ஈரான் அணு சக்தியுடன் தயாராகிவிட்டது
மேலை நாடுகள் ஈரானுக்கு எதிரான படை நடவடிக்கையை தாமதித்துரும் இடைவெளியை பயன்படுத்தி அணுசக்தி தயாரிப்புப் பணியில் ஈரான் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. தமது பணிகள் முடிவடைந்துள்ளன என்று ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஈரான் அணு குண்டை வடிவமைக்கும் புள்ளிக்கு வந்துவிட்டதென அமெரிக்கா அறிவித்துள்ளது.
தற்போதய நிலையில் அணுகுண்டு தயாரிப்பு விவகாரத்தில் ஈரான் ஓர் இராஜதந்திர முடிவுக்கு வராவிட்டால் தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஈரானுக்கு ஆதரவு வழங்கக் கூடிய ரஷ்ய தலைவரான விளாடிமிர் புட்டின் வரும் மார்ச் 4ம் தேதி அதிபர் தேர்தலில் குதிக்கிறார். கடந்த 12 வருடங்களுக்கு முன் தேர்தலில் வென்றது போல ஒரே சுற்றில் இவரால் வெற்றிபெற முடியாதென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பதவி ஆசை வேண்டாம் தேர்தலில் இருந்து ஒதுங்கிவிடு என்று முன்னாள் சோவியத் அதிபர் மிக்கேல் கொர்பச்சேவ் சென்ற மாதம் வேண்டுகோள் விடுத்தும் புற்றின் அதை செவி மடுக்கவில்லை.
அதேவேளை ஈரானுக்கு எதிரான போர் வெடிக்குமானால் அமெரிக்க – இஸ்ரேல் ஏவுகணைகளை வானத்திலேயே தகர்ப்பதற்கான விசேட ஏவுகணை தகர்ப்பு கருவிகளை ரஷ்யா முன்னரே ஈரானுக்கு வழங்கிவிட்டது. ரஷ்ய ஏவுகளை தகர்ப்பு கருவிகள் அமெரிக்க பேட்றியாட் ஏவுகணை தகர்ப்பு கருவிகளை விட சக்தி வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. மறுபுறம், ஈரானுக்கு எதிரான தடைகள் மின்னல் வேகத்தில் வந்து விழுந்து கொண்டிருந்தாலும் அதற்கெல்லாம் ஈரான் அஞ்சுவதாகத் தெரியவில்லை.
பாகிஸ்தான் பள்ளிகளில் சீன மொழியைக் கற்பிக்க முடிவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டு பள்ளிகள் அனைத்திலும் சீன மொழியை கற்பித்தல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிர்தோஸ் ஆசிக் அவான் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது:
சீனா எமது நட்புறவு நாடு. எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கக் கூடியது. சர்வதேச விவகாரங்களில் பாகிஸ்தானையே சீனா ஆதரித்தும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த சீன மொழியை எமது நாட்டில் கற்றுத்தருவது அவசியமானதும் கூட.
இருநாட்டு உறவுகளிடையே மொழி ஒரு முட்டுக் கட்டையாக இருந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். இதனால் எமது நாட்டுப் பள்ளிகளில் சீன மொழியை கற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறோம் என்றார் அவர்.
சீனா சென்றேனும் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் அவர்கள் சொன்னதுதான் இங்கு நினைவுக்கு வருகிறது.
இந்தியர்கள் ‘முகம் பார்ப்பதே’ ஃபேஸ்புக்கில்தான்!
நியூயார்க்: சமூக இணையதளமான ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இன்றைக்கு ஒருவர் முகத்தை ஒருவர் நேரில் பார்க்கிறார்களோ இல்லையோ… பல முறை பேஸ்புக்கில் பார்த்துக் கொள்கிறார்கள்.
இன்றைய இளைஞர்கள் கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பதைவிட பேஸ்புக்கில் பார்ப்பதே அதிகம் என்று கிண்டலடிக்கும் அளவு fஅcஎபோக் அட்டிcடிஒன் அதிகரித்துவிட்டது.
ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டில் இந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் பயன்பாடு 132 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பிரேசிலில் 268 சதவீதமாக உள்ளது.சீனாவில் சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு இதனைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!
பேஸ்புக்கில் இருக்கும் சில விஷயங்கள் படிப்பவர்களை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சவுதி அரேபியாவை சேர்ந்த சவுத் பின் நாசர் அல் ஷாஹ்ரி என்பவர் பேஸ்புக்கில் தனது மகனை விற்க விளம்பரப்படுத்தி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. உலக அளவில் உள்ள தொழில் நுட்பங்களில் கூட பண நெருக்கடி விளையாடுகிறது. அப்படி பண நெருக்கடி ஏற்பட்டதால் இவர் தனது மகனை விற்க முடிவெடுத்தாக கூறி இருக்கிறார்.
இவரது மகனின் விலை 73 மில்லியன் யூஏஇ திறாம்ஸ் (20 மில்லியன் டாலர்) என்று ஃபேஸ்புக்கில் கூறி இருக்கிறார். இது போன்று திகைக்க வைக்கும் சில விஷயங்கள் ஃபேஸ்புக்கில் வெளியாகின்றன.
ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், தனது சொந்த வாழ்கை பற்றி பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் என்று ஃபேஸ்புக்கில் வெளியாகும் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். வீடு இல்லாத ஒரு பெண் மணி தனது வாழ்க்கை சூழலை பகிர்ந்து கொண்டதன் விளைவாக அவருக்கு ஃபேஸ்புக் ஃபாலோவர்கள் மூலம் நிறைய உதவிகள் கிடைத்தது. இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மனிதர் தனது மகனை விற்க தயாராக இருக்கும் இந்த செய்தி, படிப்பவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். இப்படி சோஷியல் மீடியாவின் பயன்பாடு தினம் தினம் வித்தியாசப்படுகிறது. மக்கள் இதன் மூலம் நிறைய பயனடைவார்கள் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.