Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கோமான் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அகிலத்தில் உதித்திட முன்னரே அறிவித்த அரிய பொக்கிஷம்!

Posted on March 3, 2012 by admin

கோமான் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகிலத்தில் உதித்திட முன்னரே அறிவித்த அரிய பொக்கிஷம்!

   டாக்டர். A.P. முஹம்மது அலி, Phd., I.P.S.(rd)  

துருக்கி நாட்டில் 2000 ஆம் ஆண்டு பழம் பெரும் அரிய பொக்கிசங்களைத் தேடி கண்டு பிடித்து அவைகளை பொருக்காட்சியத்தில் வைப்பதிற்காக அலையும் போது, தொல்பொருள் ஆராச்சியாளர்களே அறியா ஒரு அரும்பெரும் பொக்கிஷம் கிடைத்தது. அது என்ன தெரியுமா?

நபி ஈசா  அலைஹிஸ்ஸலாம் அவர்கள்   காலத்திற்கு 600 ஆண்டுகளுக்கு முன் ஹீப்ரு, அராபிக், மற்றும் பழமைவாய்ந்த போனிசியன்-அக்காடியன் மொழியின் கலப்பினமான ‘அரமைக்’ மொழியில் மிருக தோலினால் தங்க எழுத்துக்களில் கையினால் எழுப்பட்ட நூலின் ஒரு பகுதி கிடைத்துள்ளது. அதனுடைய அருமை 2012 ஆண்டு ஆரம்ப முதலில் யாருக்கும் தெரியாது.

அந்த நூலினை சமீபத்தில் தலை நகர் அங்காராவின் பழமை பொருள் பாதுகாக்கும் அருங்காட்சியகத்திற்கு பலத்த பாதுகாப்பில் வைக்கப் பட்டிருந்ததினை தற்போதைய ‘போப் பெனெடிக்ட்’ அவர்கள் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள் என்றதும் அதில் என்ன அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

அதில் தான் வானவர்களும் போற்றக்கூடிய வள்ளல் பெருமான் முகமது ஸல்லல்லாகு அவர்கள் அகிலத்தில் உதிக்கப் போகிறார்கள் என்ற முன்னறிப்பாகும். அந்த அறிவிப்பின் நகல் மட்டும் ரூ 10 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் ஈமான் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் அது விலை மதிக்க முடியா பொக்கிஷம் என்றால் மிகையாகுமா?.

புனித குர்ஆனில் மாந்தரை நல்வழிப் படுத்த அகிலத்தில் ஒரு லட்சத்திற்கு மேலான நபி மார்கள் வல்ல அல்லா அனுப்பியதாகவும் அதில் 25 பெயர்கள் சொல்லப் பட்டதும் அனைவரும் அறிவர். அப்படி நபிகளாக வந்த மூசா அலைகிவஸல்லம் மற்றும் ஈசா அலைகிவஸல்லம் ஆகியோரை இன்று கடவுளாக யூதர்களும், கிறித்துவர்களும் சித்தரிகிறார்கள். மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தௌராத் வேதத்தினையும், நபி ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஞ்சில் வேதத்தினையும் ஏக வல்லோன் அல்லா வழங்கியதாக சொல்லப்பட்டுள்ளது அல் குரானிலே! அதனை அனைத்து முஸ்லிம்களும் நம்புகிறோம்.

அதற்கு உதாரணமாக திருக்குர்ஆனில் அல் அஹ்ராப்- சிகரம் என்ற தலைப்பில் அத்தியாயம் எழில், பாகம் ஒன்பதில்,

”அன்றி, (இறைவனே) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையைக் கற்பனை செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும்(செய்வாயாக). நிச்சயமாக நாங்கள் உன்பாலே முன்னோக்கினோம்”…….எவர்கள் நம்முடைய வசனங்களை(மெய்யாகவே) விசுவசிக்கிரார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளாகிய) அதனை நான் கற்பனை செய்வேன்” என்றும், (ஆகவே, அவர்களில்) எவர்கள் எழுத்தாற்றல் அற்ற(நம்) தூதராகிய இந்த நபியை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பின்பற்றுகிறார்களோ அவர்கள், தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இஞ்சிளிலும், இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதினைக் காண்பீர்கள். (இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவி, பாபமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார், கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்து விடுவார்!

அத்தியாயம் 61 பாகம் 28 அணிவகுப்பு என்று வருகின்ற இடத்தில், ‘மர்யமுடைய மகன் ஈசா அலைஹிஸ்ஸலாம் “இஸ்ரயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப் பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதன். நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தையும் உண்மைப் படுத்துகிறேன். எனக்குப் பின்னர் ‘அஹ்மத்’ என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் நன்மாராயங் கூறுகின்றேன் என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இறுதி நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதித்ததினையோ, அவர்கள் சந்ததியினர் நமது சகோதரர்கள் என்பதினையோ ஏன் யூதர்களோ அல்லது கிருத்துவர்களோ ஒத்துக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை மத்திய கிழக்கு நாடுகளிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், போன்ற ஆசிய நாடுகளையும், ஓட, ஓட விரட்டி, குனிய, குனிய குத்துகிறார்கள் என்று எண்ணத் தோன்றவில்லையா?

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் வசிப்பவர்களில் யார் பெயரினை தங்கள் பெயருடன் சேர்த்துள்ளார்கள் ஜீசுஸ் கிரிஷ்ட்டா அல்லது முஹம்மதா என்று ஆராயும் போது முஹம்மது பெயரே அதிகம் என்று அறிந்தார்கள்.

கிருத்துவர்கள் வாழும் நகரில் முஹம்மது பெயர் முக்கியத்துவம் வாய்ந்து, மக்களை தன் பெயர் தாங்கச் சொல்லும் அளவிற்கு செய்த ஈர்ப்பு என்ன என்று கீழே காணலாம்:

1) வரலாற்றில் வாழ்ந்து, ஏக அல்லாஹ்வால் அடையாளம் காணப்பட்டு, மாக்களாக இருக்கும் மக்கள் ஓரிறையின்பால் ஈர்க்கப்படவும், பண்படவும் வஹி மூலம் நபியாக மக்களுக்கு அடையாளம் காண்பிக்கப்பட்டு பெருமைப் படுத்தப் பட்டவர்கள். ஆனால் மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஈசா அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் நபியாக அனுப்பப்பட்டு அறியாத மக்களால் கடவுளாக சித்தரிக்கப் பட்டவர்கள் ஆவர்.

2) எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று ஏக இறைவனைப் புகழ்ந்தவர்கள். தன்னுடைய தனிப்பட்ட புகழ் என்றும் தலை தூக்கக்கூடாது என்று கவனமாக செயல் பட்டவர்கள். ஆனால் யூதர்களும், கிருத்துவர்களும் மூசாவினையும், ஜீசசினையும் கடவுளாக வழிபட வழி வகுத்தனர்.

3) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்க விளக்கங்களைத் தந்ததோடு திருமண வாழ்க்கை நெறிமுறைகளையும் கற்றுத் தந்தார்கள். ஆனால் மற்ற மதங்களில் குருமார்கள் திருமண மாகாது இருந்ததால் பிற்காலத்தில் சிறுவர்களுடன் கூடா உறவு மேற்கொள்ள வழி வகுத்து விட்டார்கள் .

4) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனிநபர் ஒழுக்கத்தினை வலியுறித்தினார்கள். ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் இஸ்ரேயில் ஜனாதிபதி தன் பணிப் பெண்ணுடன் அலுவலகத்தில் கள்ள உறவு கொண்டதும், அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் தன் பணிபெண்ணுடன் வாய்வழி உறவு கொண்டதும் உலக நாடுகள் சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்தது.

5) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனநாயக முறை ஆட்சி நடத்தியதால் தனக்குப் பிறகு வாரிசினை நியமிக்கவில்லை. ஆனால் இன்னும் கூட சில கிருத்துவ நாடுகளில் முடியரசு இருந்து கொண்டுதான் உள்ளது.

6) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரசியல் தலைவராக இருந்தபோது எளிமையினைக் கடைப் பிடித்தார்கள். ஆனால் இஸ்ராயில், கிருத்துவ மன்னர்கள் ஆடம்பர வாழ்கை நடத்தியும், கொடுங்கோல் ஆட்சி நடத்தியதாலும் அந்த நாடுகளில் தற்போது இஸ்லாமியர் நாடுகளில் நடந்ததுபோன்ற பிரான்ஸ் புரட்சி, ரஷ்யன் புரட்சிகள் ஏற்பட்டன.

7) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரசியல் தலைவராக இருந்தபோது யூதர்கள், கிருத்துவர்கள் ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அமைதி ஆட்சியினை தந்தார்கள். ஆனால் இஸ்ரயிலர்களும், கிருத்துவர்களும் ஆளும் நாடுகளில் இன்றும் இஸ்லாமியர் வேட்டையாடப் படுகின்றனர்.

8) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் படையினருக்கு போர்களங்களில் பயிர்கள், மரங்கள், கட்டிடங்கள் பாதுகாக்கவும், வளர்ப்பு பிராணிகள்,பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றவர்களுக்கு உடல் சேதம் கொடுக்ககூடாது என்ற கட்டளைப் பிறப்பித்தார்கள். ஆனால் 1090 ஆம் ஆண்டு ஜெருசலத்தினைப் பிடிக்க நடந்த சிலுவைப் போரில் கிருத்துவர்கள், முஸ்லிம் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆக மொத்தம் 60000 பேர்கள் கொன்று குவித்தனர்.

9) பெண் சிசு கொலை தடுத்தும், பெண்களுக்குச் சொத்து உரிமை வழங்கியும், திருமணம் ஒரு ஒப்பந்தம், அது ஒரு சடங்கு இல்லை என்றும், சீதன முறை ஒழித்தும், திருமண வைபவங்களில் ஆடம்பரம் ஒழித்தும் ஆணை இட்டார்கள். ஆனால் கிருத்துவ அமெரிக்காவில் சமீபத்தில் தான் முஸ்லிம் தந்தைக்குப் பிறந்த ஜனாதிபதி ஒபாமா பெண் ஊழியருக்கு வேளையில் சம உரிமை வழங்கினார்.

10) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிமையினை விடுதலை செய்தார்கள்.ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பே தென் ஆப்பிரிகா போன்ற நாடுகளில் கறுப்பின மக்களுக்கும் சம உரிமை கிடைத்தது.

11) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மது, விபச்சாரம், வட்டி போன்றவைகளை அறவே ஒழித்தார்கள். ஆனால் கிருத்துவ, இஸ்ரேயில் நாடுகளில் அவைகளை இன்று வரை ஒழிக்க முடியவில்லை.

12) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவு முறையில் ஹலால், ஹராம் எது என்று பிரித்துக் காட்டினார்கள். ஆகவேதான் புழுப் பூச்சிகளை சாப்பிட்டு வந்த சீன, ஆப்பரிக்க முஸ்லிம்கள் ஹலால் உணவுப் புரட்சியினை கடைப் பிடித்தார்கள்.

ஏக இறைவன் ரசூலல்லாஹ் மூலம் வித்திட்ட இஸ்லாமிய மார்க்கம் இன்று 150 கோடி மக்களை கொண்டுள்ளது ஆச்சரியமே! அது எல்லாம் வல்ல நாயனின் கட்டளை. ரசூலல்லாவின் படைப்பிற்கும், புகழுக்கும் துருக்கியில் படைத்த சான்று ஒன்று தான் உள்ளது என்று எண்ண வேண்டாம். இன்னும் மனிதனுக்கு கிடைக்காத பொக்கிஷம் புதைந்துள்ளது. அவைகளை சமுதாயத்தில் உள்ள படித்த இளைஞர்கள் வெளிக் கொண்டு வருவதின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்ப்போமா?

– AP,Mohamed Ali

source: http://mdaliips.blogspot.in/2012/02/blog-post_28.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

74 − 65 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb