ேபசுதலும் நம் காதுகளில் விழாமல் இல்லை.

ஆடம்பரம், பகட்டு, படோடபம் இவைகள்தான் இன்றைய திருமணங்களில் காணப்படுகின்றன. அன்று நாயகத்தின் தோழர் நறுமணம் பூசி வருவதைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், என்ன நண்பரே தங்களிடம் நறுமனம் வீசுகிறதே என கேட்க , நேற்று தான்எ னக்கு திருமணம் நடந்தது என கூறுகிறார். நாயகத்தின் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்த தோழர்கள் நாயகத்திடம் கூட கூறாமல் எளிமையாக திருமணம் செய்தார்கள்.

திருமணங்களில் ெபரும்பாலும் பண பொருத்தத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை நான்கு விசயங்களுக்காக மணமுடிக்கலாம், ஆனால் அப்பெண்ணிடம் உள்ள மார்க்க பற்றுக்காக மணமுடியுங்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றுள்ளார்கள். ஆனால் இன்றோ மணமகளின் பெற்றோரிடம் உள்ள நாணயத்திற்காக [பணத்திற்காக] மணமுடிக்கலாம் என கருதுகிறார்கள்.

மணமக்களின் ெபற்ேறார்கள் ,தங்களின் சம்பந்திமார்கள் தங்களைவிட அதிகமான அந்தஸ்தில் இருக்க ேவண்டும் அல்லது தங்களுக்கு சமமான அந்தஸ்தில் இருக்கவேண்டும் என கருதுகிறார்கள்.

நமது (நபிவழி) சகோதரர் ஒருவர் தன் மகளுக்கு வசதியான மாப்பிள்ளையை தேடி அதற்குரிய ‘விலையை’ கொடுத்து மகளின் நிலைைய (தன்னுடைய நிைலயயும் தான்) உயர்த்த நினைத்தார். ஆனால் தன் மகள், மணமான சில தினங்களியே மணமகனின் குடும்ப குருவின் கால்களில் விழ ேவண்டிய நிலை!!!

பல ேவளைகளில் மணமகன் சம்மதித்தாலும் ெபற்றோர் சம்மதிப்பது இல்லை.

மாட மாளிகைகளில் சுவையான பல வகையான உணவு உண்ட பணக்காரர்கள், ஓரிரு வினாடிகளில் ஏற்பட்ட மாற்றத்தால் பழைய செய்திதாள்களை கையில் ஏந்தி உணவுக்காக வரிசை பிடித்து நின்ற காட்சிகளை மறந்து விட்டோம் (குஜாராத் நில நடுக்கம்).

ெவளிநாட்டில் நிரந்த வாச தகுதியுடன் நிலையான வருமானத்துடன் வாழ்ந்த மனிதர்களின் ேவலை இடங்கள் இருந்த அடையாளம் கூட காணப்படவில்லை

ெவளிநாட்டில் கொடிகட்டி வாழ்ந்த பல வியாபாரிகள் இன்று அந்த நாடுகளுக்கே செல்ல முடியாத நிலைமை (முன்னாள் ஸைகோன்)

எடை முறை புழக்கத்திற்கு முன்னாள், ஒரு பிடி கோழி இந்த விலை (ஒரு கையால் எவ்வளவு கோழியை பிடிக்கமுடியுமோ அந்த அளவு) என்ற போது கோழியின் ஒரு காைலமட்டும் பிடித்து வியாபாரம் செய்த வியாபாரிகளை மறந்து விட்டோம் (முன்னாளய பர்மிய வியாபாரிகள்).

பணத்தை மட்டுமே கணக்கு ேபாட்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை இழக்கும் மனிதர்களே சிந்தியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்துள்ளவற்றை நினைவு கூறுங்கள்.

பிள்ளைகளை பெரிய காசு செலவு செய்து ஆளாக்கி இருக்கிறோம். அதற்காகத்தான் குழந்தைகளுக்கு செய்த கடமைக்கான கூலிைய இவ்வுலகிலேயே எதிர்பார்க்கிறோமா? ஏன்? அதற்கான கூலியை அல்லாஹ் கொடுக்கும்வரை பொறுமை இல்லையா? அல்லது கொடுப்பான் என்ற நம்பிக்கை இல்லையா ?

எந்த கோணத்தில் பார்த்தாலும் ஒன்று மட்டும் தெரிகிறது. நம்முடைய மனபோக்கு மாற ேவண்டும். அப்படி மாறிவிட்டால் எத்தனையோ ஏழை குமருகள் நரை விழாமல் கரை சேர முடியும்.

அல்லாஹ் நம்முடைய ஒவ்வொரு செயலையும் பார்த்து கொண்டு இருக்கிறான். அவனது பொருத்தமே முக்கியம் என்ற மன மாற்றம் அைனவருக்கும் வர ேவண்டும். அத்தகைய மன மாற்றத்தை அைனவருக்கும் கொடுக்க அல்லாஹ்விடம் துவாச் செய்வோமாக. ஆமீன்.

source: http://www.readislam.net/portal/archives/1366

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

72 − 63 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb