கருக்கலைப்பு (Abortion) பெண்கள் அவசியம் படிக்க வேண்டியது
ஒரு பெண் டாக்டரிடம் போய் சொன்னாள். டாக்டர் எனது பிரச்சனையை நீங்கள் தீர்க்க வேண்டும். உங்கள் ஒருவரால் மட்டும்தான் எனக்கு உதவ முடியும். என் முதல் குழந்தைக்கு ஒருவயது கூட முடியவில்லை. இப்போது நான் குழந்தை உண்டாகியிருக்கிறேன். குழந்தைகளுக்கு இடைவெளி அதிகம் இல்லை.
அதற்கு டாக்டர் கேட்டார்.. சொல்லும்மா நான் அதற்கு என்ன பண்ண வேண்டும். அதற்கு அவள் சொன்னாள். என்னால் இந்த இரண்டு குழந்தைகளையும் கவனிக்க முடியாது .உங்களைத்தான் மலைபோல நம்பியிருக்கின்றேன். நீங்கள்தான் எனக்கு அபார்ஷன் செய்வதற்கு உதவ வேண்டும் என்று கேட்டாள்.
டாக்டர் சிறிது நேரம் அமைதியாக இருந்து யோசித்துவிட்டு சொன்னார். நான் உனக்காக நல்ல தீர்வு ஒன்று யோசித்துள்ளேன். இது அதிகம் ஆபத்து குறைந்த ஐடியாவாகும் என்றார்.
அந்த பெண்ணோ மிகுந்த புன்னைகயுடன் தான் விரும்புவதை டாக்டர் நிறைவேற்றுவார் என்ற ஆவலோடு அவர் மேலும் சொல்லப்போவதை கூர்ந்து கவனித்தாள்
டாக்டர் தொடர்ந்து சொன்னார். உன்னால் ஒரே சமயத்தில் இரண்டு குழந்தைகளை பார்க்க முடியாததால் உன் கையில் உள்ள குழந்தையை கொன்று விடு…இதனால் அடுத்த குழந்தை பிறக்கும் வரை உனக்கு நிறைய ஒய்வூ கிடைக்கும். குழந்தையை கொல்வது என்ற முடிவு எடுத்த பிறகு எந்த குழந்தையை கொன்றால் என்ன? கையில் உள்ள குழந்தையை கொல்வதனால் உன் உடம்புக்கு எந்தவித ஆபத்துமில்லை.
அந்த பெண் சொன்னாள் நோ டாக்டர் ..இது பயங்கரமானது……கொடுமையானது. குழந்தையை கொல்வது க்ரைம். என்று கதறினாள்
டாக்டர் சொன்னார் நீ சொல்வதை முழுவது நான் ஒத்து கொள்கிறேன்.. ஆனால் நீ முதலில் சொன்னபோது உனக்கு இது ஒகே போல எனக்கு தோன்றியது & இது பெட்டர் ஐடியா என்று புன்முறுவலோடு சொன்னார்.
கடைசியில் பிறந்த குழந்தையையும் அல்லது பிறக்க போகும் குழந்தையையும் கொல்வது சரி சமமான் க்ரைம்தான் என்று அவளுக்கு டாக்டர் உணர்தினார்.
டாக்டர் சொன்னது சரிதானே…