Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பொய் சாட்சி கூறுவது மார்க்கத்தை விலை பேசியது போன்றாகும்

Posted on February 12, 2012 by admin

   மவ்லவி, பி.எம.ராஜுக், மன்பஈ   

[ ‘சாட்சி கூறுவதை மறைக்காதீர்கள். சாட்சிய மறைப்பவர் அவரின் உள்ளத்திற்கு பாவம் செய்தவர் ஆவார்’ (அல்குர்ஆன்)

சாட்சியை மறைப்பதையே இறைவன் எச்சரித்துள்ளான் எனும்பொழுது ‘பொய் சாட்சி’ கூறுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை எண்ணிப்பாருங்கள்.

உலக ஆதாயத்தை அடைய பொய் சாட்சி கூறுபவன் மறுமை நாளில் நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி, அரசனுக்கெல்லாம் அரசனான அல்லாஹ்விற்கு முன் என்ன பதில் சொல்வான்? அவனின் அனைத்து செயல்களையும் நாவும் மற்ற உறுப்புக்களும் சாட்சிக்கூறும் அந்த நிலையை எண்ணிப்பாருங்கள்.

‘பொய்சாட்சி கூறுபவனின் பாதம் (மறுமையில்) நிற்கும் இடத்தை விட்டும் நகராது. இறைவன் அவனுக்கு நரகத்தை கடமையாக்கும்வரை’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அருமைத் தோழர்களுக்கு அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் ‘பாவங்களில் மிகப்பெரியதை அறிவிக்கட்டுமா?’ என்றார்கள். அருமைத்தோழர்கள் ‘கூறுங்கள்’ என்றனர்.

‘இறைவனுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு மாறு செய்தல்’ என்று கூறியபின் சாய்ந்து அமர்ந்தவர்களாக ‘அறிந்துகொள்! பொய்சாட்சி, பொய்சாட்சி, பொய்சாட்சி…’ என்று கூறிக்கொண்டே இருந்தனர் நாங்கள் ‘போதும், போதும்’ என்று கூறும்வரை.]

 பொய் சாட்சி  

பொய் சாட்சி கூறுபவன் வழிகெட்டவனாகவும், வழி கெடுக்கக் கூடியவனாகவும், பொய்யனாகவும், தீங்கு இழைப்பவனாகவும் இருக்கின்றான்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் ஸுப்ஹு தொழுகையை நிறைவு செய்த பின் எழுந்து நின்றவர்களாக ‘பொய் சாட்சி இறைவனுக்கு இணை வைப்பதற்குச் சமம்’ என மூன்று தடவை கூறியபின் கீழ்க்கண்ட இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

‘விக்கிரக ஆராதணையின் அசுத்தத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். பொய்யான வார்த்தைகளிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விற்கு எதையும் இணை வைக்காது அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து வழிபட்டுவிடுங்கள்’ (அல்குர்ஆன்)

மனித சமுதாயத்திற்கு வழி காட்டவே தூதர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அத் தூதர்கள் கண்ணியமாக வாழும் வழியினை மக்களுக்குக் கற்றுத் தந்தனர். எல்லா மக்களின் கடமைகளையும் முறையாக நிறைவு செய்து அமைதியாக வாழும் வழியினையும் கற்றுத் தந்தனர். உலகில் நீதியை நிலைபெறச் செய்தனர்.

இறைவன் மக்களுக்கிடையே தீர்ப்புக் கூறுவதை கடமையாக்கியுள்ளான். நீதமான தீர்ப்பின் மூலமே பகைமைகள் நீங்கவும், கடமைகள் பாதுகாக்கப்படவும் மக்களின் மத்தியில் அமைதியை நிiபெறச் செய்யவும் முடியும்.

 சாட்சி பெறுவதை வலியுறுத்தும் இறைவன் :  

‘இறைவன் மனிதர்களிடமிருந்து சாட்சி பெறுவதை வலியுறுத்தியுள்ளான்’.

‘தீர்ப்பின் மூலமே உண்மையை அறிய முடியும். சாட்சி நீதபெறும் உயர்தனமான வழிமுறையாகும்’ சாட்சிகூறுவதை மறைப்பதையும் இறைவன் எச்சரித்துள்ளான்.

‘சாட்சி கூறுவதை மறைக்காதீர்கள். சாட்சிய மறைப்பவர் அவரின் உள்ளத்திற்கு பாவம் செய்தவர் ஆவார்’ என அருள்மறை அல்குர்ஆன் கூறுகிறது.

சாட்சியை மறைப்பதையே இறைவன் எச்சரித்துள்ளான் எனும்பொழுது ‘பொய் சாட்சி’ கூறுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை எண்ணிப்பாருங்கள்.

 பொய் சாட்சியின் விளைவு :  

பொய் சாட்சி நிரபராதியை குற்றவாளியாகவும், குற்றவாளியை நிரபராதியாகவும் ஆக்கிவிடும். (இருவிதமான குற்றம் இதில் உள்ளடங்கியிருப்பதை எண்ணிப்பாருங்கள்).பொய் சாட்சி அநீதமாக ஒருவனின் பொருளை அபகரிக்கச் செய்யும். நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்ரதாகவும் ஆக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையைப் போக்கும்.

இவையiணுத்தும் ஷைத்தானின் செயல்களாகும். ஆகவே ஷைத்தானின் செயல்களிலிருந்தும் அவனுக்கு உதவி செய்வதிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஷைத்தான் நன்மையை அழிக்கவும், உண்மையை மறைக்கவும், குழப்பங்களை விளைவிக்கவும், ஒற்றுமையை குலைக்கவும், பகைமையை வளர்க்கவும் விரும்பவான்.

பொய் சாட்சி கொலை நடக்கவும் காரணமாகும். ஆகவேதான் இறைவன் பொய் சாட்சி கூறுவதை இறைவனுக்கு இணை வைப்பதுடன் இணைத்துக் கூறியுள்ளான்.

பொய் சாட்சி தீங்கு விளைவிப்பது போன்றே பொய் சாட்சி கூறுபவனுக்கும் தீங்கு விளைவிக்கும். அவனின் கண்ணியம் பறிபோகும். மார்க்கத்தில் நஷ்டம் விளைவிக்கும். எவனுக்காக பொய் சாட்சி கூறினானோ, அவனுக்கும் தீங்கு உண்டாகும். பகைமை உண்டாகும். இறைவனிடத்திலும், இறை அடியார்களிடத்திலும் மாபெரும் நஷ்டத்தை உண்டாக்கும்.

மனிதன் பொருளை பெற, சொத்தை அடைய பொய் சாட்சி கூறுவது மார்க்கத்தை விலை பேசியது போன்றாகும். அதே நிலையில் அதைப்பற்றிக் கவலைப்படாது இறந்துவிட்டால் இறைவன் முன் இழிவு படுத்தப்பட்டவனாக, அழுதவனாக நிற்க வேண்டியது ஏற்படும்.

 பொய் சாட்சி சொன்னவனின் மறுமையின் நிலை :  

உலக ஆதாயத்தை அடைய பொய் சாட்சி கூறுபவன் மறுமை நாளில் நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி, அரசனுக்கெல்லாம் அரசனான அல்லாஹ்விற்கு முன் என்ன பதில் சொல்வான்? அவனின் அனைத்து செயல்களையும் நாவும் மற்ற உறுப்புக்களும் சாட்சிக்கூறும் அந்த நிலையை எண்ணிப்பாருங்கள்.

‘பொய்சாட்சி கூறுபவனின் பாதம் (மறுமையில்) நிற்கும் இடத்தை விட்டும் நகராது. இறைவன் அவனுக்கு நரகத்தை கடமையாக்கும்வரை’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அருமைத் தோழர்களுக்கு அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் ‘பாவங்களில் மிகப்பெரியதை அறிவிக்கட்டுமா?’ என்றார்கள். அருமைத்தோழர்கள் ‘கூறுங்கள்’ என்றனர்.

‘இறைவனுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு மாறு செய்தல்’ என்று கூறியபின் சாய்ந்து அமர்ந்தவர்களாக ‘அறிந்துகொள்! பொய்சாட்சி, பொய்சாட்சி, பொய்சாட்சிஸ’ என்று கூறிக்கொண்டே இருந்தனர் நாங்கள் ‘போதும், போதும்’ என்று கூறும்வரை.

 பொய்சாட்சி கூறுவதை தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.  

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: ‘எவரேனும் தன்னுடைய தீய செயலுக்குப் பின்பு (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுகிறான்’ (அல்குர்ஆன் 6 : 39)

எனவே எவரேனும் பொய்சாட்சி கூறியிருந்தால் அதற்காக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து கொள்ளுங்கள். அத்துடன் பொய்சாட்சியால் பாதிக்கப்பட்டவருக்கு பரிகாரம் செய்ய வேண்டிய கடமையும் உண்டு. ஏனெனில் மனிதர்களுக்கு இழைக்கப்படும் பாவத்திற்கு அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டு அவர் மன்னித்தாலொழிய அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான் என்கிறது இஸ்லாம். மேலும் மேற்கண்ட வசனத்தில் ‘தன் குற்றத்தை சீர் திருத்திக்கொண்டால்…’ என்று கூறுவதன் மூலம் பொய்சாட்சியால் பாதிப்புக்குள்ளானவருக்கு பரிகாரம் செய்ய வேண்டிய கடமையும் பொய்சாட்சி சொன்னவருக்கு உண்டு என்பதை மறந்திட வேண்டாம்.

இறைநம்பிக்கையாளர்களே!

(நீங்கள் எவருக்கு எதிராகச் சாட்சி கூறுகின்றீர்களோ) அவர், செல்வந்தராக(வோ), அல்லது ஏழையாக(வோ) இருந்தாலும் சரியே. ஏனெனில், அல்லாஹ் அவ்விருவருக்கும் (நன்மையை நாடுவதில்) மிக மேலானவன்.

எனவே, நீதி செய்வதை விட்டு (உங்கள்) மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்.

இன்னும், நீங்கள் சாட்சியத்தை மாற்றிக் கூறினாலும், அல்லது புறக்கணித்து விட்டாலும் நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்கின்றவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்)

நீங்கள் நீதியின் மீது நிலையானவர்களாக(வும்), உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ, அல்லது (உங்கள்) உறவினர்களுக்கோ பாதகமாக இருப்பினும் சரியே, அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்.

-(குர்ஆனின் குரல், ஜனவரி 2010)

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

30 + = 31

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb