Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்மையின் மென்மையை காயப்படுத்தாதீர்கள் – பெண் என்பவள் காட்சிப்பொருளல்ல!

Posted on February 19, 2012 by admin

Image result for facebook and woman

பெண்மையின் மென்மையை காயப்படுத்தாதீர்கள் – பெண் என்பவள் காட்சிப்பொருளல்ல!

ஃபேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. ஃபேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் ஃபோட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

அன்பின், சினிமா தாரகைகளின் புகைப்படங்களையும் தமது சொந்தப்புகைப்படங்களையும் பாவிக்கும் சகோதரிகளுக்கு, பரந்து விரிந்த இணையத்தளத்தில் உங்களை பிரதி நிதித்துவப்படுத்துவதே உங்கள் புகைப்படங்கள் தான்ஸஅது ஒரு புறம் இருக்க ஒரு சில கேள்விகளை கேட்க நினைக்கின்றேன்.!!

…..முதல் பார்வையிலேயே உங்களைப்பற்றி எந்த வகையான சிந்தனையை அடுத்தவர் மனதில் ஏற்படுத்த விரும்புகின்றீர்கள்?

நீங்கள் வியர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காமல் தம் உடலை வைத்துசம்பாதிக்கும் ஒரு வெட்கம் கெட்ட கூட்டத்தின் ரசிகை என்பதை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகின்றீர்களா?

உங்களுக்கு என்ன பெருமை அவர்களின் புகைப்படங்களை பாவிப்பதன் மூலம் வருகின்றது?

உங்களையும் அந்த வெட்கம் கெட்ட கூட்டத்தின் ஒருவராக பிறர் எண்ணிக்கொள்ள அனுமதிப்பீர்களா??

சொந்தப் புகைப்படங்களை பாவிக்கும் நீங்கள், உங்களை நீங்களும் விளம்பரப்படுத்திக் கொள்ள முனைகின்றீர்களா?

நீங்கள் அடுத்தவரால் விரும்பப் படவேண்டும் என்று விரும்புகின்றீர்களா?

உங்களைப்பற்றி மிகையாக எடை போட்டாலும் தவறில்லை குறைவாக எடை போடக்கூடாது என்று நினைக்கின்றீர்களா??

உங்கள் குறைகளை சொல்லா விட்டாலும் பரவாயில்லை பிறரால் புகழப்படவேண்டும் என்று எண்ணுகின்றீர்களா??

அப்படியும் இல்லை என்றால் இனையத்தின் மூலமாக ஆபாசமான தளங்களுக்கு உங்கள் புகைப்படங்களை அனுப்ப நீங்களே வழி செய்கின்றீர்களா?

எது எப்படியோ, face book மூலம் உங்கள் புகைப்படங்கள் வேறு தளங்களில் உலா வர வாய்ப்புக்கள் அதிகம் என்பது உண்மையே..

இதோ சில வழிமுறைகளைச் சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப் பாருங்கள்.

1) உங்கள் புகைப்படங்களை யாருக்கெல்லாம் காட்ட நினைக்கின்றீர்களோ தனியாகக் காட்டிக்கொள்ளுங்கள்.. பொது இடங்களில் பாவித்து பெண்மையின் மென்மையை காயப்படுத்தாதீர்கள்.

2) பெண் என்பவள் காட்சிப்பொருளல்ல என்பதை உணர்ந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள்.. நீங்கள் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் உங்கள் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கலாம் எனவே சிந்தித்து முடிவெடுங்கள்..

3) நீங்கள் இஸ்லாம் கூறும் வகையில் உடையமைப்பைக்கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நவீன தொழில் நுட்பத்தின் மூலம் எந்தளவு நன்மை விளைகின்றதோ அந்தளவு தீமையும் மனித சமூகத்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்றது. உங்கள் புகைப்படங்கள் மூலம் நீங்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படலாம்.

4) உங்களுக்கு உங்கள் அழகைக்காட்டவே வேண்டும் என்றிருந்தால் இருக்கவே இருக்கிரது பல வழிகள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்களேன்..

1 உங்கள் தந்தையிடம் தாயிடம் காட்டலாம்.

2 சகோதர சகோதரிகளிடம் காட்டலாம்

3 உங்கள் கற்பை மஹர் மூலம் ஹலால் ஆக்கிக் கொண்ட உங்கள்கனவரிடம் காட்டலாம்

உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு உறவு (கணவன்) இருக்க யாருக்கோவெல்லாம் உங்கள் உடலை, உங்கள் அழகைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்கள்?

கணவனுக்காக அழங்கரித்து அவரை மகிழ்விப்பதற்கே நன்மைகள் கிடைக்கும் என்றிருக்க பாவத்தின் பால் ஏன் விரைகின்றீர்கள்??.

நீங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் உங்கள் புகைப்படங்களையும், சினிமா நடிகைகளின் படங்களையும் தவிர்த்து இன்னும் எத்தனையோ வகையான படங்கள் உள்ளன அவற்றில் ஒன்றைப் பாவித்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் பெயரை புகைப்படமாகப் பாவியுங்கள்.

தயவு செய்து முஸ்லீம் பெயர்களுடன் + இறை நிராகரிப்பாளர்களின் புகைப்படங்களை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவத்திற்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.

இஸ்லாமிய ஆடைகளைப் பயன்படுத்திக்கொண்டு (face book) துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். நீங்கள் பாவிக்கும் புகைப்படத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக ஹிஜாப் அணிந்த பெண்ணை நீங்கள் profile picture ஆகப்பாவிக்கின்றீர்கள்.ஆனால் நீங்கள் பாவிக்கும் செய்திகளோ சினிமாவும் மார்க்கத்திற்கு முறனான விடயங்களும் தான். இது எந்த வகையில்ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்? உங்களால் இஸ்லாத்திற்கு எந்தக் கெடுதலும் ஏற்படக்கூடாதல்லவா அதற்காத்தான் இந்த ஆலோசனைகள்..

“உங்களால் தான் மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை மறக்க வேண்டாம்”..

இந்த ஆலோசனைகள் யாரது மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்… இது ஆண்களுக்கும் பொருந்தும்.

source: http://www.readisla.net/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

39 + = 43

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb