Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் எது?

Posted on February 11, 2012 by admin

ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் எது?

அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.

உதவுவதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வரலாற்றின் துவக்கக் காலத்திலேயே பெண் அறிந்து வைத்திருந்தாள்.

உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண் ணுக்கும், உலகில் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது.

நல்ல பராமரிப்பாளனாக, நல்ல பாதுகாவலனாக, நல்ல தந்தையாக, நல்ல காதலனாக இருந்து மேற்கண்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்த ஆண் தான் அவளுக்குத் தேவைப்பட்டான். இத்தகைய திறனுள்ள ஆடவனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவளுடைய பாலுணர்வு மட்டுமின்றி, பராமரிக்கும் திறனும், பரிவும் மிகப் பெரிய ஆயுதங்களாக இருந்தன.

பாலின்பத்தையும், பராமரிப்பையும் அந்த காலத்து பெண்கள்தான் தங்களுக்கு சாதகமான ஆயுதமாக பயன்படுத்தினார்கள்.

திருமணத்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ் நிலையில், புதிய மனிதர்களோடு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டுதான் தற்காலத்துப் பெண்ணும் செல்கிறாள்.

புதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்துகளோடு ஒத்துப்போகும் பண்பையும் வளர்த்துக் கொள்கிறாள். தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண்ணம் அகன்று, தன் கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவன் நோக்கமே தனது நோக்கம், அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள்கிறாள்.

தனது கணவன் ஆறுதலாக, சுகமாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சூழலை பெண் உருவாக்கி தனது நிலைப்பாட்டை உறுதிசெய்து கொள்கிறாள். இதன்மூலம் கணவன் தன்னை மீண்டும் மீண்டும் நாடி வரும் நிலையை உண்டாக்குகிறாள்.

தனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவனாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக்கொள்கிறாள்.

பெண் எல்லாவற்றையும் காதலால் அளவீடு செய்பவள். இவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார் என நினைத்துக் கொள்வாள். அவளது விருப்பத்துக்கு மாறாக சிறிது நடந்து கொண்டாலும், நம் மீது இவருக்கு அன்பே இல்லை என முடிவு செய்வாள். ஏனென்றால் பெண் எல்லாவற்றையும் விட காதலுக்காகவே அதிகமாகக் கவலைப்படுகிறாள்.

ஆகவே, ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில் அரவணைப்புக்கு அடுத்து அவள் விரும்புவது காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் தான்.

உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, செயல்படுவது ஆகிய ஒவ்வொன்றையும் தனது தாயின் உண ர்வின்மூலம் ஒவ்வொரு பெண்ணும் இயல்பாகப் பெறுகிறாள்.

ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை செல்வதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக் கொள்கிறது.

வாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது. காதலிக்கவும், காதலிக்கப்படவும் அவளுக்குச் சக்தியை அளிக்கிறது. பிறரை நேசிக்கவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும் திறனை அளிப்பதோடு, ஆண் மகனையும் அவள்பால் கவரச் செய்கிறது.

ஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெருக்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இருந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவரும் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய்விடுகிறாள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் இது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

80 + = 84

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb