ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்ன?
RASMIN M.I.Sc (India)
[ இரண்டு வருடம், மூன்று வருடம், நான்கு வருடம், சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்து வெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.
இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில் கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.
இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.
.பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தை அர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.
பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.]
ஆலிமாக்கள் என்றால் யார்?
இரண்டு வருடம், மூன்று வருடம், நான்கு வருடம், சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்து வெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.
இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில் கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.
இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.
1. தாய், தந்தை, அண்ணன், தம்பி என்று குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் வீட்டை விட்டு விடுதிகளில் தங்க வேண்டிய கட்டாயக் கஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.
2. ஒரு கைக்குட்டையைக்(கர்ச்சிப்) கூட துவைக்கத் தெரியாத காலத்தில் தங்கள் ஆடைகள் அனைத்தையும் தாங்களே துவைக்க வேண்டிய நிலை.(ஆண்களும் இதே கஷ்டத்தை அனுபவித்தாலும் பெண்கள் படும் கஷ்டத்திற்கும் ஆண்கள் படும் கஷ்டத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகிறது).
3. பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தை அர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.
4. வீட்டில் எத்தனையோ விஷேசங்கள் நடந்தாலும் இவர்கள் அத்தனையையும் தவிர்ந்து கொள்ளும் ஒரு நிலை.
இப்படி பல தியாகங்களைச் செய்துதான் இந்த ஆலிமாச் சகோதரிகள் தங்கள் மார்க்கப் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்கும் இந்தச் சகோதரிகள் தங்கள் படிப்பு முடிந்தபின் என்ன நிலையில் இருக்கிறார்கள்?
மார்கத்தில் அவர்களின் நிலை என்னவாகிறது?
அவர்களின் எதிர்கால கணவு என்னாகின்றது?
குடும்ப வாழ்க்கைக்கும் இஸ்லாமிய நெறிக்கும் தொடர்பு இருக்கிறதா?
திருமணத்தின் பின் இந்தச் சகோதரிகளின் நிலை மாற்றம் என்ன? எப்படி அமைகிறது?
ஆடை விஷயத்தில் இவர்களின் நடை முறை செயல்பாடு எப்படி அமைகிறது?
மற்றவர்களுக்கு மார்க்கத்தை சொல்லும் நிலை இருக்கிறதா? இல்லையா?
அதிகமான ஆலிமாக்களை தஃவாக் களத்தில் காணமுடியவில்லையே அது ஏன்?
ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்ன? உலக வரலாற்றை கொஞ்சம் பின் நோக்கிப் பார்த்தால் இந்த உலக மக்களின் முன்னேற்றத்திற்கு ஆண்களுக்கு சமனாக பெண்கள் செய்த சேவைகள் கண்முன் கொண்டு வந்து நிருத்தப்படும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடங்கி நாம் வாழும் இந்தக் காலம் வரை இந்த உலகத்தின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் தியாகம் மறைந்திருப்பதை நாம் தெளிவாக அறிய முடிகிறது.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் பெண்களின் நிலை என்ன?
பெண் என்றால் போதைக்காக பயண்படுபவள் என்ற மாயையை உடைத்தெரிந்தது இஸ்லாம்.
பெண்களுக்கும் ஆண்மா உண்டென்று உலகுக்குக் காட்டியது இஸ்லாம்.
வீட்டினுல் முடங்கிக் கிடந்தவர்களை உத்தமர்களாக இந்த உலகுக்கு படம் பிடித்துக் காட்டியது இஸ்லாம்.
பெண்கள் சமுதாயத்தில் இடம் பிடிக்கக் கூடாது என்று பல மார்கங்களும், மதங்களும், சித்தாந்தங்களும் கருத்துச் சொன்ன நேரத்தில்ஸஸ..
பெண்கள் சமுதாயத்தின் கண்கள் என்று பெண்விடுதலைக்கு வித்திட்டது இஸ்லாம்.
வீடு, கணவன், பிள்ளைகள் என்றிருந்தவர்களை கல்வித் துறையில் கல்லூரி வரை உயர்தியது இந்த இஸ்லாம்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய பெண்களின் கல்வி நிலை, ஒழுக்கம், நன்நடத்தைகள் என்று அனைத்தும் கேள்விக்குறியாகியிருப்பதை நாம் காண முடிகிறது.
நாங்களும் சாதித்துக் காட்டுவோம் :
ஆண்கள் கூட கல்வியைப் பற்றிக் கண்டு கொள்ளாத இக்காலத்தில் பெண்கள் தங்கள் கல்விக்காக செய்யும் தியாகங்கள் அதிகம்.
இந்த தியாகங்களை செய்வதற்கு அவர்களுக்கு பின்னனியாக இருப்பது இரும்புக் கோட்டையின் பலத்திற்கு நிகரான ஒரு எண்ணம் தான்.
அதாவது நாங்களும் சாதித்துக் காட்டுவோம் எங்களாலும் முடியும் எங்களை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை நாங்களும் கல்விக்கு வித்திட்டவர்கள் தான் இது தான் ஆலிமாவாக மாறுவதற்கு அவர்களின் உள்ளத்தில் இருக்கும் முதல் எண்ணம்.
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெருவார்கள். (அல்குர்ஆன் 39:09)
கல்வியை கற்பதில் எங்களுக்கும் தகுதியுண்டு ஜாஹில்யத்தை துடைத்தெரிந்த நபிக்கு இறக்கிக் கொடுக்கப்பட்ட வேதத்தில் கற்றவர்களுக்கு கல்வி கற்காதவர்களை விட மிகப் பெரியதொரு அந்தஸ்த்து இருக்கிறது.
அந்த அந்தஸ்த்து எங்களுக்கும் கிடைக்க வேண்டும் நாங்கள் எதையும் கேட்டுத் தெரிந்து அறிந்து அதன்படி தான் நடப்போம்.
கண்மூடிக் கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ள நாங்கள் அபலைகளும் அல்ல எங்கள் அண்னையர் எங்களுக்கு அப்படி வழிகாட்டவும் இல்லை.
இதுதான் அவர்களின் திடமான கொள்கை.
நபியிடத்திலேயே தட்டிக் கேட்டவர்கள் அல்லவா?
இப்னு அபீமுலைக்கா (அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.
(ஒருமுறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”எவர் (மறுமை நாளில் துருவித் துருவி) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்” என்று கூறினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ”அல்லாஹ் (குர்ஆனில்) ‘வலக்கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (84:8) என்றல்லவா கூறுகின்றான்?” என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்இ ”இது (கேள்விக் கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார்” என்று கூறினார்கள். (புகாரி 103)
நபியவர்கள் ஒரு செய்தியைச் சொல்கிறார்கள் அதனை ஒட்டி ஒரு எதிர்க் கேள்வியைக் கேட்டு நபியவர்கள் சொன்ன செய்தியின் உண்மை விளக்கத்தை அவர்களின் வாயிலிருந்தே சொல்ல வைக்கிறார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.
(ஒருசமயம்) பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”(நாங்கள் தங்களை அணுகி மார்க்க விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே எங்களுக்காக (தனியாக) ஒரு நாளை ஒதுக்குங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களித்து அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக் கட்டளைகளை) வலியுறுத்தினார்கள். ”உங்களில் ஒரு பெண் (தனது மரணத்திற்கு) முன்பாக தம் குழந்தை களில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திரி ருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்” என்று கூறினார்கள். உடனே ஒரு பெண்மணி ‘இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்…?’ என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”(ஆம்) இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்” என்றும் அவ்வுரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 101)
நபியவர்களின் வார்த்தைகளில் கூட மேலதிக விளக்கம் வேண்டி கேள்வி கேட்ட அண்ணையர்களின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்?
கேள்வி கேட்டாயினும் நாம் மார்க்கத்தை தெளிவாக அறிய வேண்டும் என்ற எண்ணம் உயிரில் ஊரியிருக்காதா என்ன?
பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.
(மார்க்கத்திற்கு முரனாக செயல்பட்டு பித்அத்களை ஆதரித்து ஒழுக்கம் கெட்டு படித்ததற்கு முற்று முழுதாக மாறு செய்யும் ஆலிமாக்கள் பற்றி தொடரில் தெளிவாக விளக்கப்படும். எதிர்பார்ப்புகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்……..)
source: http://rasminmisc.blogspot.in/2010/09/blog-post_27.html