Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம், அருளாளனிடம் சிறப்போம்

Posted on February 17, 2012 by admin

அல்லாஹ்வின் பக்கம் அழைப்போம், அருளாளனிடம் சிறப்போம்

 ஃபாத்திமா ஷஹானா கொழும்பு

இந்த உலகில் நபிமார்கள் என்று சொல்லப்படும் இறைவனின் தூதர்கள் செய்த இஸ்லாமியப் பிரச்சாரத்தை நாமும் தினமும் செய்ய வேண்டும் அந்த பிரச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்துக் கொள்வது அல்லாஹ்வைப் பற்றிய பிரச்சாரமாகும்.

இன்றைக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் மாற்று மத அன்பர்களானாலும் அல்லது இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு திரியும் முஸ்லீம் பெயர் தாங்கிகளாக இருந்தாலும் இஸ்லாத்தை சரிவர புரியாததற்காண முக்கிய காரணம்; இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கையை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

அந்தக் கடவுள் கொள்கைளை அவர்கள் சரியாக அறிந்து கொண்டால் தமது வாழ்வில் வெற்றி பெருவது மிகவும் சுலபமாகிவிடும் என்பதை அறியாதுள்ளார்கள் என்பதே மிகவும் கவலைக்குறிய விஷயமாகும்.

இதன் காரணத்தினால் தான் இஸ்லாம் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதை ஒரு முக்கிய விஷயமாக நமக்கு எடுத்து சொல்கிறது.

உமது இறைவனின் பக்கம் அழைப்பீராக! நீர் நேரான வழியில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 22:67)

உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்! (அல்குர்ஆன் 28:87)

அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும் அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவன் பக்கமே உள்ளது என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 13:36)

இதுவே எனது பாதை நானும் என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம்.அல்லாஹ் தூயவன் நான் இணை கற்பிப்பவன் அல்லன் என்று (முஹம்மதே!)கூறுவிராக! (அல்குர்ஆன் 12:108)

அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இடக்கூடிய கட்டளைகளில் மிக முக்கியமான ஒன்றாக இதனை சொல்லிக் காட்டுகிறான்.அதாவது நபியவர்கள் செய்த முழுமையான பிரச்சாரத்தைப் பற்றி குறிப்பிடும் போது நானும் என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம் என்று நபியே நீங்கள் சொல்லுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அதாவது இஸ்லாமிய பிரச்சாரம் செய்வதென்றாலே அது அல்;லாஹ்வைப் பற்றிய பிரச்சாரம் தான் என்பதை மிகத் தெளிவாக சொல்லும் படி மேற்கண்ட வசனத்தின் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் உணர்துகிறான்.

 நபியவர்களை உலகுக்கு அனுப்பியதன் நோக்கம்

அல்லாஹ் இந்த உலகத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பியதன் நோக்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்.

நபியே!(முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும்,நற்செய்தி கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும்,அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும்,ஒளி வீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 33:45,46)

நபியவர்களை அல்லாஹ் ஐந்து விஷயங்களுக்காக இந்த உலகுக்கு அனுப்பியதாக சொல்கிறான்.

1. சாட்சியாளராக.

2. நற்செய்தி கூறக்கூடியவராக.

3. எச்சரிக்கை செய்யக் கூடியவராக.

4. அல்லாஹ்வின் விருப்பப் படி அவனை நோக்கி அழைப்பவராக.

5. ஒளி வீசும் விளக்காக.

இந்த ஐந்து விஷயங்களில் நான்காவதாக அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைக்கக் கூடியவராக நபியை அனுப்பியிருப்பதாக இறைவன் கூறுகிறான்.

அல்லாஹ்வின் இந்தக் கட்டளையில் இரண்டு விஷயங்கள் அடங்கியுள்ளன.அதாவது அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்க வேண்டும் என்பது முதலாவது.இரண்டாவது அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் போது நபியாக இருந்தாலும் தன்னிச்சையாக அல்லாஹ்வைப் பற்றி எதையும் கூறி அவன் பக்கம் அழைக்கக் கூடாது அவன் தன்னைப் பற்றி எதனை விரும்புகிறானோ,தன்னைப் பற்றி தனது தூதருக்கு எதனை கூறியுள்ளானோ அவைகளைக் கூறித்தான் அழைக்க வேண்டும்.

அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதால் என்ன நன்மை கிடைக்கும்?

இந்தக் கேள்விக்கு அல்லாஹ் மிகத் தெளிவாக பதில் தருகிறான்.

நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (அல்குர்ஆன் 3:110)

அனைத்து மக்களுக்கும் நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து,அல்லாஹ்வை நம்ப வேண்டும் இந்தக் காரணத்திற்காகத்தான் அல்லாஹ் நம்மை மிகச் சிறந்த சமூகமாக சிலாகித்துச் சொல்கிறான்.

அதே போல் மேற்கண்ட வசனத்திற்கு மேலதிக விளக்கமாக அதே அத்தியாயத்தில் இன்னோர் இடத்தில் மிக அழகாக அல்லாஹ் கூறுகிறான்.

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

அல்லாஹ் காட்டித் தந்த நல்வழியின் பக்கம் யார் அழைக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் அதுவல்லாததின் பக்கம் அழைக்கக் கூடியவர்கள் தோற்றுப் போனவர்கள் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் தெளிவாக அறிய முடியும்.

அல்லாஹ்வை நோக்கி(மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லை கூறுபவன் யார்? (அல்குர்ஆன் 41:33)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைப்பவரை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பதை இறைவன் தெளிவாக சொல்வதுடன் இந்தப் பணி மிகத் தூய்மையான பணி என்பதையும் நமக்கு தெளிவு படுத்துகிறான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.யாராவது நேர்வழியின் பக்கம் அழைக்கும் போது அதனை(நேர்வழியை) பின்பற்றி நடப்பவருக்கு கிடைக்கக் கூடிய கூலியைப் போன்றே அவருக்கும் கிடைக்கும்.அதனைப் பின்பற்றுபவருக்கு அதனால் எந்தக் குறைவும் ஏற்படாது.(முஸ்லிம் : 4831)

பிரச்சாரத்திற்கு பிரத்தியேகமான நேரமா?

இன்று நம்மில் அதிகமானவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்துப் பிரச்சாரம் செய்வதென்றால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு,ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மக்களை ஒன்று சேர்த்து பயான் ஒன்றை செய்தால் அதுதான் பிரச்சாரம் என்று நினைகிறார்கள்.

ஆனால் இஸ்லாமிய பிரச்சாரத்தைப் பொருத்தவரை அதற்கெண்று இடமோ, நேரமோ தேவையில்லை கிடைக்கும் நேரத்தை கிடைக்கும் இடத்தில் பயண்படுத்த வேண்டும். அப்படித்தான் நபிமார்களின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்டுகிறான்.

என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும் பகலிலும் நான் அழைத்தேன் என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 71:05)

மேற்கண்ட வசனத்திலிருந்து நபி நூஹ் அவர்களின் பிரச்சாரம் நேரத்தை குறி வைத்து செய்யப் செய்யப்பட்டதல்ல மாறாக கிடைக்கும் போதெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் இரவு,பகல் என்று கூட பார்க்கவில்லை என்பதை நாம் அறிய முடிகிறது.

சிறையிலும் சீரான பிரச்சாரம்

பொய்யான குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் அனுபவித்த நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூட இடத்தை குறி வைக்காமல் தான் சிறையில் இருந்தாலும் பிரச்சாரம்; செய்வதற்கு அது தடை கல்லாக ஆகிவிடக் கூடாது என்பதால் அங்கும் தனது இறைவனின் பக்கம் அழைப்பதை தொடர்ந்தார்கள்.

என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள்(இருப்பது) சிறந்ததா? அல்லது அடக்கியாலும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்(இருப்பது சிறந்ததா?)வா(அல்குர்ஆன் 12:39)

எப்படி பிரச்சாரம் செய்வது?

இன்றைய காலத்தில் எத்தனையோ பேர் பிரச்சாரத்தின் யுக்கி தெரியாமலும்,நபிமார்களின் பிரச்சார முறையைப் புரியாமலும் தாங்கள் நினைத்த விதத்தில் பிரச்சாரம் என்ற பெயரில் எதை எல்லாமோ செய்வதற்கு எத்தனிக்கிறார்கள்.

ஆனால் பிரச்சாரத்திற்கான அழகிய முறையை அல்லாஹ் மிக இலேசான முறையில் நமக்குக் கற்றுத் தந்துள்ளான்.

விவேகத்துடனும் அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விளகியோரை அறிந்தவன் நேர்வழி பெற்றோறையும் அவன் அறிந்தவன்.(அல்குர்ஆன் 16:125)

அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய கட்டளைகளைப் பற்றியும் நாம் பிரச்சாரம் செய்கின்ற போது விவேகத்துடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்.ஆனால் இன்று தங்களை பிரச்சாரகர்கள் என்று கூறிக் கொள்ளும் அதிகமானவர்களிடம் வேகம் மாத்திரம் தான் இருக்கிறதே தவிர விவேகம் இல்;லை.மார்க்க பிரச்சாரத்தில்; விவேகம் இல்லாத வேகத்தால் எந்தப் பயனும் நிகழ்ந்துவிடாது.

ஆதலால் ஒவ்வொரு பிரச்சாரகரும் எந்தளவு பிரச்சாரத்தில் வேகம் காட்டுகிறோமோ அதைவிட அதிகமாக விவேகமும் நம்மிடம் இருக்க வேண்டும்.

அது போல் நம்முடைய பிரச்சாரம் அதைக் கேட்கின்ற மக்களுக்கு அழகான உபதேசமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர கெட்ட வார்த்தைகள் பேசி,அசிங்கமான முறையில் நடந்தால் நமது பிரச்சாரத்தில் எந்தவொரு நன்மையும் நிகழாது.

கண்டிப்பாக நாம் பேசும் பேச்சுக்களில் மிகவும் கவணமாக இருக்க வெண்டும்.

குர்ஆனையும்,ஹதீஸையும் பிரச்சாரம் செய்கின்ற நேரத்தில் இந்த இரண்டுக்கும் எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பக் கூடியவர்களுடன் அழகிய முறையில் விவாதிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான்.அந்த அடிப்படையில் மிக அழகிய முறையில் பிரச்சாரம் செய்து தூய்மையான இஸ்லாத்தை உலகறியச் செய்யும் இந்தத் தூய பணியை தொடர்ந்தும் செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

source: http://rasminmisc.blogspot.in/2010/06/blog-post_5192.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb