Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சுத்தம் பேணாவிடில் ஒழுக்கமுள்ள தம்பதியர்க்குக்கூட எயிட்ஸ் வரலாம்!

Posted on February 24, 2012 by admin

 சுத்தம் பேணாவிடில்  ஒழுக்கமுள்ள தம்பதியர்க்குக்கூட 

 எயிட்ஸ் வரலாம்…

முறையற்ற உடலுறவு நடவடிக்கைகள் உள்ளவர்களுக்கு எயிட்ஸ் இருப்பது இன்று பட்டவர்த்தனமாய் அறியப்பட்ட ஒன்றாகும். இப்படி எயிட்ஸ் தாக்கப்பட்டவர்களோடு அறியாமையினாலோ, எதாச்சையாகவோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ உடலுறவு கொள்ளும் பிறருக்கும் எயிட்ஸ் பரவுகிறது என்பதும் உண்மை.

முறையற்ற உடலுறவு நடவடிக்கைகள் எனும்பொழுது, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை நாம் முக்கியமாகக் கருத்தில் கொள்கிறோம். பொதுவாக ரத்த நாளங்களுடன் HIV புகுந்தாலொழிய அதனால் பாதிப்பு இருக்காது. ஆனால் உடலுறவின்போது ரத்த நாளங்களோடு தொடர்பு ஏற்படுவதில்லையே! அவ்வாறு இருக்கையில் எவ்வாறு இது நிகழ்கிறது என்பது சிலரின் சந்தேகம். உண்மையான சந்தேகம் மட்டுமல்ல, தெளிவு படுத்திக்கொள்ள வேண்டிய சந்தேகமும் கூட! இந்த சந்தேகத்திற்கான விடையை அறிந்துகொள்வது பல தம்பதிகளுக்கும் நிச்சயமாக உதவியாக இருக்கும். அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் உதவும். அந்த நோக்கத்திற்காவே இந்த ஆக்கம்.

எயிட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோய்க்கு காரணமாய் அமைவது HIV எனப்படும் ஒருவகை வைரஸ் கிருமிகளே. HIV என்றால் Acquired Immuno Deficiency Syndrome என்பதாகும். HIV என்றால் Human Immuno Deficiency Virus என்பதாகும்.

HIV உள்ளே புகுந்ததென்றால், அங்கே நோய் எதிர்ப்புத்திறன் வெகுவாக பாதிக்கப்படும். HIV நுழைந்த மாத்திரத்தில் அது மனித உடல் இயற்கையாக அமைந்திருப்பதற்குக் காரணமான (T 4) செல்களை வலுவிழக்கச்செய்து விழுங்கிவிடும். நாளாக, நாளாக நோய் எதிர்ப்பு என்பதே உடலில் துளியும் இல்லாத நிலயில், இதுவரை HIV பாஸிட்டிவாக இருந்த இக்கோளாறு, இப்போது “எயிட்ஸ்” எனப்படும் இறுதி நிலைக்குச் சென்று விடுகிறது.

ஒருவரது ரத்த நாளத்தில் HIV புகுந்துவிட்டதென்றல் அவருக்கு மிகப் பெரியதோர் ஆபத்து ஏற்பட்டுவிட்டது என்று பொருள். ஏனெனில் HIV -யின் உணவே, ரத்தத்தில் உள்ள உயிர்க்காப்பு அணுக்கள்தான்.

உடலுறவின்போது நாம் ரத்த நாளங்களோடோ அல்லது ரத்த ஓட்டத்தினோடோ நேரடியாகத் தொடர்பு கொள்வது இல்லைதான். இவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமும் நமது உடற்கூற்றிலே இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், நம்மவரிடத்திலோ அங்கே (மறைவான அந்தரங்கப்பகுதியில்) புண் ஏற்பட்டிருந்தால் அங்கே தோல் மட்டுமா திறந்திருக்கும்? ரத்தநாளங்களும் அல்லவா சேர்ந்தே திறந்திருக்கும்! ரத்தம், துர்நீர், சீழ் ஆகியன புண்ணிலிருந்து வடிகின்றதல்லவா? இவையெல்லாம் ரத்த நாளங்களிலிருந்து வருபவைதானே?

கிருமிகளின் தாக்குதலால் ஆண்-பெண் இருபாலருக்குமே மறையுறுப்புகளில் புண்கள் உண்டாகும் வாய்ப்புண்டு. இவ்வாறு, புண்கள் ஏற்பட்டிருக்கும் ஒருவர், HIV ஐ சுமந்து கொண்டிருக்கும்போது ஒருவருடன் உடலுறவு கொள்ளும்போது கொஞ்சம் HIV இங்கிருந்து அங்கு தாவி விடும்.

உதாரணமாக மறையுறுப்பில் புண் உள்ள ஓர் ஆண், HIV பாஸிட்டிவாக உள்ள பெண்ணிடம் உறவு கொள்கிறார் எனில், இவருக்கு ஓர் உறவிலேயே HIV ஒட்டிக்கொண்டு விடும். இந்த நிலையில் மணவாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் கணவரொருவர், நப்பாசையின் பேரில் இதுபோன்ற பெண்ணிடம் வருகிறார் என வைத்துக்கொள்வோம். சந்தைக்குச் சென்று சரக்கு வாங்கி வந்த கதையாக தன் குறிப்புண் வழியாக HIV யை அவர் வாங்கிக் கொண்டு வந்து ஒன்றுமறியாத தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் மூலம் அவளுக்கு இலவசமாக இந்நோயை பறப்பி விடுவார். மனைவியும் கணவனின் ஒத்தாசையில் கருத்தரிப்பாள். HIV யை கர்ப் காலத்திலேயோ அல்லது பிரவசத்தின் போதோ சிசுவிற்குள் இறக்குவாள்.

ஆக, இப்போது நாம் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் ஆணாகிலும் சரி, பெண்ணாகிலும் சரி தத்தமது மறைஉறுப்பில் தொற்று ஏற்படாமல், புண்கள் ஏற்படாமல் கவனமாய் இருக்க வேண்டும் என்பதே. ஒழுக்கமுள்ள கணவன் மனைவியாகவே இருந்தாலும் சரி மறைஉறுப்பில் புண் இருக்கும்போது உடலுறவு கொள்ளாதீர்கள்.

இதற்கு மிகச்சிறந்த வழி ஆணும் பெண்ணும் தங்களது மறைவிடங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பதே. ஆம்! மறையுறுப்புகளை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கும்போதும்கூட உறுப்புகளை சுத்தப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இஸ்லாம் இதை கடமையாக்கியிருப்பதோடு மட்டுமின்றி, சிறுநீர் கழித்துவிட்டு சரியாக சுத்தம் செய்யாதவர்களின் உடலை பூமி நெறுக்கிப்பிடிக்கும் என்றும் எச்சரிக்கிறது.

ஆண்-பெண் தூய்மையாக இருக்க வேண்டியது கட்டாயக்கடமையாகவே இஸ்லாம் வலியுறுத்திருப்பதை எண்ணிப்பர்க்கும்போது தூய்மையாக இருக்க வேண்டியதை கடமையாக்கிய இறைவனுக்குகு நிச்சயமாக ஒவ்வொருவரும் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம்.

நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நலத்தை வழங்க அந்த ஏக இறைவன் போதுமானவனாக இருக்கின்றான். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒழுக்கமான தூய்மையான வாழ்க்கை முறையை மேற்கொள்வதே.www.nidur.info

 

எயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே! – BBC உலக சேவை.

  Rasmin M.I.Sc 

இயற்கை மார்க்கம் தான் உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தர முடியும். இஸ்லாம் என்பது இறைவனால் அருளப் பெற்ற இயற்கை மார்க்கமாகும்.

இந்த இயற்கை மார்க்கம் மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகத் தெளிவான பதில்களைத் தருகிறது என்றால் அது மிகையில்லை.

உலகையை ஆட்டம் காணச் செய்யும் மிகக் கொடிய நோயான ஹெச்.ஐ.வி. எய்ட்ஸை விட்டும் மனிதனைக் காப்பாற்ற பல நாடுகளும் தங்களால் முடிந்த மருத்துவக் கண்டுபிடிப்புக்களில் இறங்கியுள்ளன.

இவ்வகையில் ஆய்வுகளை மேற்கொண்ட பல நாடுகளும் இந்தக் கொடுமையான நோய்க்கு தீர்வாக முன்வைத்துள்ளது விருத்த சேதனம் என்ற இஸ்லாமிய வழிகாட்டளைத் தான்.

ஆம் ஆண்கள் தங்கள் மர்ம உருப்பின் முன் பகுதியை நீக்கி விருத்த சேதனம் செய்து கொள்வதின் மூலம் இந்த நோயின் பாதிப்பை 60 சதவீதத்தினால் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இஸ்லாம் கூறும் தீர்வுதான் இறுதித் தீர்வாகும்.

“இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது,மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை”என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5891)

மேற்கண்ட செய்தியில் இயற்கையாக செய்ய வேண்டிய கடமைகளின் பட்டியலில் முதல் இடத்தில் விருத்த சேதனத்தைத் தான் இஸ்லாம் குறிப்பிடுகிறது.

ஆண்கள் விருத்த சேதனம் செய்து கொள்வதென்பது எயிட்ஸ் என்ற கொடிய நோயிலிருந்து அவர்களைப் பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துள்ளது.

பி.பி.ஸி உலக சேவை (18.08.2011) அன்று வெளியிட்டுள்ள தகவல்:

உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை ஆண்கள் விருத்தசேஷனம் செய்து கொள்வதன் மூலம் 60 வீதத்தால் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதாவது முஸ்லிம்கள் உட்பட சில சமூகத்தினர் செய்துகொள்வது போன்று ஆண்குறியின் முன் தோலை அகற்றுவதே விருத்த சேஷனம் ஆகும்.

இதனால், பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்கள் விருத்த சேஷனத்தை செய்து கொள்வதை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜிம்பாப்பேவேயிலும் அரசாங்கம் இப்படியான திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் ஆண்களுக்கு விருத்த சேஷனம் பண்ண முடியும் என்று அந்த நாட்டின் அரசாங்கம் நம்புகிறது. B.B.C Tamil

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் பற்றி பி.பி.சி ஏற்கனவே வெளியிட்ட ஒரு தகவல்:

இஸ்லாம் சொல்லும் கத்னா முறை – ஆண்கள் தங்கள் மர்ம உறுப்பின் முன் பகுதியை நீக்குவதின் மூலம் விருத்த சேதனம் செய்துகொள்வதின் மூலம் ஏற்படும் நன்மைகளை பி.பி.சி உலக சேவை ஏற்கனவே பல முறை சுட்டிக் காட்டியிருந்தது. அதன் ஒரு பகுதியை இந்த ஆக்கத்துடனும் இணைத்துத் தருகிறோம்.

22.07.07 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தி:

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை 5000-க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.

தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.

இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.

இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா? அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா?என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.

கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.

விருத்த சேதனம் பற்றி அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த ஆய்வு.

ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது என்று அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.

சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இறுதியாக………………

இஸ்லாமிய மார்க்கம் தான் இவ்வுலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல முடியும் என்பதை மேற்கண்ட செய்திகள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

ஆக இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஏற்று நடந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெருவோமாக.

source: http://rasminmisc.blogspot.in/2011/08/blog-post_18.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

63 − 56 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb