Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்களின் கவர்ச்சி உடைகளால் உடைபடும் ஆண்களின் மனசு!

Posted on February 6, 2012 by admin

  

    குட்டை பாவாடைக்கு குட்பை சொல்லவேண்டும்    

இன்று காலையில் எதார்த்தமான ஒரு நிகழ்வைச் சந்திக்க நேர்ந்தது.

“இது ஒரு டிரஸ்சுனு மாட்டிக்கிட்டு, கல்யாண வயசுல நிக்கிற பொண்ணு கடைவீதி வரைக்கும் போயிட்டு வந்துட்டா பாரு” என்று– “நைட்டி”யுடன் கடைவீதி வரை சென்றுவந்த தன்னுடைய மகளை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் அந்தக் கிராமத்துத் தாய்.

நாகரிகம் என்கிற பெயரால் பழங்காலத்துப் பண்பாடுகளை உடைத்துக் கொண்டு வெளியே வருவதற்கு இன்னும் தயங்குகிற கிராமம் அது.

மாற்று சகோதரர்களைப் பொருத்தவரை நைட்டி என்பது அவ்வளவு ஒன்றும் மோசமான உடுப்பு அல்ல. மேலே ஒரு டவலைப் போட்டுக்கொண்டால் கடைவீதி வரை தாராளமாகப் போய்வரலாம். இந்த டிரஸ்சுக்கே இப்படின்னா…..? பட்டனத்துப் பொண்ணுங்க போட்டிருக்கிற டிரஸ்சப் பாத்தா என்ன நடக்கும்?

இந்தக் கிராமத்துப் பண்பாட்டின் எச்சமாக மிச்சம் இருப்பது இன்னும் இது ஒன்றுதான்.

பட்டணத்துத் தெருக்களின் பலஇடங்களில் இதுபோன்ற “ஜில்”லென்ற காட்சிகளைக் காணலாம்.

உடம்பின் பாகங்களை இறுக்கிப்பிடிக்கும் டைட்டான ஜீன்ஸ், ஒப்புக்காக மேலே ஒரு பனியன், அந்த் பனியனின் மார்புப் பகுதியில் நெருப்பைப் பற்றவைக்கும் வாசகங்கள்…

இன்னும் ஒரு சிலர் போட்டிருக்கிற உடைகளோ, போட்டிருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத அளவிற்கு உடம்பின் பெரும்பாலான பகுதிகளை உள்ளே வெளியே என வஞ்சகமில்லாமல் காட்டும்…

அதிலும் சிலர் ‘ஸ்கர்ட்” என்கிற பெயரால் முழங்கால் வரை மட்டுமே அணிந்துவந்து, கால்மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு பண்ணுகிற அவஸ்தை….

சும்மா இருக்கும்போதே சுடுதண்ணி ஊத்துனமாதிரி தவிக்கிற விழிகளை– இப்படி வந்தால் எப்படிக் கட்டுப்படுத்துவது?

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற ஒரு படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு, கவர்ச்சி பொங்கக் குட்டைப் பாவாடை அணிந்து வந்து நடிகை ஸ்ரேயா கலக்கியெடுத்தார். தம்மாத்தூண்டு டாப்ஸ்…. எப்போது நழுவுமோ எனப் பயப்பட வைத்த லூஸ் ஸ்கர்ட்… இதுதான் அந்த விழாவில் நடிகை ஸ்ரேயாவின் உடை.. மேடையில் அவர் குட்டைப்பாவாடையுடன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த விதம், ரசிகர்களிடையே சலசலப்பை உண்டாக்கியதுஸ.. (அது அப்போதைய முதல்வர் கலைஞர் கலந்துகொண்ட நிகழ்ச்சி என்பதுதான் ஹைலைட்). சும்மா விடுவார்களா புகைப்படக்காரர்கள்ஸ சுட்டுத் தள்ளினர் அந்த நடிகையை. நிகழ்ச்சியை சுத்தமாக மறந்துவிட்டு அந்த நடிகையையே சுற்றிச் சுற்றி வந்தனர்.

அதேபோல, வெள்ளை உள்ளாடை வெளியில் தெரியும் அளவுக்குக் குட்டைப் பாவாடை அணிந்து வந்து ரசிகர்களை பாடுபடுத்தினர் மற்ற சில நடிகைகள்.

இவர்களாவது பரவாயில்லை. சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் ஒரு நடிகை. உள்ளாடையே போடாமல் (?) மிகவும் குட்டையான பாவாடையும், முன்னழகு தெரியும் அளவுக்குத் தாராளமான அகலம் கொண்ட மேலாடையும் அணிந்து வந்திருந்தார். நிகழ்ச்சியின் போது தன் ஆடை விலகியதைக் கூடக் கண்டுகொள்ளாமல், நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி அவர் அமர, எதிரிலிருந்த புகைப்படக்காரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ந்தனர்.

பலர் வைத்த கண் வாங்காமல் அவரது ஆடை விலகலையே பார்த்துக் கொண்டிருந்தனர். கேமராக்களின் பளிச் பளிச் ஒளிவெள்ளம்ஸ. அப்படியும் மறைக்கவோ, எழுந்து அப்புறம் செல்லவோ அந்த நடிகை முயற்சிக்கவில்லை. படங்கள் சென்சார் செய்யப்படாமல் அப்படியே இணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் வந்த பிறகு, அதுபற்றி கருத்துக் கூறிய நடிகை “நான் உள்ளாடை அணிந்து வந்தால் என்ன… எப்படி வந்தால் என்ன? இதனால் யாருக்கு என்ன நஷ்டம்… வேலையப் பாருங்கள்…” என்று சிம்பிளாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

இங்கே எல்லா இடங்களும் டென்னிஸ் மைதானம் அல்ல, குட்டைப் பாவாடையுடன் குதித்து ஆடுவதற்கு!

சானியா மிர்சா கூட டென்னிஸ் மைதானத்தில் பெற்ற வெற்றிகளுக்காக மட்டும் பெரிய அளவில் புகழ் பெற்று விடவில்லை. இறுக்கமான குட்டைப் பாவாடை + பனியன் அணிந்து ஆடியதால்தான் அவருடைய பெயர் புயலாகப் பரவியது. மக்கள் ஆர்வமாக ஒருபோதும் அவருடைய விளையாட்டை ரசித்துப் பார்த்தது இல்லை. மைதானத்தில் அவர் செய்கிற சேட்டை, குட்டைப் பாவாடை, உள்ளாடை, நாக்கை உதடு மீது சுழற்றுவது போன்ற அவருடைய மேனரிசத்தைத்தான் ரசித்துப் பார்த்தனர்.

 பள்ளிகள் குட்டை பாவாடைக்கு குட்பை சொல்லவேண்டும்:

இப்போது அங்கேயும் கூட, கட்டாயமாகக் குட்டைப் பாவாடை அணிந்துதான் விளையாட வேண்டும் என்ற சர்வதேச பேட்மிட்டன் சம்மேளனத்தின் அறிவிப்பு– களத்தில் கவர்ச்சியை உருவாக்கும் நோக்கில் உடை விஷயத்தில் கடுமை காட்டுவதாக எழுந்த புகார்களை அடுத்துத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அதுமாதிரி இன்னும்கூட சில குறிப்பிட்ட பள்ளிகளில், மாணவிகளுக்குக் குட்டைப் பாவாடைதான் யூனிபார்மாக இருக்கிறது. பலவகைகளிலும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய அந்தக் குட்டைப் பாவாடை முறையில் இனிமேலாவது மாற்றம் கொண்டுவரவேண்டும். அதன் காரணமாக அவர்கள் படுகிற அவஸ்தை அவ்ர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

குட்டைப் பாவாடைகளை மிகவும் விரும்பி அணிகிற பெண்கள் நிறைந்த இல்ங்கையிலேயே, பொது இடங்களில் பெண்கள் குட்டைப் பாவாடை அணிந்து நடமாடுவதற்குத் தடைவிதிக்கப்போவதாகச் செய்தி வருகிறது.

உலகிலேயே அதிக அளவில் முதலீடு செய்யப்படும் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில்கூட, பணிபுரியும் ஊழியர்கள் மரியாதைக்குரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். கவர்ச்சியாக, செக்ஸியாக. முகம் சுழிக்க வைக்கும் ஆடைகளை அணியக் கூடாது என கட்டுப்பாடுகளை வங்கிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் தங்கள் பின்புறம் எடுப்பாகத் தெரியும்படி குட்டை பாவாடை (ஸ்கர்ட்) அணியக் கூடாது, வெளியே தெரியும் அளவு மிக அடர்த்தியான கலர் உள்ளாடைகளை அணியக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அங்கெல்லாம் அப்படி. ஆனால்ஸ கலாச்சாரத்தில், நாகரிகத்தில், பண்பாட்டில் — தொன்மைமிக்க நம் தேசத்தில்…..?!

அந்தக் கிராமத்துத் தாயை ஒரு நாளைக்காவது பட்டணத்துக்கு அழைத்துவந்து, இந்தப் பண்பாட்டுச் சிதைவுகளைப் பார்க்கச் செய்ய வேண்டும்!.

பள்ளி மாணவிகளை குட்டை பாவாடை அணியச்செய்து அநியாயம் செய்யும் பள்ளிகளை அரசு எச்சரிக்க வேண்டும். ஆசிரியர்களே மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு மாணவிகளின் உணர்ச்சியைத்தூண்டும் உடைகளே காரணமாக இருப்பதால், வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றொர்களின் மனம் குளிர ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கான கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும்.

பெண்களை போகப்பொருளாக பார்க்கத்துடிக்கும் பித்தர்களுக்கு முஸ்லிம் பெண்களின் கண்ணியமிக்க புர்கா கண்களை உறுதுவதில் வியப்பேதுமில்லை! இதோ அவர்களுக்காக…

 

 சிறையில்லை..

 

திணிக்கப்பட்டதாய் எண்ணும்

திரையிட்டக் கண்கள்;

விலகி நின்றுப் பார்ப்பதால்

குறுகலாய் தோணும்!

 

வெட்ட வெளிச்சத்தில்

குட்டைப் பாவாடையில்;

குறுக் குறுக்காதப்

பார்வைகள் – எங்களை

அருவருப்பாய் பார்க்கும்!

 

சுதந்திரமான ஆடையென

எண்ணி விலங்கிடப்பட்ட

பெண் கைதிகள்;

திரைக்குள் இருந்தாலும்

சிறையில்லை எங்களுக்கு!

 

கட்டுப்பட்ட ஆடைகள்

குட்டு வைக்கும் ஆண்களுக்கு;

மூடியிருந்தாலே விழித்துப்பார்க்கும்;

திறந்திருந்தால் கற்பழிக்கும் கண்கள்!

 

என் உரிமை இதுவென்று

முடிவு செய்ய நான் என்ன

உனக்கு அடிமையா;

திறந்துக் காட்டி

உன்னைக் குதுகலிக்க

நான் என்ன மடமையா!

 

எச்சில் ஊறும்

உன் விழிகள்

கொத்திச் செல்லும் பருந்து;

திறந்துக் காட்ட நானில்லை

உனக்கான விருந்து!

 

-யாசர் அரஃபாத்

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

97 − = 91

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb