முஸ்லிம்கள் என்ற சான்றா? குப்ஃபார்கள் என்ற சான்றா?
[ இன்று மத நல்லினக்கம் என்ற பெயரில் அந்நிய மதங்களின் நம்பிக்கைகளை, இஸ்லாமிய நம்பிக்கையாக்கி,
அவர்களின் கடவுள் கொள்கைகளை, இஸ்லாமிய கடவுள் கொள்கையாக்கி,
அவர்களின் வணக்க வழிமுறைகளை, இஸ்லாமிய வணக்க வழிமுறையாக்கி,
அவர்களது கலாச்சாரம் நாகரீகத்தை இஸ்லாமிய கலாச்சார நாகரீகமாக்கி,
இஸ்லாத்தையும் அந்நிய மார்க்கத்தையும் ஒன்றாக்கி,
முஸ்லீம்களையும் காஃபிர்களையும் முகஜாடையிலும், ஆடையிலும் பிரித்தரிய முடியாதவர்களாக ஆக்கி விட்டார்கள்.
இதன் விளைவு எம்மதமும் சம்மதம் என்ற குரலாக மாறி,
உன் கடவுளும் என் கடவுளும் ஒன்றாக ஆகி,
நபியும் அந்நிய மதத்தலைவர்களும் ஒரு தரமாகி,
அந்நிய மத நூல்களின் போதனைகள் அல்குர் ஆனிய போதனைகள் ஆகி,
நமது முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இவைகள் தஃவா ஆக களமிறங்கி விட்டது.]
ஏழு வானத்தின் மேலிருந்து இறக்கப்பட்ட இஸ்லாமும் மனித புத்தியினால் உருவாக்கப்பட்ட அந்நிய வழிமுறைகளும் சமமாகாது. அவை கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை விட தூரமானது.
இஸ்லாமியக் கொள்கையும் அதன் வழிமுறைகளும் அந்நியக் கொள்களை விடவும் மேலோங்க செய்வதற்காக வேண்டி அல்லாஹு த்தாஆலா காலத்திற்க்குக் காலம் ரசூல்ல்மார்களை அனுப்பினான். அவ்வகையில் இறுதியாக முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தேர்ந்தெடுத்தான்.
இவர் தன் வாழ்வில் அனைத்து அறியாமைக் கொள்கைகளையும் குழித்தோண்டிப் புதைக்க பாடுபட்டார். தனது கடைசிக் காலத்தில் கஃபதுல்லாஹ்வைத் தூய்மையாக்கி அனைத்து அறியாமைகளையும் தன் காலுக்குக் கீழால் புதைத்து விட்டார்.
அல்லாஹ்வின் நம்பிக்கை, வணக்க வழிபாடுகள், கல்வி, கலாச்சாரம், நாகரீகம், பொருளாதாரம், ஆடை, அலங்காரம் என எல்லா விடயங்களிலும் காஃபிர்களுக்கும், முஷ்ரிகின்களுக்கும் முரணாக செயல்பட்டு, இஸ்லாம் மார்க்கத்தையும் அந்நிய மார்க்கங்களையும் பிரித்துக் காட்டினார்கள். மேலும் அந்நிய மார்க்கங்களுக்கு ஒப்பாக நடப்பதை தடையும் செய்தார்கள்.
”யார் ஒரு கூட்டத்திட்கு ஒப்பாக நடக்கின்றாறோ அவர் அந்த கூட்டத்தை சேர்ந்தவராவார்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு (ஆதாரம்: அபூதாவுத், அஹ்மத்)
யூதக் கிறிஸ்தவர்கள் அவர்களுக் இறக்கப்பட்ட தவ்ராத்தையும் இன்ஞீலையும் அதன் சட்டதிட்டங்களைம் திரிவுபடுத்தி மாற்றி விட்டார்கள். இன்னும் அவர்களது சிந்தனைக்கு தென்பட்டவைகளை மார்க்கமாக ஆக்கிவிட்டார்கள். நபிமார்களினது கப்ருஸ்தலங்களை வணக்க வழிபாடு செய்யும் இடங்களாக மாற்றி விட்டார்கள். நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனைவிட்டும் தனது சமூகத்தைத் தடுத்தார்கள்.
”அறிந்துகொள்ளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தவர்கள் அவர்களது நபிமார்களினதும் சாலிஹானவர்களினதும் கப்ருகளை பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள் . அறிந்துகொள்ளுங்கள் ! நீங்கள் கப்ருகளை பள்ளிவாசல்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அதைவிட்டும் நான் உங்களைத் தடுக்கிறேன், என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரது மரணத்திற்கு 5 நாட்களுக்கு முன்னால் கூற நான் செவிமடுத்தேன்” என ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் அல் பஜலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை, நோன்பு, ஹஜ் திருமணம் போன்ற எல்லா வணக்க வழிபாடுகளிலும் யூத கிறிஸ்தவர்களுக்கு மாற்றம் செய்தார்கள். அதேபோன்று அவரது உம்மத்தாகிய எங்களுக்கும் யூத கிறித்தவர்களுக்கு மாற்றம் செய்யும்படி ஏவினார்கள். உதாரணத்திற்கு,
”(முஹர்ரம் மாதம்) பிறை 9ம், 10ம் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் அப்துல்லா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: பைஹகி முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்)
ஆனால், இன்று மத நல்லினக்கம் என்ற பெயரில் அந்நிய மதங்களின் நம்பிக்கைகளை, இஸ்லாமிய நம்பிக்கையாக்கி, அவர்களின் கடவுள் கொள்கைகளை, இஸ்லாமிய கடவுள் கொள்கையாக்கி, அவர்களின் வணக்க வழிமுறைகளை, இஸ்லாமிய வணக்க வழிமுறையாக்கி, அவர்களது கலாச்சாரம் நாகரீகத்தை இஸ்லாமிய கலாச்சார நாகரீகமாக்கி, இஸ்லாத்தையும் அந்நிய மார்க்கத்தையும் ஒன்றாக்கி, முஸ்லீம்களையும் காபிர்களையும் முகஜாடையிலும், ஆடையிலும் பிரித்தரிய முடியாதவர்களாக ஆக்கி விட்டார்கள்.
இதன் விளைவு எம்மதமும் சம்மதம் என்ற குரலாக மாறி, உன் கடவுளும் என் கடவுளும் ஒன்றாக ஆகி, நபியும் அந்நிய மதத்தலைவர்களும் ஒரு தரமாகி, அந்நிய மத நூல்களின் போதனைகள் அல்குர் ஆனிய போதனைகள் ஆகி, எமது முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இவைகள் தஃவா ஆக களமிறங்கி விட்டது.
இவ்வழிமுறையினைத் தவிர்ந்து தூய இஸ்லாத்தினை நபிவழியில் மேலோங்க செய்ய, இதோ! மேலே உள்ளபடி சுட்டிக் காட்டி ஒரு முயற்சி.
மேலும் இதற்கான ஆயுதம் கலப்படமற்ற சுத்தமான கல்வியும். தூய்மையான அமல்களாகும்.
”அவன் தன்னுடைய தூதரை நேர்வழி(சுத்தமான கல்வி)யைக் கொண்டும் சத்திய மார்க்கத்தை (ஸாலிஹான அமலை)க் கொண்டு அனுப்பிவைத்தான். சகல மார்க்கங்களைவிட அதை மேலோங்க செய்வதற்காக (தன் தூதரை அனுப்பினான்). இன்னும் (இதற்கு) சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன்.” (48:28)
source: http://www.tamilsalafi/