Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனித சமுதாயத்தை பிளப்பதும் பிணைப்பதும் எது?

Posted on February 18, 2012 by admin

M U S T R E A D

  மனித சமுதாயத்தை    பிளப்பதும் பிணைப்பதும் எது?  

இதயத்தில் கண்ணியம் இருந்தால் நடத்தையில் அழகு மிளிரும்.

நடத்தை அழகாக இருந்தால் தேசத்தில் ஒழுங்கு இருக்கும்.

தேசத்தில் ஒழுங்கு இருந்தால் உலகில் அமைதி நிலவும். (-சீனப் பழமொழி)

நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களே அமைதியுள்ள வீட்டையும், நாட்டையும், உலகையும் உருவாக்குகின்றார்கள். இவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே ஒரு சமூகத்தின் அமைதி அமையும். பொருள் வெறி, பதவி வெறி, புகழ் வெறி, ஆணவம், பொறாமை, பகை, ஆதிக்க உணர்வு, மாச்சரியம் கொண்டவர்கள் பெருகி இருப்பதே சமூக அமைதி குலைவதற்கு முக்கியக் காரணமாகும்.

மேலோட்டமாகப் பார்த்தால் கருத்து வேறுபாடுகள், கலாச்சார வேறுபாடுகள், மொழி இன வேறுபாடுகள் ஆகியவையே மோதலுக்கு காரணம்போல் தோற்றம் அளிக்கிறது. உண்மை அதுவாக இருக்குமானால், ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வது ஏன்? நாத்திகக் குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது ஏன்? பொதுவுடமை சிந்தனையாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது ஏன்?

“சங்க காலத்தில் 101 போர்கள் நிகழ்ந்ததாக சான்று இருக்கிறது. அந்த 101 போர்களில் இரண்டு போர்கள் கடம்பரோடு செய்த போர்கள். ஒரு ஆரியப் போர். மீதமுள்ள 98 போர்கள் தமிழர்கள் அவர்களுக்குள் செய்து கொண்ட போர்” என்கிறார் கவிஞர் வைரமுத்து.

ஆதிக்கம் செலுத்துவதற்கு மனிதன் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றான். பதவி, பணம், படை, மக்களின் எண்ணிக்கை ஆகியவை ஆதிக்கம் செலுத்துவதற்கான கருவியாக பயன்பட்டிருக்கின்றன. இந்த வரிசையில் மதம், மொழி, கலாச்சாரம் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

மதத்தை வெவ்வேறு வழிகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஓர் ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார்கள், ஆதிக்ககாரர்கள்.

பிறப்பின் அடிப்படையில் பேதங்கள் கற்பித்து “இது ஆண்டவனின் ஏற்பாடு” என்று சொல்லி நம்ப வைப்பது.

மனிதர்களில் சில பிரிவினரை கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறி உயர்வுபடுத்திக் காட்டுவது.

கடவுளால் தேர்ந்தெடுக்கப்ப்பட்ட சமூகம் என்று தங்களை அழைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்துவது.

அரசர்கள் கடவுளின் அவதாரங்கள் என்று கூறி மக்களை ஏமாற்றுவது.

இப்படி பலவகைகளில் ஆதிக்கம் செலுத்த மதத்தை மனிதன் பயன்படுத்தியிருக்கின்றான்.

எனவே, மோதல்களுக்கும் பிளவுகளுக்கும் காரணம் கருத்து வேறுபாடுகளோ, கலாச்சார வேறுபாடுகளோ அல்ல. மாறாக மனிதனின் தீய எண்ணங்களே அவற்றை உருவாக்கியுள்ளன. இக்கருத்தை இறைவேதமாம் திருக்குர்ஆன் அழகுபட விவரிக்கிறது.

“(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.” (அல்குர்ஆன் 2:231)

“ஒருவர்மீது ஒருவர் அக்கிரமம் புரியும் பொருட்டு வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர்” எனும் இறை வசனம் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

 ஆதிக்க நோய்க்கு அருமருந்து அன்பும், நீதியும்தான் :

ஆதிக்க உணர்வே சமூக அநீதிகளுக்கு அடிப்படை. இந்த ஆதிக்க நோய்க்கு அருமருந்து அன்பும், நீதியும்.

மனித நேயமும், நீதியும் மிக்க ஒரு சமூகத்தில்தான் அமைதி தவழ முடியும். இவ்விரண்டும் இணைந்தே வரவேண்டும். சிலர் சமூக நீதி பற்றிப் பேசுகின்றார்கள். தங்களது பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர். ஆனால், மனித நேயத்தை மறந்துவிடுகின்றனர். நம்மை ஒரு காலத்தில் நசுக்கியவர்களை நமக்கு வாய்ப்புக் கிட்டினால் நசுக்கிவிட வேண்டும் என்ற வெறியுணர்வுதான் அவர்களிடம் காணப்படுகிறது. இந்த அனுகுமுறை பழிவாங்கும் உணர்வை வளர்த்து பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர அமைதிக்கு வழிவகுக்காது. நீதிக்கான போராட்டத்தில் மனித நேயத்தை இழந்துவிடக் கூடாது.

இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமியப் பணியைத் தொடங்கிய காலத்தில் சமூகம், அரசியல், பொருளாதாரம். ஆன்மிகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் அடக்கு முறைகள், சுரண்டல்கள், அநீதிகள் ஆகியன கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஜாதிக்கொடுமை, பெண்களுக்கு எதிரான அநீதிகள், குலச்சண்டைகள், பாலியல் பலாத்காரங்கள், வழிப்பறி, வட்டி, சூது, மது ஆகியன ஆகியன அன்றைய மக்களின் வாழ்க்கை முறையாக இருந்தன. இவை அனைத்திற்கும் எதிராகக் குரல் கொடுத்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

“…இவர்(முஹம்மத்) நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகின்றார். தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும் அவர்களுக்கு தூய்மையானவற்றை ஆகுமாக்குகின்றார். தூய்மை இல்லாதவற்றை தடை செய்கின்றார். அவர்களின் மீதுள்ள சுமையை இறக்கிவிடுகிறார். அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளை உடைத்தெறிகிறார்…” (அல்குர்ஆன் 7:157)

என்ற இறை வசனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த பணியை நமக்கு எடுத்துரைக்கிறது. தீமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் மனித நேயம் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டார்கள். துவேஷம் துளியும் கலக்காத புரட்சியே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடத்திய புரட்சியாகும். சில வேளைகளில் அநீதிக்கு எதிராக பலம் பயன்படுத்தப்பட்டு போர்களும் நிகழ்த்தப்பட்டன. ஆனால், இன வெறுப்பு, துவேஷம், பழிக்குப்பழி, ஆகிய உணர்வுகளுக்கு ஒரு போதும் இடம் அளிக்கப்படவில்லை. மாறாக உள்ளங்களை இணைப்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பிறப்பு, குலம், கோத்திரம் என்ற அடிப்படையில் மோதிக்கொண்டிருந்த மக்களை அன்பினால் இணைத்த நிகழ்ச்சியை அல்குர்ஆன் கீழ்க்கணடவாறு குறிப்பிடுகிறது.

“இறை நம்பிக்கை கொண்டவர்களே! இறைவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப்பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். நீங்கள் நெருப்பு படுகுழியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தீர்கள். இறைவன் உங்களை திலிருந்து காப்பாறிவிட்டான்”. (அல்குர்ஆன் 3:103)

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

89 + = 96

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb