முட்டாள் தனம் vs மடத்தனம்
முட்டாள்தனத்திற்கும், மடத்தனத்திற்கும் வேறுபாடு உண்டா?
உண்டு என நான் நினைக்கிறேன்.
முட்டாள்தனம் ஆண்களுக்குரியது.
மடத்தனம் பெண்களுக்குரியது.
சூதாட்டம் போன்ற பந்தயங்களில் வெற்றி பெறுவது மிகுந்த சிரமம் என்றாலும், அதற்காக பணத்தை செலவழிப்பது முட்டாள்தனம். காதல், திருமணம், குழந்தை, குடும்பம் என்ற வட்டத்தில், சிக்கி சீரழியும் புத்தி முட்டாள்தனமானது. செய்வது தப்பென்று தெரிந்தாலும், அந்த செயலால் சிக்கலே எழும் என்று அனுபவப்பட்டாலும், ஆணவத்தால் அதை செய்வது முட்டாள்தனம். இது ஆண்களுக்கு.
நகை விலை ஏறிக்கொண்டே போனாலும், தொடர்ந்து நகைகளை வாங்கி சேகரிப்பது.. வாங்கிய நகைகளை பெருமைக்காக பிறர் பார்க்க மொத்தமாக அணிந்து சென்று, திருடனுக்கு மொய் எழுதுவது. இது மடத்தனம். தான் செய்வது தவறென்று அவர்களுக்கு புரியாது. ஒருமுறை கையை சுட்டுக்கொண்டாலும், நெருப்பு சுடுமே என்று சிந்திக்க இயலாத புத்தி, இந்த மடத்தனம். இது பெண்களுக்கு மட்டுமே உள்ள குணம்.
சில இடங்களில்
திருமணம் என்ற பெயரில், இந்த முட்டாள்தனமும், மடத்தனமும் சேர்ந்து படும் அல்லல் இருக்கிறதே!
முட்டாள்தனமாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் ஆணும்.. மடத்தனமாக ஒரு ஆணுக்கு கழுத்தை நீட்டும் பெண்ணும்.. இந்த முட்டாள்தனமும் மடத்தனமும் சேர்ந்து புதிதாக மற்றொரு முட்டாள்தனத்தையோ மடத்தனையோ பெற்று போடுகின்றன.
அதுமட்டுமல்லாமல், சாகும்வரை இந்த முட்டாளும் மடச்சியும் இணைந்திருக்கனுமாம். என்ன கொடுமையான வாழ்க்கை இது!
வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை ஒரு முட்டாள் எப்பொழுதும் தன் முட்டாள்தனமான பார்வையுடன் பார்க்கிறான். அதேபோல், அவனுடன் சேர்ந்து வாழும் பெண்ணும் அதே நிகழ்வுகளை தன் மட புத்தியுடன் பார்க்கிறாள்.
சென்ற தலைமுறையில், பெண்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் உரிமை அளிக்கப்படவில்லை. எல்லா முடிவுகளும் முட்டாளான ஆணே எடுப்பான். அவன் எடுக்கும் முடிவு சரியோ, தப்போ, குடும்பத்தில் ஒருவர் மட்டும் முடிவு எடுத்ததால், குடும்பம் மற்றும் குடும்ப உறவுகள் எல்லாம் அவரவர் இடத்தில் மிக சரியாக இருந்தன. மடமை புத்தியுள்ள பெண் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்காமல் இருந்ததால், குடும்பம் செழித்தது. உறவுகள் வளர்ந்தன. கணவன் மனைவியிடையே விவாகரத்து அன்று இல்லை.
ஆனால், இன்று… பெண்களும் ஆண்களுக்கு நிகராக படித்து விட்டார்கள். என்னத்தான் ஒரு பெண், டிகிரி படித்தாலும்.. மாஸ்டர் படித்தாலும்.. பி.எச்.டி. படித்தாலும்.. அவளின் மட புத்தி அவளிடம் அப்படியே உள்ளது. இன்றும், பெண்களால், மிக சரியான முடிவுகளை எடுக்க இயலவில்லை. நெருப்பு சுடும் என்ற அனுபவத்தை பெற்றிருந்தாலும், அவளின் மட புத்தி அந்த அனுபவத்தை மறுக்கிறது. மறுபடியும் நெருப்பில் கையை விடுகிறாள். அது அப்படித்தான். என்றுமே மாற்ற முடியாது.
குடும்பத்தில் இப்பொழுது இரண்டு தலை. ஒன்று முட்டாளான ஆணுடையது. மற்றொன்று மடச்சியான பெண்ணுடையது. இன்று முட்டாள்தனமும் மடத்தனமும் சேர்ந்து முடிவெடுக்கின்றன. அதில்தான் பிரச்சனை தொடங்குகிறது. குடும்பத்தில் சிக்கல். விவாகரத்து.
ஒரு குடும்பத்தில், ஒன்று, முட்டாள் தலைவனாக இருக்க வேண்டும். மடமை மூடிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது, மடமை தலைவியாக இருக்க வேண்டும். முட்டாள் பெட்டையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த குடும்பம் உருப்படும்.
o இந்த கட்டுரை உங்களை ஏகத்துக்கும் குழப்பிவிட்டதோ…! இது, கோபத்தில் வாழ்க்கை நடத்துகின்ற மனிதர்களைப்பற்றிய குணநலன்களை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்டதாக எண்ணிக்கொள்ளுங்கள். ஏனெனில் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது அவர்கள் எடுக்கும் முடிவுகள் இவ்வாறுதான் இருக்கும். ஏனெனில், சாதாரண நிலையில் ஆண்களையெல்லாம் முட்டாள்களென்றும், பெண்களையெல்லாம் மடச்சிகள் என்றும் சொல்வது முற்றிலும் தவறான கண்ணோட்டமல்லவா! -adm.