தோல்வி இறைவனை நினைவூட்டும்!
மௌலானா ரிஜ்வான் பாஷா காதிரி
சூரா நிஸா அத்தியாயம் 4, ருகூ 5, நமது இஸ்லாஹ், திருந்துதல் குறித்து அல்லாஹ் பேசுகிறான். ‘‘யுரீதுல்லாஹ்’’ இறை திட்டம் நிச்சயம் நிறைவேறும்.
மனிதன் திட்டமிடுகிறான். ஆனால் முடிவு மனிதன் கை வசமில்லை.
அலி ரளியல்லாஹு அன்ஹு நபித் தோழரிடம் இருவர் விவாதித்தனர். ஒருவர் கூறினார் – அனைத்தும் இறைவன் செயல். மனிதனால் ஆகப் போவது எதுவுமில்லை.
இன்னொருவர் வாதிட்டார் – மனிதனுக்கு ஆற்றலனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
அலி ரளியல்லாஹு அன்ஹு கூறினார். ஒரு காலை தூக்குவீர்! இப்போது இன்னொரு காலை உயர்த்துங்கள்.
‘‘நான் விழுந்துவிடுவேன்’’
அலி விளக்கினார், சில காரியங்களை மனிதனால் நிகழ்த்த முடியும். சகல ஆற்றல்களை கைக் கொள்ள இயலாது.
வமா தஷாவுன்ன இல்லா யஷா அல்லாஹ் & நீங்கள் நினைப்பது நடவாது. அல்லாஹ் நாடியது நிறைவேறும்.
ஃப இஜா அஜம்த்த ஃபதவக்கல் அலல்லாஹ் & நீங்கள் முடிவெடுங்கள். நம்பிக்கை இறைவன் மீது வை.
அலி ரளியல்லாஹு அன்ஹு நபித் தோழர் விளக்கமளிக்கிறார் இறைவனை எப்படி தெரிந்துக் கொண்டீர் நபிகளாரின் தோழமை நெருக்கம் இறைவனை தெரிந்து கொள்ள உதவியது. பலமுறை நான் நினைத்ததை செய்ய முடியாமல் போயிற்று. ஒவ்வொரு முறையும் தோல்வியடையும் போது உணர்ந்தேன். அனைத்து ஆற்றலுமிக்க ஒருவன் செயல்படுத்துகிறான். அல்லாஹ்வின் விருப்பம் மட்டுமே நிறைவேறும்.
வசனம் 26, யுரீதுல்லாஹ§ அல்லாஹ் முடிவெடுத்தான். இறை முடிவு, திட்டம் நடந்தே தீரும். ”லியு பையினலக்கும்” – தெளிவாக உங்களுக்கு விளக்குவதற்கு.
குர்ஆனை விளக்குவது மனிதனுடைய காரியமல்ல. இறைவனுடைய செயல்.
யாரேனும் ஒரு மனிதர் உங்களுக்கு குர்ஆனை விளக்கினால் அது இறைவனின் கருணை. அது மனிதனின் சொந்த திறமையல்ல. குர்ஆனை கற்றுக் கொடுக்க அல்லாஹ் வாய்ப்பளித்துள்ளான்.
ஆயத் தொடர்கிறது
சுனன் – சுன்னத் பன்மை.
மனிதனின் வழிமுறை பழக்க வழக்கம் வயதையட்டி மாறுபடுகிறது. பள்ளிப் பருவத்தில் தூங்குவது, உண்பது, ஆடை அணிதல் மற்றும் பணிக்கு செல்லும் வளர்ந்த நிலை இரண்டுக்குமிடையில் பலத்த மாறுபாடு உண்டு.
அல்லாஹ்வின் தரீக்கா, வழிமுறை, சுன்னத் மாறுவதில்லை. எல்லா பருவத்திலும் ஒரே விதம். ஒரே ஏற்பாடு.
சூரியன் காலையில் உதிக்கும். நிலா வழக்கமான பணி செய்யும். குறிப்பிட்ட பருவத்தில் தானியம், கனி முளைக்கும்.
‘‘உங்கள்முன் சென்றவர்களின் வழியில் செலுத்த இறைவன் நாடிவிட்டான்.’’
வசனம் தொடர்கிறது – உயர்ந்தோரின் பாதையில் உங்களை செலுத்த அல்லாஹ் விரும்புகிறான்.
நான் யாரையும் பின்பற்றமாட்டேன் & பிடிவாதம் ஜிஹாலத்து.
முஸ்லிம்களில் பலர் நபிகளாரின் வாழ்க்கையை அப்படியே பின்பற்றுகின்றனர். அத்தகையோரை பின்பற்றுவது நபிகளாரை அடியட்டி நடப்பதற்கு சமம்.
ஷாபி, ஹனபி இமாம்களை பின்பற்றலாம். கடுமையான விரோதத்தை சிலர் வளர்த்துக் கொள்கின்றனர். இமாம்கள் நபிகளாரை பின்பற்றி வாழ்ந்தனர். நேரடியாக நபிகளாரை மட்டும் நேசிப்போம் வாதிடுவது பெரியோர்களின் தூய வாழ்வை அவமதிப்பதாகும்.
யதூப அலைக்கும் உங்கள் மீது இறைவன் கவனம் கொள்கிறான். ஒவ்வொரு கணமும் கவனியாமல் இருப்பதில்லை.
ஷபோ பரா அத், ஷபே மிஃராஜ், ஈத் பெருநாள், ஹஜ் புனித நாட்களில் மட்டும் அல்லாஹ் உங்களை கவனிப்பதில்லை. நீங்கள் எப்போது கூப்பிட்டாலும், தவ்பா பாவமன்னிப்பு கேட்டாலும் அங்கீகரிக்கிறான். ஒப்புகிறான்.
”யதூபு” – நிகழ்காலம், எதிர்காலத்துக்கும் பொருந்தும்.
மனிதன் ‘‘யா ரப்பனா’’, என் இறைவா கூறினால் அல்லாஹ் விடையளிக்கிறான். ‘‘யா அப்தீ’’ – என் அடிமையே!
ஒவ்வொரு மனிதன் மீதும் அல்லாஹ் தனி அக்கறை, கவனம் காட்டுகிறான். மனிதன் அழைத்தால் தனி மகிழ்ச்சியடைகிறான். கத்தி கதறி அழைக்க வேண்டியதில்லை. கூப்பாடு போட வேண்டாம். உதூவூ ரப்பகும் தஜருவன் வ ருஃபிய பணிவாக, கண்ணியத்துடன். எளிமையுணர்வுடன் அழைக்கலாம்.
வசனம் 55, அத்தியாயம் 7, அஃராஃப். அந்தரங்கமாக கூப்பிடலாம். இதயத்தின் ஆழத்திலிருந்து கூறுவீர்.
துஆ மனப்பாடமிட்டு ஒப்புவிக்கிறோம். மலக்குமார்கள் வானவர்கள் வானத்திலிருந்து இறங்கி வரப் போவதில்லை. தேவை நிறைவேற துஆ செய்வீர்.
ஹதீஸ் – இரவில் அல்லாஹ் தனது கரங்களை விரிக்கிறான். ‘‘யமுத்து யதைஹி’’ பகலில் விலகியிருப்போர் இரவில் மன்னிப்பு தேடலாம். நெருங்கலாம்.
பகலில் கைகளை அல்லாஹ் விரிக்கிறான். இரவில் பாவம் புரிந்தோர் நெருங்க வாய்ப்பு. இறைவன் கை, கரம், விரல் கற்பனை வேண்டாம். உட்கருத்தை புரிந்து கொள்வீர். அல்லாஹ்வுக்கு கை இருக்கிறதா விதண்டாவாதம் தேவையில்லை. ஆயத் தொடர்கிறது.
”வல்லாஹு அலீமுன் ஹக்கீம்’ – உங்களது இதயத்தில் உள்ளதை அல்லாஹ் தெரிந்துள்ளான்.
யா அலீம் கூறுங்கள் ஓதி வாருங்கள் அறிவு அதிகப்படும்.
யா கபீர் ஓதுவீர் – குணம் சீராகும். மனித இதயத்தில் ஓட்டம், எண்ணங்களை இறைவன் மறைத்து வைக்கிறான். இல்லையெனில் அவமானப்பட நேரிடும்.
வசனம் 27, – ”வல்லாஹு யுரீது அய்ய தூப அலைக்கும்” – உங்களை மன்னிக்க அல்லாஹ் விரும்புகிறான்.
யூனூஸ் நபி மன்னிப்பு கேட்கிறார். ”லா இலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்து மினல்லாலிமீன்” வணக்கத்துக்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. நீ பரிசுத்தமானவன். நான் பாவிகளில் ஒருவன்.
தவ்பா செய்யும் வரை பாவிகளின் பட்டியல். மன்னிப்பு கேட்டதும் ‘‘மஹ்பூப்’’ பிரியமானவர் பட்டியலில் இடம் பிடித்து விடுவீர்கள்.
ஆயத் தொடர்கிறது. ‘‘தனது விருப்பத்தை பின்பற்றுவோர் உம்மை இறைபாதையிலிருந்து தூரமாக்குகின்றனர்.’’ நபிகளாரின் ஷரீஅத்தை விட்டுவிட்டால் காலத்தின் தேவை நிறைவேறலாம். நட்டம் வரும். துனியா, ஆகிரத் இழப்பு நேரும். நபிகளார் அமர்ந்து உணவருந்தினார். இபாதத். நின்று கொண்டு சாப்பிட்டால் நோய் வரும்.
இரவில் தாமதமாக உறங்கக் கூடாது. புது கலாச்சாரம். இரவில் நீண்ட நேரம் கண் விழிப்பதாகும். நபிகளாரின் சுன்னத், சீக்கிரமாக தூங்கச் செல்ல வேண்டும். விடியற்காலை எழுந்திருக்க வேண்டும். மற்ற வழிகள் தற்கொலைக்கு உங்களை அழைத்துச் செல்லும். நபிகளாரை உதறினால் நீங்களே உங்கள் அழிவுக்கு காரணமாவீர்.
வசனம் 28. மூன்றாவது முறை. ஒரே ருக்கூஃ அல்லாஹ் விரும்புகிறான். ”யுரீதுல்லாஹஹ்” எளிதாக்க திட்டமிடுகிறான்.
முன்சென்ற உம்மத்துகளுக்கு சட்டம் கடுமையாயிருந்தது. ஆடை அசுத்தமானால் வெட்டியெறிய வேண்டும். அல்லது புதிதாக தைக்க வேண்டும். மஸ்ஜித் உள் சென்று தொழ வேண்டும். நமது காலத்தில் ரயில், வீடு எங்கும் தொழலாம். பூமி முழுவதும் மஸ்ஜித்.
”குலிக்கல் இன்சானு ஜயிபா” மனிதன் பலவீனமாக படைக்கப்பட்டுள்ளான். பெரிய வன விலங்கு, காற்று, கடல், மலை ஒப்பிட்டால் மனிதனின் சக்தி குறைவு. அல்லாஹ் அனைத்து படைப்பினங்களையும் மனிதனுக்கு கட்டுப்பட வைத்துள்ளான்.
முழு மனித சமுதாயம் ஒன்றிணைந்தாலும் இறைவனுக்கு முன் பலவீனமானவர்களாயுள்ளோம். எவ்வளவு அறிவியல் முன்னேறினாலும் நிலநடுக்கம், இயற்கைப் பேரிடர், பேரழிவு வருகிறது. சுனாமி இரண்டு லட்சம் மக்களை சாகடித்தது. இறை ஆற்றல் திகைப்பூட்டியது.
அமெரிக்கா சூப்பர் பவர். அங்கு இறை தண்டனை பேரிடர் வடிவில் அவதியாகிறது. யார் வலிமையாளராக திமிர் பேசினாலும் அல்லாஹ் தன் வலிமையை நிரூபிக்கிறான். ஜப்பான் முன்னேறிய நாடு. ஆனால் இயற்கை அழிவுகளை தடுக்க இயலவில்லை.
நம்ரூது கடவுளாக பாவித்தான். கொசு பாடம் தந்தது. பஞ்சம் வந்தால் தெரியும். செல்வந்தர்கள் குடிநீருக்கு வரிசையில் காத்திருப்பதை பார்க்கலாம். விமானத்திலிருந்து காய்ந்த ரொட்டி வீசப்படும். மக்கள் விழுந்தடித்துக் கொண்டு பாய்வார்கள். ஓடுகின்றனர். மனித பலவீனம் தெரியும். மனிதனுக்கு தனித்த ஆற்றல், வலிமை ஏதுமில்லை. இறைவனின் கருணையால் மனிதன் நடமாடுகிறான். மருத்துவமனை சென்று பார்வையிடுங்கள். ஈமான் உயரும். ஆறு மாதங்கள் படுத்த படுக்கையில் ஒருவர் உயிர் மட்டும் பிழைக்கிறார்.
வசனம் 29, முறையற்ற வகையில் பொருட்களை உண்ணாதீர்.
பாவ வருமானம் ஈட்ட வேண்டாம். சினிமா சிடி, போட்டோகிராபி, சூதாட்டம், வட்டி, அபகரிப்பு பணம் வருமானமாகக் கூடாது. வணிகத்துக்கு அனுமதி உண்டு. ஆனால் முன் நிபந்தனை. வாங்குவோர், விற்போர் இருவரும் திருப்தியடைய வேண்டும். நில அபகரிப்பு, ரவுடி வலிமையுடன் ஆக்கிரமிப்பது கூடாது.
ஹலால் வருமானம் மிகச் சிறந்த அமல்.
வசனம் 29, நீங்கள் உங்களையே கொலை செய்யாதீர்.
தற்கொலை காரணம், விரும்பிய வாழ்க்கைத் தரம், உயர்வு கிடைக்கவில்லை. மனம் வெதும்பி உயிர் துறக்கிறார்.
நபிகளார் கருத்து, தற்கொலை செய்தவருக்கு நரகில் மீண்டும் மீண்டும் அதே விதமாக தண்டனை வழங்கப்படும். கருணைக் கொலை அனுமதிக்கப்பட மாட்டாது. மரணம் வேண்டி துஆ செய்யக்கூடாது. மரண வேதனையில் ஒருவரை பார்த்தால் இறைவனிடம் இவ்வாறு துஆ கேட்கலாம்.
‘‘இவருக்கு எது நன்மையோ, அல்லாஹ்
அதனை வழங்குவாயாக!’’
மனிதன் எப்போதும் நிராசையடையக் கூடாது.
இன்னம அல் உஸ்ரி யுஸ்ரா
இன்னம அல் உஸ்ரி யுஸ்ரா (94:5&6)
இரண்டு முறை கூறுகிறான். சங்கடம் வந்தால் நிவாரணம் உண்டு.
கொலை மற்றவரையும் செய்யக்கூடாது. அது உங்களையே கொலை செய்வதாகும்.
வசனம் 30, யாரேனும் அநியாயமாக, வரம்பு மீறினால் நரகம் கிடைக்கும்.
வசனம் 31, பெரும் பாவங்களிலிருந்து விலகினால் சிறிய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். சுவனம் பரிசாகக் கிடைக்கும் மரியாதை மிகுந்த இடம் கண்ணியம் வழங்கப்படும். பொருட்காட்சி, ரயில் நுழைய விரும்பினால் பயணச்சீட்டு காண்பிக்க வேண்டும். சுவனத்தில் நுழைய விரும்பினால் நேரிய வாழ்வு தூய்மையான இதயம் தேவை. கண்ணியமான இடத்தில் உங்களை யாரும் அவமானப்படுத்த முடியாது.
வசனம் 32, அதிக வசதி வழங்குவது இறைவன். பிறருடைய சிறப்புக்களை பறிக்க, களவாட முயலக்கூடாது. அறிவு, அனுபவம், செல்வம் ஒவ்வொன்றும் வரப்பிரசாதம். இறைவனின் திட்டம் ஹிக்மத். இதர படைப்பை விடவும் அல்லாஹ் உங்களை உயர்த்தியுள்ளான். நாக்கு தொங்கப் போட்டுக் கொண்டு நாய் அலைகிறது.
பல்லி சுவற்றில் ஒட்டி ஊர்ந்து உயிர் வாழ்கிறது. அல்லாஹ் எந்த நிலையில் உங்களை வாழ வைத்துள்ளானோ அதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும். சூரத் முகம், உடல் வடிவம் புறத்தோற்றத்தை பார்க்காதீர். உங்களுக்குள் ஏராளமான ஆற்றலை அல்லாஹ் மறைத்து வைத்துள்ளான்.
APJ. அப்துல் கலாம் கிராமத்தில் பிறந்தார். நியூஸ் பேப்பர் விற்று வளர்ந்தார். மின் வசதியில்லை. நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார். வசனம் 32, ஆண், பெண் சம்பாதித்தது முழு கூலி வழங்கப்படும். பூமியின் செயல் அமைப்பு இயக்கம் நடைபெறுகிறது. அவரவர்களுக்குரிய பொறுப்பை செவ்வனே நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்விடம் அவனுடைய அருளை கேளுங்கள்.
தமிழில்: பொறியாளர் ஆ.ர. இபுராஹிம் பி.இ.,
முஸ்லிம் முரசு பிப்ரவரி 2012
source: http://jahangeer.in/?paged=5