Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்

Posted on March 3, 2012 by admin

    ஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்    

“ஆராய்ச்சி”, “ஆராய்ச்சியாளர்கள்”, “விஞ்ஞானி” – இதெல்லாம் ரொம்பவே நமக்குப் பரிச்சயமான வார்த்தைகள். அவ்வப்போது பத்திரிககளில் “According to latest research…” என்று படித்திருப்போம். உலகில் நமக்கு புரியாத பல புதிர்களை விளங்க வைப்பதும், அறியாத பல நல்ல விஷயங்களையும் புரிய வைப்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களே!!

எல்லா புகழ்பெற்ற பெரும் பன்னாட்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சிகளுக்கும், புது கண்டுபிடிப்புகளுக்குமென்றே “R & D” எனப்படும் “ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல்” என்ற தனித் துறையே உண்டு.

இது தவிர அரசாங்கள் சார்பாகவும், பல்கலைக் கழகங்கள் சார்பாகவும் இத்துறை மூலம் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் நடத்தி, மனித மற்றும் உலக மேம்பாட்டுக்குப் பாடுபடுகிறார்கள். எளிதாகப் புரிய வைக்கவேண்டுமென்றால், “மூலிகை பெட்ரோல்” ராமரும் ஒரு ஆராய்ச்சியாளரே!!

ஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆர்வத்தாலும், முயற்சிகளாலும்தான் இன்றைய உலகில் பல நவீன கருவிகளும், நோய்களுக்கு மருந்துகளும், புதிய சிகிச்சை முறைகளும் கிடைத்திருக்கின்றன.

ஒரு காலத்தில் மருந்தே இல்லைன்னு சொல்லப்பட்ட கேன்ஸர் இன்னிக்கு குணப்படுத்த முடியுற வியாதியா ஆகிடலையா? அதுபோல எய்ட்ஸுக்கும் மருந்து இப்போ இல்லைனாலும், ஆராய்ச்சி தொடருது.

சமீபத்துல ஒருவரின் புற்றுநோய்க்குச் செய்த ஸ்டெம் செல் சிகிச்சையால் எதிர்பாராவிதமாக அவரின் எய்ட்ஸ் குணமாகியுள்ளது. இதுவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு, எய்ட்ஸ் சிகிச்சைக்கு வழிவகுக்கப்படலாம் எதிர்காலத்தில்.

உலகம் உருண்டையென்பதிலிருந்து, இந்த அண்டவெளியில் பூமியைப் போல இன்னும் சுமாராக ஐம்பது பில்லியன் கோள்கள் இருக்கக்கூடும் என்று நமக்கு தெரிவித்ததும் ஆராய்ச்சியாளர்களே!!

சாக்லேட் சாப்பிட்டால் கெடுதல் என்ற நமது நினைப்பை, (டார்க்) சாக்லேட் அளவோடு சாப்பிட்டால் உடல்நலத்திற்கு நல்லது என்று தெளிய வைத்ததும் இப்படியான ஆராய்ச்சிகளே! (க்ரீன்) டீக்கும் இதேதான்.

முன்னெல்லாம் “கொலஸ்ட்ரால்” என்பதே கெட்ட வார்த்தையாக நினைத்து எண்ணெய் வகைகளை நாம் “தீண்டத்” தயங்க, அப்புறம் கொலஸ்ட்ராலிலும் “நல்ல” கொலஸ்ட்ரால் (HDL), “கெட்ட” கொலஸ்ட்ரால் (LDL) உண்டு என்று புரிய வைத்து, அதற்கேற்றவாறு எண்ணெய் வகைகளைத் தேர்ந்தெடுக்க வைத்தனர் ஆராய்ச்சிகள் மூலம்.

முட்டை சாப்பிட்டால் உடல் பருமனும், பி.பி.யும் எகிறும் என்று நினைத்து நாம் தவிர்த்துக் கொண்டிருக்க, நிறைய முட்டை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு உருவாகுதலே நிறுத்தப்படும். எனவே இதய நோய் வராது என்று புதிய தகவல் தருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!!

இதேதான் உப்பு, உருளைக் கிழங்கு, ரெட் மீட் வகையறாக்களுக்கும் – இவையெல்லாம் உடல்நலத்திற்கு பெரும் கேடு விளைவிப்பவை என்ற நம் நினைப்பில் உப்பைத் தூவி, இவைகளிலும் நன்மை உண்டு; ஆனால், அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்து என்று வலியுறுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த “பதப்படுத்தப் பட்ட உணவுகள்” (frozen foods) குறித்து எல்லாருக்குமே ஒரு இகழ்ச்சி உண்டு. ஹூம், பாக்கெட்டுல போட்டு ஃப்ரீஸர்ல போட்டு வச்சிருக்கதுல என்ன சத்து இருக்கும்? ஃப்ரெஷ்ஷா அன்னிக்கு கடையில வாங்கிச் சாப்பிடுற மாதிரி வருமா? என்று அங்கலாய்ப்பவர்களுக்கும் ஆப்பு இருக்கு.

“ஃப்ரெஷ்”னு நாம சொல்ற பல காய்கறி, பழ வகைகள் ஆக்சுவலா ஆறு மாசத்துக்கும் முன்னேயே, அதுவும் அவை சரியான பருவத்துக்கு வருமுன்னே பறிச்சு, செயற்கை முறையில பழுக்க வைக்கப்பட்டு, பல ஊர்கள்/நாடுகள் பயணம் செய்வதில் சத்து இழப்பும் ஏற்பட்டு, நமக்கு கடைகளில் “ஃப்ரெஷ்” என்று விற்கப்படுகின்றன. ஆனால், ஃப்ரோஸன் வகைகளில் காய்கறிகள்/பழங்கள் அவை இயற்கையாகவே சரியான பருவம் அடையும் வரை காத்திருந்து, பின் பறிக்கப்பட்டு, உடன் ஃப்ரீஸ் செய்யப்படுவதால், அவற்றில்தான் முழுமையான சத்துக்களும் இருக்கின்றன என்று இப்போது சொல்கிறார்கள்!!

சாப்பாட்டை விடுங்க, நடைபயிற்சிக்கு வாங்க. இந்த நடைபயிற்சி செய்யணும்னு நினைக்கிறவங்க, செய்ற முதல் வேலை நல்ல ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்குவதுதான்!! அந்த ஷூ வாங்குறதுக்கு (மட்டுமே) அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போம். பயிற்சியாளர்கள்/ மருத்துவர்களும் சரியான காலணி அணிந்து நடப்பதுதான் நல்லது. இல்லைன்னா, பாதம், முட்டிகளுக்கு பாதிப்பு வரலாம்னு சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனா அதுக்கும் வருது வில்லங்கம். வெறும் காலோடு நடப்பதுதான் நல்லதாம்.

உள்ளங்காலின் தோல் அதற்கேற்ற உறுதியோடுதான் உள்ளது என்றும், அப்படி நடந்தால்தான் இரத்த ஓட்டமும், தொடுஉணர்ச்சிப் புள்ளிகளும் சரியாகத் தூண்டப்படும் என்றும் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. (இது நம்ம நாட்டுக்கு ஒத்து வராதுன்னாலும், ஸ்போர்ட்ஸ் ஷூக்களில் காசைத் தொலைப்பதைத் தடுக்க உதவும்.)

அட இந்த வீடியோ/கம்ப்யூட்டர் கேம்ஸ் – அது கண்ணுக்கு நல்லதில்லை, மூளையை மந்தப்படுத்தும், நிழலைப் பார்த்து நிஜத்திலும் மாயைகளை எதிர்பார்ப்பார்கள் சிறுவர்கள், என்றெல்லாம் சொல்லி கட்டுப்படுத்துவோம் நம் பிள்ளைகளை. இப்போ அதுக்கும் ஒரு நல்ல பாயிண்ட் கண்டுபிடிச்சு சொன்னான் என் மகன் – இந்த மாதிரியான விளையாட்டுகள் கண்-கை ஒருங்கிணைப்புக்கு (Hand-eye coordination) நல்ல பயிற்சியாம்; அத்தோடு problem solving skills, multi-tasking, quick-thinking இப்படி பல நன்மையான விளைவுகள் இருக்கிறதாம். இதுவும் ஆராய்ச்சியால் கிடைத்த தகவல்தான்.

அது மட்டுமா? நாமல்லாம் சின்ன வயசுல பயாலஜில படிச்சுருப்போம் – நம்ம உடம்புல இருக்கிற குடல்வால் (appendix), வால் எலும்பு (coccyx), ஞானப் பல் (wisdom teeth) போன்ற சில உறுப்புகள் நமக்கு பயன்தராதவை; பரிணாம விதிகளின்படி (evolution theory) குரங்குலருந்து மனுஷன் வந்தப்போ இந்த உறுப்புகளும் கூடவே வந்துடுச்சு. மனிதனுக்கு இவற்றின் தேவையில்லாததால், இவை “பரிணாமத்தின் எச்சங்கள்” (vestigial organs) என அறியப்பட்டன. ஆனா இப்போ ஆராய்ச்சியாளர்கள், அப்படியெல்லாம் இவை மொத்தமாகப் பயனற்றவை அல்ல; இவற்றுக்கென்று சில வேலைகளும் உள்ளன என்று கண்டுள்ளார்கள்.

உதாரணமா, குடல்வால் என்பது நல்ல பாக்டீரியாக்களின் இருப்பிடம்; வயிற்றுக்கோளாறுகள் வந்து சரியானபின், குடல்களுக்கு நல்ல பாக்டீரியாக்களை அனுப்புமாம் இது. இதுபோல வால் எலும்பும் முதுகெலும்புக்கு ஒரு குஷன் போல செயல்படுகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர். (பார்க்க: http://news.nationalgeographic.com/news/2009/07/090730-spleen-vestigial-organs_2.html; http://en.wikipedia.org/wiki/Vermiform_appendix )

பரிணாமத்தின் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்ட vestigial organs குறித்த கருத்தையே மாற்றியமைப்பதால், இது நிச்சயமாக ஆராய்ச்சி அறிவியலில் ஒரு மைல் கல்லாக அமையும்.

மேலே சொன்ன விஷயங்களை ஆராய்ஞ்சு பாத்ததிலிருந்து என்ன தெரியுதுன்னா, ஆராய்ச்சிகளில் அன்னிய தேதிக்கு மனிதனின் அறிவும், அறிவியலும், தொழில் நுட்பங்களும் எவ்வளவு வளர்ச்சியடைஞ்சிருக்கோ அது பொறுத்துதான் முடிவுகள். ஒரு காலத்துல ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு சொல்லப்பட்ட பலதும் பின்னாட்களில் மேம்பட்ட ஆராய்ச்சியினால் சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது & vice-versa. எந்தவொரு விஷயமும் நம்ம அறிவுக்கு எட்டலை அல்லது ஆராய்ச்சியால் நிரூபிக்கப் படவில்லை என்பதாலேயே தவறாகவோ, பொய்யாகவோ ஆகிவிடாது!!

source: http://hussainamma.blogspot.in/2010/12/blog-post_20.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

81 + = 84

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb