கோபம் உங்கள் உயிருக்கு ஆபத்து!
கோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்லலாம்
”கோபம் வந்துச்சுன்னா நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்!” இன்றைய தலைமுறையில் நிறையப் பேருக்கு இது தினசரி டயலொக். யானைக்கு மதம் பிடிக்கும்போது செய்கின்ற அழிவை, மனிதன் கோபப்படும்போது செய்கிறான். சின்ன கோபம், பெரிய இழப்பை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தை தற்காலிக பைத்தியம் என்றே சொல்கின்றனர்.
நாம் கோபப்படுவதால் நமது உயிர், நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டு உடலிலிருந்து வெளியேறத் தயாராகி விடுவதை யாரும் உணர்வதில்லை.
பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி அவர். வயது 50க்குள். எடை 100 கிலோவுக்கு மேல். சதா சர்வ காலமும் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பவர். நல்ல வேளையாக அவருக்கு நீரிழிவு வரவில்லை. ஆனால், கோபம் அடிக்கடி வந்து இரத்த அழுத்தம் 160/80 என எகிறுகிறது..
அடிக்கடி நெஞ்சு படபடப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர், ஒரு நாள் படபடப்பு அதிகமாகி மருத்துவ மனைக்கு வந்தார், E.C.G. பார்த்தபோது லேசான மாற்றம் இருந்தது. ஆஞ்சியோ கிராம் பார்த்ததில், இருதய இத்தக் குழாயில் லேசான அடைப்பு தெரிந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் மருந்து செலுத்தி, அடை ப்பை நீக்கிவிட்டார்கள். அவரும் நலம் பெற்றுத் திரும்பினார். அவருக்கு இருதயத்தில் பிரச்சனை ஏற்பட காரணம், அவரது வாழ்க்கை முறைதான். அடிக்கடி வந்து போகும் கோபம், இனம் புரியாத வருத்தத்தின் வெளிப்பாடுதான்..
நாம் எண்ணியது நடக்காவிட்டால், சொல் வதை யாராவது கேட்காவிட்டால், நமக்குக் கோபம் வருகிறது. கோபம் தற்காலிக உணர்வு தான். ஆனால் அந்த நேரத்தில் செயற் பாடுகளை நாம் உணர்வதில்லை. அதனால்தான் கோபத்தை தற்காலிக பைத்தியம் என்கிறோம். கோபம் வரும்போது அட்ரினலின் ஹோர்மோன் சுரக்கிறது. அதுவே உடலின் இரத்தக் குழாயை சுருக்கிவிடுகிறது. உடலில் இரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக இரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது..
அதிக கோபம் வரும்போது, அதிகமான அளவு இரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போகிறது. கோபத்தால் பணம், பதவி, மரியாதை எல்லாமே போய்விடுகிறது. உச்சகட்டமாய் உயிரும் போய் விடுகின்றன. எது கிடைக்கவில்லை என்று கோபப்படு கிறோமோ, அதனால் ஏற்படும் இழப்பு, கிடைக்கிறதைவிட அதிக மதிப்புள்ளதாக இருக்கிறது.
கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? தண்ணீர் குடிக்கச் செல்வார்கள். அந்த இடத் தைவிட்டு வெளியேறி, கூல்டிரிங்ஸ்குடிக்கலாம் என்பார்கள். அதெல்லாம் வேண்டாம், ”நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் உடகார்ந்து விடுங்கள்; உட்கார்ந்து கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் படுத்துவிடுங்கள்” என்பது இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரையாக இருக்கிறது. அதைப் பின்பற்றுங்கள் கோபம் தானாக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.