Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உணர்ச்சித் தூண்டுதலால் இளம் வயதுப்பெண்கள் வழிதவறாமல் இருக்க…

Posted on February 13, 2012 by admin

 உணர்ச்சித் தூண்டுதலால் இளம் வயதுப்பெண்கள் வழிதவறாமல் இருக்க…

பெண்மனம் மிகவும் அவள் உடலைப்போல் மிருதுவானது. நல்ல வார்த்தை பேசினால்பெண் தன் மனதைப் பறிகொடுத்துவிடுவள். உன்னைப்போல் உண்டா என்று புகழ்ந்து பேசினாலும் சுலபத்தில் மயங்கி விடுவள்.

பெண்களின் உணர்ச்சி திடீரென்று படமெடுத்து ஆடுவதில்லை. ஆனால், தூண்டப்பட்டு விட்டால் கட்டுக்கடங்காமல் தலி விரித்தாதொடங்கி விடுவாள். ஒரு பெண் தன் உணர்ச்சி வேகத்திற்கு திருப்தி ஏற்படுத்திக்கொள்ள எதைச் செய்யவும் தயாராகி விடுவாள்.

இதன் நேர் எதிரிடையாக ஆத்திரத்தில் வாலிபன் செயலில் இறங்கி விடுவான். அதன் பின்பு உலகம் என்ன சொல்லும் – உற்றார் என்ன சொல்லுவார்கள் – நமக்கு பிற்காலம் என்பது எப்படி என்று பலவாறாக யோசித்து மெள்ள மெள்ள நழுவப் பார்ப்பான். அப்படித்தான் சில வாலிபர்கள் பருவப் பெண்களுக்கு, சிலவேலை திருமணம் முடித்து கணவன் அருகில் இல்லாத பெண்களுக்கோ அல்லது கணவனால் ஆசையை பூர்த்தி செய்யமுடியாத பெண்களுக்கோ ஆசை வார்த்தைப் பேசி அழைத்துச் சென்று பின்பு எங்கோ ஓடி விடுவார்கள்.

பெண்ணோ துணிவுள்ளவள். “கையில் காசு இல்லாவிட்டால் என்ன? நான் சுண்டல், இட்லி செய்து உங்களுக்கு சாப்பாடு போடுகிறேன்” என்று தைரியம் சொல்வள். ஆனால், கோழையாகிவிட்ட வாலிபன் நழுவப்பார்ப்பான்.

உணர்ச்சிப்பெருக்கு என்பது பெண்களின் வாழ்க்கையை எப்படியெப்படியோ மாற்றிவிடும் தன்மையது. பெண்ணின் மனத்துணிவின் முன் எதுவும் செல்லுபடியாகாது. அதனால் தான் பருவப் பெண்கள் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உணர்ச்சிப்பெருக்குக்கு இடம் கொடுத்து விடாதீர்கள் என்று அவர்களை எச்சரிக்க வேண்டியுள்ளது.

தற்காலப்பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெருகிறார்கள். பட்டம் பெற்ற பின்னரும் ஆண்களுடன் சேர்ந்தே உத்தியோகம் பார்க்கிறார்கள். டாக்டர்களாகவும், நர்ஸ்களாகவும் பணி புரிபவர்கள் ஆண்களைத் தொட்டு சிகிச்சை செய்யும் கடமைகளிலிருந்து தவறுவதற்கில்லை. நிர்வாகத் துறையில் பதவி வகிக்கும் பெண்கள் தங்களிடம் பணி புரியும் (ஆண்) பியூன்கள், குமாஸ்தாக்கள், அதிகாரிகள் போன்றவர்களுடனும் பழக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இன்றைய நவயுகத்தில் ஸாஃப்ட்வேர் கம்பெனிகளில் ஈஸல் பட்டாளம் போல் பெண்கள் வேலையில் சேர்கிறார்கள். மேல்நாட்டு கலாச்சாரம் இவர்களை இழுத்துக்கொள்ள வாயைப் பிளந்துகொண்டு காத்திருக்கிறது.

எனவே பெண்கள் வெளியுலகத்தில் திருமணத்திற்கு முன் ஆண்களிடம் பழக வேண்டிய நிலைமையில் இருப்பதால் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் முயற்சியில் மனத்தை செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆகவே தற்காலப் பெண்களுக்கு முக்கியமாக வேண்டுவது தன்னடக்கம், உணர்ச்சிக் கட்டுப்பாடு.

 உணர்ச்சியும் உள்ளக்கிளர்ச்சியும்:

உணர்ச்சித்தூண்டுதல் என்பது பெண்களுக்கு எந்தெந்த வகைகளில் ஏற்படுகின்றது என்பதைக் கவனிப்போம்.

1. சிறு வயதிலேயே பெண்ணுக்கு உணர்ச்சி தோன்றுவது இயற்கை. தன்னைப்போன்ற மற்றோர் பெண் மலஜலம் விடும்போது உற்சாகத்தோடு கவனிக்கிறாள்.

2. சுமார் 10, 13 வயதுள்ள பெண்ணை ஒரு ஆண்மகன் தழுவி விளையாட ஆரம்பித்து விட்டால் அவளும் ஒத்துழைக்கத் தாயாராகி விடுகிறாள்.

3. பருவம் வந்த பெண்ணோ உடல் உறவு விஷயத்தைப் பற்றி கற்பனை செய்யத் தொடங்கி விடுகிறாள். இன்பக் கிளர்ச்சியை உண்டுபண்ணும் கற்பனைகளைப் படித்தாலும் சரி, சினிமா, ட்ராமா, டி,வி, ஸீரியல் காட்சிகளைப் பார்த்தாலும் சரி, இவளுக்கு உள்ளக் கிளர்ச்சி – உறுப்புகளில் உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.

4. திருமணமாகாத பருவப் பெண்கள் தனித்து வாலிப நண்பருடன் உலாவச் செல்வது, தனியிடங்களுக்குச் செல்வது, சினிமாவுக்கு, பீச்சுக்குச் செல்வது – இதெல்லாம் உள்ளக்கிளர்ச்சியைத் தோற்றுவிக்காமல் இருக்காது.

5. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்ற காலத்தில் தனியாக தன்னைப்போன்ற பருவப் பெண்ணுடன் தனித்துப் பழக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தன்னைப் போன்ற பருவப் பெண்ணுடன் நெருங்கி ஒரே படுக்கையில் படுப்பதும் தவறுதான். இதனால் “தன் இனக் காதல்” என்பது தோன்றி வாழ்க்கையில் ஒரு சூறாவளிப் புயலையே கிளப்பிவிடும்.

எனவே பெண்ணைப்பெற்றவர்கள் மிக மிக எச்சரிக்கையுடன் அவர்களை கண்கானிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த வழி உங்கள் பெண் மக்களுடன் எப்பொழுதும் நெருக்கமான தொடர்புடன் இருங்கள். தாயானவள் அவளுக்கு தாயாக மட்டுமின்றி சகோதரியாகவும், தோழியாகவும், செயல்படுங்கள். தந்தையின் தொடர்பு மகளை தவறான பாதையில் செல்லாமல் தடுக்கும். முடிந்தவரை பருவ வயதில் பெண்களை தனிமையில் விட்டுவிடாமல் கலகலப்பாக பெண்பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பழகினால் அவளது எண்ணம் திசை மாறிப்போகாது.

மார்க்க சம்பந்தப்பட்ட விஷயங்களை பெண்பிள்ளைகளுக்கு அவசியம் சொல்லிக்கொடுங்கள். ஸஹாபிப் பெண்மணிகளின் வீர வரலாற்றையும், தியாக வரலாற்றையும் அவர்கள் மனதில் பதியுமாறு எடுத்து சொல்லுங்கள். இவைகளை அவர்கள் பருவம் எய்துவதற்கு முன்னரே பதிய வைத்தால் அவர்கள் மனதில் அது ஆழப்பதிந்து தவாறான பாதையில் செல்வதை விட்டும் நிச்சயம் தடுக்கும். தலைக்குமேல் வெள்ளம் போனபிறகு ஞானோதயம் பிறந்து என்ன செய்ய! எனவே இளம் வயதிலிருந்தே அவர்களது மனதில் மார்க்க அறிவுறைகளைப் புகுத்துங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 7 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb