Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாத உலகம் இது!

Posted on March 2, 2012 by admin

எது உங்கள் பாதை?

  ஆபிதா அதிய்யா    

காதல் என்பது ஒரு அபரிமிதமான நேசம். ஒரு இளைஞனும், யுவதியும் விரும்பினால் அதுமட்டுமே காதல் என நம் மனதில் வேரூன்றிவிட்டது. தாய்க்கும், மகனுக்கும் உள்ள பாசமும் காதல்தான்; தந்தைக்கும் மகளுக்குமுள்ள பாசமும் காதல்தான்;

சகோதரன் சகோதரிக்குமிடையேயான நேசமும், கணவன் மனைவிக்கிடையேயான நேசமும் காதல்தான். ஆனால் இங்கே நாம் இந்த உன்னதமான காதலைப் பற்றிப் பேசவரவில்லை.

காதல் என்ற பெயரில் அனாச்சாரம் செய்பவர்களைப் பற்றிப்பேச வந்துள்ளோம். இன்றைய காதல் தத்துவம் என்னவெனில், ‘ ‘காதலுக்குக் கண் இல்லையாம்!”, “கண்டதும் காதல் பத்திக்கும்”, “பார்க்காமலே காதல் (By cellphone), ஒரு பெண்ணைப்பார்த்தவுடன் ஏதோ chemistry workout ஆகுமாம். அதுதான் காதலாம்! அதற்குப் பெயர் காதல் இல்லை, காமம்!

காதலுக்கும், காமத்திற்கும் வித்தியாசம் தெரியாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

“தவறான கண்பார்வைகூட கண்கள் செய்யும் விபச்சாரம்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “இரு மனங்கள் இணையும் திருமணங்கள் சுவனத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.” இன்னாருக்கு இன்னார் என்று அல்லாஹ் நாம் பிறக்கும்போதே தீர்மானித்துவிட்டான்.

இறை நம்பிக்கையின் அடிப்படை என்ன தெரியுமா? “உலகில் உள்ள எல்லாரையும் விட அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நேசிப்பது” இவர்களை நேசிப்பதற்கும், இவர்களுடைய விருப்பத்திற்கு இடையூறாக யாருடைய நேசமாவது வந்தால் அந்த நேசத்தைத் தூக்கி தூர எறிவதும்தான் ஈமான்.

ஆனால் இன்று தலைகீழ் மாற்றம்! காதலன், காதலிக்கு இடையே இஸ்லாம் குறுக்கிட்டால் இஸ்லாத்தைத் தூர எறிந்து விடு. தாய், தகப்பன் குறுக்கிட்டால் ஒரே வெட்டு. கட்டின மனைவியோ, பெற்ற பிள்ளைகளோ குறுக்கிட்டால் தீயை கொளுத்து இல்லையெனில் விஷம் வைத்துக்கொல்! யார் செத்தாலும் சரி, இவர்கள் இருவரும் சேர வேண்டும். இதுதானே இங்கே நடக்கிறது. இதைத்தானே சினிமாக்களும், கதைப்புத்தகங்களும், நாவல்களும், இலக்கியங்களும், இதிகாசப் புராணங்களும் சொல்கின்றன. இதுதான் உன்னத மகோன்னதக் காதல்! இல்லையென்றால் ஊரைவிட்டு ஓடிப்போதல். தாய், தகப்பனின் கண்ணீரில், சமுதாயத்தின் அவப்பெயரில், குடும்பத்தாரின் தலைகுனிவில் இவர்களின் திருமணம். எப்படியோ இருவரும் சேர்ந்துவிட்டார்கள். சுவனத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இப்படித்தான் நடக்குமா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரில் ஒருவரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது அவதூறு சொல்லப்பட்ட போது, அல்லாஹ் திருமறையில் தன் தூதருக்குச் சொல்கிறான். முஹம்மதே! நீ எவ்வாறு ஒழுக்கத் தூய்மையுடன் இருக்கிறாயோ, அவ்வாறே உம் மனைவி-யும் ஒழுக்கத் தூயவள்தான்!

“ஒழுக்கமான ஆண்களுக்கு ஒழுக்கமான பெண்களே!” (திருக்குர்ஆன்)

நீங்கள் ஒழுக்கமான பெண்ணாக / ஆணாக இருந்தால் நிச்சயம் உங்களைத்தேடி ஒழுக்கமான ஆண் / பெண் வந்துசேருவான், காதல் என்ற பெயருடன் அல்ல! திருமணம் என்ற பந்தத்துடன்!

நீங்கள் ஒழுக்கங் கெட்ட செயல் புரிந்தால், கண்ணில்கண்ட பெண்களையெல்லாம் காமப் பார்வை பார்த்தால், காதல் என்ற பெயரில் அந்தரங்க உரையாடி, வெட்கங்கெட்ட செயல் புரிந்து, மணிக்கணக்கில் அந்நியப் பெண்ணுடன் பேசினால், உங்களுக்கு வருகின்ற பெண்களும்…!

நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. கண்டவனுடன் மணிக்கணக்கில் பேசி, கொஞ்சி, மனதளவில் சோரம்போன பெண்கள்தான் உங்கள் ஜோடி!

“ஒழுக்கங் கெட்ட ஆண்களுக்கு ஒழுக்கங்கெட்ட பெண்களே!” (திருக்குர்ஆன்) உன் மனைவி எப்படிப்பட்ட ஒழுக்கத் தூயவளாகக் கிடைக்க வேண்டுமென நீ விரும்புகிறாயோ, அப்படிப்பட்ட ஒழுக்கத் தூயவனாக நீ மாறு! உனக்கும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் போல், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் போல் மனைவி இன்ஷா அல்லாஹ் நிச்சயம் கிடைப்பாள்.

ஒருமுறை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் ஒட்டகத்தில் பயணித்திருக்கும் போது தொழுகை நேரம் வந்து விடும்.

ஒருவரிடம், நான் தொழும் வரை ஒட்டகத்தைப் பார்த்துக் கொண்டால் உமக்கு 2 திர்ஹம் தருவேன் என கூலி பேசுவார்கள். அவரும் சம்மதிப்பார்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழ ஆரம்பித்ததும் ஒட்டகத்தைத் திருடும் நோக்கில் அதை ஓட்டிப்போக முயற்சிப்பார். ஒட்டகம் நகர மறுத்துவிடும்.

எப்படியோ பிரயாசப்படுவார். இறுதியில் ஒட்டகத்தின் கடிவாளத்தைத் திருடிக் கொண்டு ஓடிவிடுவார்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அமைதியாக தொழுகையை முடித்துவிட்டு ஊருக்கு வருவார்கள். கடிவாளத்தைப் பற்றி விசாரிப்பார்கள். திருடியவன் அந்தக் கடிவாளத்தை 2 திர்ஹமுக்கு விற்றிருப்பான்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் 2 திர்ஹம் கொடுத்து அதை வாங்கி- விட்டுச் சொல்வார்கள்.

இதைத் திருடியவனுக்கு இன்று அல்லாஹ் நிர்ணயித்த கூலி 2 திர்ஹம். அதை அவன் ஹலாலான வழியில் பெறுவதற்குப் பதிலாக ஹராமான வழியில் பெற்றுக்கொண்டான்.

நாமும் இத்திருடனைப் போல் தான் வாழ்க்கையில் ஏமாறுகிறோம். இந்த இளைஞனுக்கு, இந்த இளைஞிதான் என அல்லாஹ் நிச்சயித்துவிடுவான். இவர்களிடம் இரண்டு வழிகள் கொடுக்கப்படும். ஒன்று, ஹலாலான வழி! மற்றொன்று, ஹராமான வழி! ஒன்று, சுவனம் போகும் வழி! இன்னொன்று, நரகிற்குச் செல்லும்- வழி! அல்லாஹ் இவனுக்கு, இவள் என முடிச்சுப் போட்டால்தான் உங்கள் பெற்றோரும், அங்க தேடி, இங்க தேடி கடைசியில் தீர்மானித்த அந்தப் பெண்ணைத்தான் மணமுடித்துவைப்பார்கள். நீங்கள் பொறுமையுடன் இருந்தால்! இடையில் காதல் என்ற பெயரில் நீங்கள் வழிதவறிப்போய் அதே பெண்ணைத்தான் மணம் முடிப்பீர்கள். ஆனால் அது ஹலாலான வழி அல்ல! ஷைத்தானின் வழி! நான் காதலில் ஜெயித்து விட்டேன் என நீங்கள் இறுமாந்திருப்பீர்கள். ஆனால் ஷைத்தான், தான் ஜெயித்து விட்டதாக அவன் இறு மாந்திருப்பான். கடைசியில் தோற்றது என்னவோ நீங்கள்தான்! கேவலம்

இந்தக் காதலினால்

நரகம் செல்லாதீர்…

ஆதலினால் காதல் செய்யாதீர்….

நன்றி- ஹைர உம்மத்

source: http://www.muslimpenmani.com/2012/02/blog-post_09.html#more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb