MUST READ
இஸ்லாமும் நாகரீகமும்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் கூடாரங்களில் வாழந்தார்களே அந்தக் காலத்திற்குப் பின்நோக்கிப் போக நீங்கள் விரும்புகின்றீர்களா? இஸ்லாம் அந்த முரட்டுத்தனமான அரேபிய நாடோடிகளுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கலாம். ஏனெனில் அவர்களைக் கவர்ந்திடும் அளவிற்கு அது எளிமையானது.
ஆனால் விண்ணைப் பிளந்த விரைந்து செல்லும் விமானங்களையும், நைட்ரஜன் குண்டுகளையும், நுட்பம் நிறைந்த சினிமாக் கருவிகளையும் கொண்ட இன்றைய உலகிற்கு இறைவன் உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் ஏற்புடையதாகுமா?
முன்னேறிவிட்ட இன்றைய உலகில் இந்தக் கொள்கையால் எந்தப் பலனும் விiளாது. ஏனெனில் அது மாற்றங்களுக்கு உட்படாதது, நிலையானது. ஆகவே நாம் உண்மையிலேயே நாகரிகமடைந்த உலகின் ஏனையப்பகுதிகளைப்போல் முன்னேற வேண்டுமானால் இஸ்லாத்தை உதறிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.’
இரண்டாண்டுகளாக எகிப்து நாட்டில் இருந்து வருகின்ற ஒரு ‘படித்த’ ஆங்கிலேயரால் மேலே குறிப்பிட்டவை எனக்கு நினைவூட்டப்பட்டன. இந்த ஆங்கிலேயர் ஐக்கிய நாடுகள் சபையால் (UNO) எகிப்துக்கு அனுப்பப்பட்டவர்கள்.
ஏகிப்தில் வாழ்ந்தவரும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்க்குத் தேவையான திட்டங்களை வகுத்துத் தரும்படி அனுப்பப்பட்ட ஐக்கிய நாட்டுசபை குழுவின் ஒரு உறுப்பினர் இந்த ஆங்கிலேயர், அந்த விவசாயிகளின் நலனில் அக்கறைக் கொண்டவர்களைப்போல் காட்டிக்கொள்ளும் இந்தக் குழுவினர் அம்மக்களின் மொழியைத் தெரிந்துகொள்ள முயன்றதுமில்லை.
ஐக்கிய நாட்டு சபையின் தூதுக்குழுவுக்கும் எகிப்து நாட்டு விவசாயிகளுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளராக நான் அனுப்பப்பட்டேன். அப்போது தான் நான் இந்த ஆங்கில அதிசய மனிதனை சந்தித்தேன்.
கீழை நாடுகள் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை ஆங்கிலேயர்கள் கைவிடாதவரை எகிப்தியர்களாகிய நாங்கள் அவர்களை ஏறக் மாட்டோம்! வெறுக்கின்றோம்!! எப்போதும் வெறுத்துக்கொண்டே இருப்போம் இதை ஆரம்பத்திலேயே நான் அவரிடம் கூறினேன். ஏகிப்து, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் மீது ஆங்கிலேயர்களும், அவர்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ள அமெரிக்கா போன்ற நாடுகளும் நிகழ்த்திவரும் அநியாயங்களின் அடிப்படையில் நாங்கள் ஆங்கிலேயர்களையும் அவர்களோடு கூட்டுச்சேர்ந்துள்ளவர்களையும் வெறுக்கின்றோம் இதையும் நான் ஆரம்பத்திலேயே இந்த ஆங்கிலேயரிடம் சொல்லி விட்டேன்.
ஏனது பேச்சை கேட்ட மாத்திரத்திலேயே அதிர்ந்து போன அவர் என்னை ஒருமுறை முறைத்துப்பார்த்துவிட்டு ‘நீ ஒரு கம்யூனிச வாதியா? ‘ எனக் கேட்டார்.
நான் ஒரு கம்யூனிசவாதியல்ல. நான் ஒரு முஸ்லிம். நீங்கள் பின்பற்றும் முதலாளித்துவத்தைவிட சிறந்ததும் நீங்கள் வெறுக்கும் கம்யூனிசத்தை விட உயர்ந்ததுமான இஸ்லாத்தை நம்புகிறவன் நான். இன்றுவரை மனிதனூல் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைத் திட்டங்களைவிட இஸ்லாம் உயர்ந்;தது. ஏனெனில் அது வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் பல்வேறு துறைகளுக்கிடையேயும் ஒரு சமநிலையைப் பாதுகாப்பதும் இஸ்லாம்தான் எனப்பதில் தந்தேன்.
இப்படி நாங்கள் சுமார் மூன்றுமணி நேரம் விவாதித்தோம். முடிவில் அவர் நீங்கள் இஸ்லாத்தைப் பற்றிச் சொல்லுபவை ஒருவேலை உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் என்னை பொறுத்தவரை தற்கால நாகரிகம் கண்டு பிடித்துள்ள நன்மைகளைப் புறக்கனிக்கத் தயாராக இல்லை. உயர்ந்து பறந்திடுதிடும் விமானத்தில் பறந்து செல்வதை நான் விரும்புகின்றேன். வானொலியில் ஒலிபரப்படும் இசையையும் அது தரும் சுகத்தையும் துறக்க நான் தயாராக இல்லை. என்று கூறினார்.
அவர் தந்த பதிலால் வியந்துப்போன நான் உங்களை இவற்றிலிருந்து தடுப்பவர் யார்? என்று கேட்டேன்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதென்பது காட்டுமிராண்டி தனத்திற்கும்-பழஙகால வாழ்க்கைக்கும் திரும்பிச்செல்வதாகாதா? ஏன்று திரும்பக் கேட்டார்.
ஆதாரங்கள் ஏதும் இல்லாதபோதும் இஸ்லாத்தைக் குறித்து இதுபோன்ற சந்தேகங்கள் எழுவதும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. இதுபோன்ற சந்தோகங்களுக்கு இஸ்லாத்தில் சற்றும் இடமில்லை என்பதை அதன வரலாற்றைத் தெறிந்தவர்கள் புரிந்துக்கொள்வார்கள். ஓரு கணமேனும் இஸ்லாம் நாகரிகத்திற்கும் முன்னேற்றத்திற்க்கும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை.
முரட்டு குணம் நிறைந்த நாடோடிகளை அதிகமாகக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்திற்குத் தான் இஸ்லாம் முதலில் வெளிப்படுத்தப்பட்டது.
அந்நாடோடிகள் சுயநலக்காரர்கள். இறையச்சமற்றவர்கள் இப்படித் திருக்குர்ஆனே வர்ணிக்கின்ற வகையில் அவர்கள் இருந்தார்கள்.
வன்நெஞ்சர்களாகவும், கடினசித்தமுடைய காட்டுமிராண்டிகளாகவும் வாழ்ந்த அம்மக்களைப் பண்படுத்தி மனிதப்புனிதர்களாக மாற்றியது இஸ்லாத்தின் மகத்தான வெற்றியாகும். ஆவர்களைப் பக்குவப்படுத்தியது மட்டுமின்றி இந்த மனித இனத்தையே நேர்வழியின்பால் வழி நடத்திச் செல்கின்ற வழி காட்டிகளாகவும் மாற்றியது இஸ்லாம். முனிதர்களைப் பண்படுத்துவதில்-ஆத்மாக்களை அழகுபடுத்துவதில்-இஸ்லாத்திற்கு இருக்கும் மகத்தான திறமையின் ஒப்பற்ற சான்றே இந்தச் சாதனை.
ஆத்மாவைப் புனிதப்படுத்தி மனிதனை மாண்பாளனாக ஆக்கிட முனைவது மனிதகுலம் மேற்கொள்ள வேண்டிய பெரிய நோக்கங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆத்மாவின் புனிதம் அழுகு என்பது நாகரிகத்தின் இறுதி இலக்குகளின் ஒன்றாகும். ஆனால் இஸ்லாம் ஆத்மாவைப் புனிதப்படுத்துவதோடு மட்டும் திருப்தி அடைந்துவிடுவதில்லை. தற்க்காலத்தில் மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட-பலரால் வாழ்வில் இலக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாகரிகத்தின் அனைத்து நல்ல அமசங்களையும் இஸ்லாம் ஏற்றுக் கொண்டது.
இஸ்லாத்தின் ஆரம்பநாட்களில் அது நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களைத் தன்பால் சேர்த்துக் கொண்டிருந்தது. அப்படிப் புதிதாகச் சேர்ந்த மக்கள் பல்வேறுபட்ட நாகரிகங்களையும் கலாச்சாரங்களையும் கொண்டவர்களாக இருந்தார்கள் அம்மக்களின் நாகரிங்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை. அம்மக்களின் கலாச்சாரங்களுக்கும் பண்பாடுகளுக்கும் பாதுகாப்பளித்தது. ஆதரவு தந்தது, ஆனால் அந்தப் பண்பாடுகளும், கலாச்சாரங்களும். ஏக இறை கொள்கைக்கு எதிரானவையாகவோ மக்கள் நல்லதைச் செய்வதிலிருந்து தடம் பிறழச் செய்வனாகவோ இருந்திடக்கூடாது.
விஞ்ஞானத்தில் வளர்ந்து நின்ற கிரேக்கக் கலாச்சாரத்தை இஸ்லாம் ஊக்கம் தந்து வளர்த்தது. அதன் மருத்துவவியல், வானவியல், கணிதவியல், பௌதீகவியல், தத்துவவியல், இரசாயனவியல் இத்தனையையும் இஸ்லாம் வளர்த்தது. அத்தோடு இஸ்லாம் தன்னளவில் பலவிஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்து விஞ்ஞானம் வளர வழிகண்டது. இது முஸ்லிம்கள் விஞ்ஞானத்துறையில் எப்போதும் ஆhவமுடையவர்களே என்பதற்கு தக்க சான்றாகும்.
அந்தலூசியாவில் இஸ்லாம் சாதித்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டே தற்கால ஐரோப்பாவின் மறுமலர்ச்சியும் அதன் நவின விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் உருவாகின.
முனித குலத்திற்கு நன்மைகளை விளைவிக்கும் ஏதேனும் நாகரிகத்தை இஸ்லாம் என்றேனும் எதிர்த்தது என்று யாராவது கூற முடியுமா? முடியாது.
இன்றைய மேலைநாட்டு நாகரிகத்தைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் அணுகுமுறை என்ன என்பதைப் பார்ப்போம் !
இதுவரை உலகவழக்கில் இருந்த நாகரிங்களை இஸ்லாம் எந்த அடிப்படையில் அனுகியதோ அதே அடிப்படையில் தான் இஸ்லாம் இன்றைய மேலைநாட்டுக் கலாச்சாரத்தையும் அணுகுகின்றது. இந்தக் கலாச்சாரம் என்னென்ன நல்லப் பண்புகளைத் தன்னிடம் கொண்டுள்ளதோ அவற்றை இஸ்லாம் ஏற்றுக் கொள்கின்றது. அதே நேரத்தில் அதில் காணப்படும் தீமைகளை வெறுத் தொதுக்கின்றது. தனியொருவனின் விருப்பத்தைத் திருப்திச் செய்வதற்காகவோ ஒரு இனத்தை இன்னொரு இனத்தைவிட உயர்த்திடுவதற்காகவோ இஸ்லாம் பிற நாகரிகங்களோடு மோதியதில்லை. ஏனெனில் இஸ்லாம் மனித இனத்தின் ஒற்றுமையில் உறுதியான நம்பிக்கைக்கொண்டது. மனிதர்கள் மாச்சரியமன்றி பழகிடும்போது கூடிக்குலாவிவாழ்ந்திடும் நற்குணம் கொண்டவர்கள் என்று இஸ்லாம் நம்புகின்றது.
இஸ்லாம் தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்புகளை எதிர்க்கின்ற மார்க்கமல்ல என்பதை நாம் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும் தற்காலத்தில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள கருவிகளை உபயோகப்படுத்திட ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால்’ என்று அக்கருவிகளில் பொறிக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் நிபந்தனை விதிப்பதில்லை. அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்திடும்போது இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஆரம்பித்தால் போதுமானது. இன்னும் அவற்றை இறைவனுக்காக உபயோகப் படுத்திடவேண்டும். அவ்வளவுதான். விஞ்ஞானத்தின் கருவிகளுக்கு மதம் என்றொன்றில்லை. ஆனால் அவை எந்த விதத்தில் பயன்படுத்தப்படுகின்றதோ அது அடுத்தவர்களைப் பாதிக்கின்றது.
உதாரணமாக ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொள்வோம். அந்த துப்பாக்கிக்கென்று மதம் எதுவுமில்லை. அது தற்கால விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பாகும். ஆனால் அந்த துப்பாக்கியை அடுத்தவர்களை ஆக்கிரமிப்பதற்க்காகப் பயன்படுத்துகின்ற ஒருவன் முஸ்லிமாகமாட்டான் – ஆக்கிரமிப்பவர்களை அகற்றுவதற்காகவே துப்பாக்கிப் பயன்படுத்தப்பட வேண்டும். அல்லது இறைவனின் போதனைகளை இந்த உலகில் பரப்பிடுவதற்க்காகப் பயன்படுத்திட வேண்டும்.
இன்றைய சினிமாக்கருவி நவீன விஞ்ஞானத்தின் கண்டு பிடிப்பாகும். இந்த நவீன கண்டுபிடிப்பை நல்லனவற்றைப் பரப்பிடுவதற்காகப் பயன் படுத்தினால் ஒருவர் உண்மையான நல்ல முஸ்லிமாக இருக்கலாம். அதே நேரத்தில் இதே சினிமா கருவியை, காமத்தை இடறும் காட்சிகளைப் படம்பிடிப்பதற்காகவும், மக்களிடையே ஒழுக்கக் கேடுகள் வளர்வதற்கு வகை செய்யும் காட்சிகளைக் காட்டுவதற்காகவும் பயன்படுத்தினால் அவர் முஸ்லிமாகமாட்டார். சினிமாப்படங்கள் மனிதனிடம் கீழ்த்தரமான உணர்ச்சிகளைச் சீண்டி விடுவதோடு வாழ்க்கையின் நோக்கத்தைப் பாழடித்து விடுவதால் அவை அற்பமானவை. அப்புறப்படுத்த வேண்டியவை ஆகவே அவை மனிதனுக்குத் தேவையான ஆத்மீக உணவாக அமையமாட்டா.
மனிதன் கண்டெடுத்துவைத்துள்ள விஞ்ஞான உண்மைகளை இஸ்லாம் ஒருபோதும் எதிர்த்ததில்லை. நன்மை தரும் எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் முஸ்லிம்கள் பயன்படுத்தவேண்டும் ‘விஞ்ஞானத்தை-அறிவியலை ஆய்ந்து படித்திட வேண்டியது ஒரு இஸ்லாமியக் கட்டளையாகும்’ என இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.
முடிவாக நாகரிகம் மனிதனுக்கு நல்லதைச் செய்திடும் வரையில் இஸ்லாம் அதனை எதிர்ப்பதில்லை-ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் அதே நாகரிகம், போதைப் பொருளாகவும் சூதாட்ட சூனியங்களாகவும், விபச்சார விடுதிகளாகவும், அடுத்தவர்களை அடிமைப்படுத்திடும் ஆதிக்க வெறியாகவும் நர்த்தனமாடினால் இஸ்லாம் அதை ஏற்றுக்கொள்ளாது. எதிர்த்துப்போராடும். நூகரிகம் என்ற பெயரைப் போர்த்திக் கொண்டு மனிதனை ஆட்டிப்படைத்து அலைக்கழிக்கவரும் இந்த நாகரிகத்தின் பிடியிலிருந்து மனிதனைப் பாதுகாக்க இஸ்லாம் தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதில் இறுதிவரை உறுதியுடன் போராடும்.
இந்தக் கட்டுரை எகிப்தின் பிரபல எழுத்தாளர் ஒருவரின் ஆக்கமாகும். அவரின் பெயர் தெரியவில்லை. மன்னிக்கவும்.
source: http://tamilkhilafa.blogspot..in/