வெளிநாட்டு உழைப்பும், ஆண்கள் கவனிக்க வேண்டியவைகளும்
o செலவைக் கட்டுப்படுத்துதல்.
o அடுத்தவர்களுக்கு பொருட்களை கொண்டு வருதல்.
o சொத்துக்களை சேமிக்கும் விதம்.
o மனைவி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துதல்.
(வெளிநாட்டில் வேலை பார்க்கும் சகோதரர்களுக்காக இணைய தளம் மூலம் சகோதரர் பி.ஜெ அவர்கள் “வெளிநாடு செல்வோர் கவணத்திற்கு” என்ற தலைப்பில் ஆற்றிய உரையை சகோதரர் ஹிஷாம் M.I.Sc எழுத்து வடிவமாக்கியுள்ளார்.)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அனைத்து சமுதாயத்திற்கும் சோதனை இருந்தது.எனது சமுதாயத்தின் சோதனை செல்வம் ஆகும். (அறிவிப்பவர் : கஅப் பின் இயாழ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (ஆதாரம்: அஹ்மத் 17137)
இன்றைய நாட்டு விலை வாசி அதிகரிப்பின் காரணமாக அதிகமான வருமானம் இருந்தால் தான் குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இன்று நம்முடைய சமுதாயத்தில் அதிகமான மக்கள் வெளிநாட்டிக்கு சென்று உழைத்து வெளிநாட்டு வருமானத்தையே நம்பி இருப்பதை நாம் காணமுடிகிறது.
அவ்வாறு இருந்தாலும் சிலர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளிநாட்டி வருமானத்தையே நம்பி இருக்கின்றார்கள்.எனவே வெளிநாடு செல்லக்கூடியவர்கள் சில விடயங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு உழைப்பை தொடர்ந்தால் அவர்கள் விரைவாக தங்கள் தாய் நாட்டிற்கு வந்து குடுப்பத்துடன் வாழ்கையை மகிழ்ச்சியாக தொடர முடியும் என்ற நம்பிக்கையில் சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்களாம் என்று நினைக்கிறோம்.
முதலில் வெளிநாடு செல்லாமல் தாய் நாட்டில் இருந்தே உழைப்பதற்கு முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.அவ்வாறு முடியாமல் நிர்பந்தமாகும் கட்டத்தில் அங்கு உழைக்கக்கூடியவர்கள் குறிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது.
செலவைக் கட்டுப்படுத்துதல்.
வெளிநாடு சென்று உழைக்கக்கூடியவர்கள் பெரிய தியாகத்தையே மேற்கொள்கின்றனர். நமது நாட்டில் குறைந்த வருமானத்திற்கு தொழில் செய்து கொண்டு இருந்தவர்கள் வெளி நாட்டுக்குச் சென்று உழைக்க ஆரம்பிக்கும் போது பணத்தை வீனாக செலவு செய்வதைப் பார்க்கலாம்.
இதன் விளைவாக வெளிநாட்டில் இருந்து உழைக்கக்கூடிய காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே வெளிநாடு செல்லக்கூடியவர்கள் முதலில் அவர்கள் நினைக்க வேண்டியது என்வென்றால் நாம் பல வருடங்கள் வெளிநாட்டில் கழித்துவிடக் கூடாது. சில குறிப்பிட்ட காலங்கள் மாத்திரம் அங்கு இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பொருளாதாரத்தை உழைத்துவிட்டு தாயகம் சென்று ஒரு சிறந்த தொழிலை ஏற்படுத்தி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.
இந்த சிந்தனையிலே அங்கு இருக்கக்கூடியவர்கள் பணத்தை சேமிக்க முயற்ச்சி செய்ய வேண்டும். அதற்கு எந்த வழிமுறையை கையால முடியும் என்றால் வீட்டுக்கு பணம் அனுப்பும் போது அதிமாக அனுப்பாமல் தாய்நாட்டில் இருக்கும் போது உங்களால் எவ்வளவு உழைக்க முடியுமோ அந்த தொகையையே வீட்டுக்கு அனுப்பி வைக்களாம். அப்படியிருந்தால் நீங்கள் தாயகம் திருப்பிய போதும் உங்கள் குடும்பத்தை சுலபமாக நல்ல முறையில் வழி நடத்தலாம்.
நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது அதிகமாக பணம் அனுப்பி அதிகமாக செலவு செய்ய பலக்கினீர்கள் என்றால் உங்களுக்கு எதிர் காலத்தில் இலகுவாக வாழ்கையை கொண்டு செல்லமுடியும்.எனவே குறிப்பிட்ட தொகையை மட்டும் அனுப்பிவிட்டு மீதியை சேமித்து வைப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். இன்றைக்கு அதிகமானவர்களின் நிலை என்வென்றால் ஒரு தொழிலை ஆரம்பிக்கவேண்டும் என்ற சிந்தனையில் தாயகம் வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் தாயகத்தில் இருக்கின்ற காலத்தில் செலவை கட்டுப்படுத்த முடியாமல் மூலதனமாக வைத்திருந்து பணத்தையும் செலவு செய்துவிட்டு கடனாளியாக மீண்டும் வெளிநாட்டு புரப்படுகிறார்கள். ஆரம்பத்தில் இருந்து மனைவியிடம் செலவை குறைத்துக் கொள்வதற்கு முயற்ச்சிகளை மேற்கொள்ளாமல் இருந்ததுதான் காரணம். எனவே இந்த தகவலை மனதில் பதிந்து கொள்ளவேண்டும்
அடுத்தவர்களுக்கு பொருட்களை கொண்டு வருதல்.
அடுத்ததாக வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் போது குடும்பத்தினருக்கு பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் போது அதிகமான பொருட்களை வாங்கி கொண்டு வந்து அவர்கள் சேமித்து வைத்து இருந்த பணத்தை இழந்து விடுகின்றனர்.இன்றைய காலத்தை பொருத்த அளவில் அனைத்து பொருட்களையும் தாய் நாட்டிலே வாங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் இருக்கின்றன.வெளிநாட்டை விட குறைவாகவே வாங்கமுடியும்.வெளிநாட்டில் இருந்து வரும் போது அடுத்தவர்கள் தன்னை தரக்குறைவாக நினைத்து விடுவாரகள் என்ற எண்ணத்தில் விலை அதிகமாக இருந்தாலும் அங்கு இருந்து வாங்கி கொண்டு வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் உறவினர்களுக்கும் எதாவது கொடுக்கவேண்டும் என்ற பெயரில் அவர்களுக்கு ஆடை வகைகள், வேறு பொருட்கள் பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கி வருகின்றார்கள் அவற்றையும் நமது நாட்டில் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.
இப்படி தேவை அற்ற செலவுகள் பல இருக்கிறன எனவே அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக செலவு செய்யும் பணத்தை சேமித்தால் பெரிய தொகை பணத்தை சேமித்து வைக்கமுடியும். ஆரம்ப காலத்தில் தான் வெளிநாட்டில் உள்ள பொருட்களுக்கு மதிப்பாக இருந்தது இப்போது அனைத்தையும் தாய் நாட்டில் வாங்க முடியும் என்பதனால் பெரிதாக எந்து மதிப்பும் இல்லை. அதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே அங்கு இருக்கக்கூடியவர்கள் குறிப்பிட்ட காலத்தில் பணத்தை திரட்டி விட்டு நாடு திரும்பி ஒரு தொழிலை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வேண்டும்.இல்லை என்றால் வெளிநாட்டிலேயே காலம் கழிந்துவிடும்.
சொத்துக்களை சேமிக்கும் விதம்.
வெளி நாட்டில் உழைக்கக்கூடியவர்கள் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விடுகின்றனர். அதாவது சொத்துக்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமான சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். அது பிழையில்லை ஆனால் எங்கு பிழை செய்கிறார்கள் என்றால் சொத்ததுக்களை வாங்கும் போது தங்கள் மனைவிமார்களின் பெயரிலும் உறவினர்களின் பெயரிலும் வாங்கி விடுகின்றனர். அவர்கள் மீது வைத்துள்ள அதிகப்படியான நம்பிக்கையால் இவ்வாறு செய்து விடுகின்றனர்.
இறுதியில் சொத்துக்கள் மனைவியின் பெயரில் இருக்கின்ற காரணத்தினால் மனைவி கணவனுக்கு கட்டுப்பட மறுக்கிறாள் ஏதாவது ஒன்று என்றால் கணவனை கூட மதிக்காமல் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு கணவனின் சொத்துக்களை சுரையாடிக்கொண்டு சென்று விடுகின்றாள்.
அனைவரும் அப்படி இல்லவிட்டாலும் இன்று பணத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக இவ்வாறு செய்து விடுகின்றனர்.இறுதியில் கணவன் பல வருடங்கள் வெளிநாட்டில் சென்று உழைத்த பணத்தை எல்லாம் இழந்து விட்டு நடுத்தெருவில் நிற்கின்றனர். எனவே அடுத்தவர்களை அதிகமாக நம்பாமல் தன்னையே நம்பி உங்களது பெயரிலேயே சொத்துக்களை வாங்கி கொள்ளுங்கள்.
ஒருவர் நல்லவராக இருந்தாலும் நீங்கள் அவர்கள் மீது வைக்கின்ற அதிகப்படியான நம்பிக்கையின் காரணமாக அவர்கள் வழி தவறி விடுகின்றனர். இன்று அடுத்தவர்களை நம்பி அனைத்து சொத்துக்களையும் இழந்தவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே உங்கள் குடும்பத்தினர்களின் பெயரிலோ உங்கள் நண்பர்களின் பெயரிலோ சொத்துக்களை வாங்கி ஏமாற்றம் அடையாமல் உங்கள் பெயரிலேயே வாங்கி கொள்ளுங்கள்.அனைவரும் நம்பிக்கை மோசடி செய்வார்கள் என்பதல்ல ஒரு பாதுகாப்புக்காக இவ்வாறு பண்ணிக்கொள்ளுங்கள்.
மனைவி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துதல்.
வெளி நாடு செல்லும் போது தங்கள் மனைவியை, மனைவியின் தாயின் வீட்டில் அல்லது யாரும் இல்லா பகுதிகளில் தனியாக விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதன் விளைவாக இன்று பல தவறான காரியங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.மனைவியை கணவனின் தாயார் வீட்டில் விட்டுச் செல்வதால் தவறுகள் நடக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவு. இயற்கையிலே மாமியார் மருமகளை அதிகமாகவே கண்காணிப்பது வழக்கம்.
எனவே அவர்களுக்கும் தவறு செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படாது. மனைவியின் தாயார் வீட்டில் இருக்கும் போது தவறுகள் நடந்தாலும் தன் மகள் என்ற காரணத்தால் அதனை பெரியதாக நினைக்கமாட்டார்கள்.
இன்று பல இடங்களில் கணவன் மனைவியை தனியாக விட்டுச் சென்றதின் காரணமாக தவரான தொடர்புகள் ஏற்படுகின்றன.எனவே தவறுகள் செய்வதற்கு நாம் எந்த விதத்திலும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடாது. வெளிநாடு செல்பவர்களின் மனைவியர் அனைவரும் தவறு செய்வார்கள் என்று கூறவில்லை. சமுக சுழல்தான் ஒருவர் தவறு செய்வதற்கு காரணமாக அமைகிறது அதை நாமே ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது.
அது மாத்திரம் இல்லாமல் மாமியார் வீட்டில் இருக்கும் போது காசை வீனாக செலவு செய்வதற்கும் யோசனை செய்வார்கள். வீனாக செலவு செய்தால் மாமியார் கண்டிப்பார் அல்லது கணவணிடம் சொல்லுவார் என்ற பயம் உள்ளத்தில் இருக்கும்.
எனவே இது போன்ற விஷயங்களை கவணத்தில் கொண்டு வெளிநாட்டில் இருக்ககூடியவர்கள் உழைக்கச் நினைத்தால் தன் குடும்பத்தையும் பாதுகாத்து விரைவாக தன் தாய்நாட்டிற்கு வந்து தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கையை தொடரலாம்.
source: http://rasminmisc.blogspot.in/